மிருகத்தின் முத்திரையம் தேவனுடைய முத்திடையும் #2 Long Beach, California, USA 61-0217 1நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், சற்று நேரம் அப்படியே நின்றவா றிருப்போம். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தி யிருக்கையில், இங்கே ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறவர்கள் யாராவது இருப்பார்களோ என வியக்கிறேன். (அவ்வாறு நினைவுகூரப்பட விரும்பினால்) நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துகையில், அது அறியப் படட்டும், 'தேவனே, என்மேல் இரக்கமாயிரும். எனக்கு இன்றிரவு ஒரு பெரிய தேவை உள்ளது' என்று கூறுங்கள். 2எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் எங்கள் இரட்சகராகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், உம்முடைய சிங்காசனத்தண்டை, உம்முடைய மகத்தான இரக்கத்தின் சிங்காசனத்தண்டை நெருங்கி வருகிறோம். இவ்வாறு வரும்படிக்கு அவர் எங்களிடம் கூறின காரணத்தினால் நாங்கள் அந்த வண்ணமாக நெருங்கி வருகிறோம், அப்போது நாங்கள் கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள்ளவும் செய்வோம். அதைச் செய்ய உம்மால் ஆகும் என்று நீர் கூறின அந்த உறுதியின் பேரில் தான் எங்கள் இருதயங்களில் நாங்கள் இளைப்பாற முடியும் என்று அறிந்து கொள்வதற்காக நாங்கள் மிகவும் சந்தோஷமா யிருக்கிறோம். இன்றிரவு நாங்கள் விசுவாசத்தின் மூலமாக ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கிறோம் என்று உணருகிறோம், தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதையும், அது இல்லாதது போல நாங்கள் நடந்து கொள்கிறோம், ஏனென்றால் தேவன் சத்தியத்தையே கூறியிருக்கிறார், அவர் சத்தியத்தை உடையவராயிருக்கிறார் என்றும் அவரே சத்தியமாயிருக்கிறார் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். இப்பொழுதும், தங்கள் கரங்களை உயர்த்தினவர் களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம், கர்த்தாவே, ஒவ்வொரு கரத்தை உயர்த்தினவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம். அவர்களுக்கு என்ன தேவையிருந்தது என்பது உமக்குத் தெரியும். அந்த இருதயத்தில் என்ன இருந்தது என்பது உமக்குத் தெரியும், அவர்கள் தங்கள் கரத்தை உயர்த்தின போதே அவர்களுடைய மனதில் இருந்த அதே நினைவை நீர் அறிந்திருக்கிறீர். நீர் அவர்களுடைய பாவங்களை அகற்றிப் போட்டு, அவர்களுடைய வியாதிகளை நீக்கிப் போட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளை அவர்களுக்கு அருளும், கர்த்தாவே. கூடுமானால், கர்த்தர் இரண்டாம் முறை வருவதைக் காணும்படியாக, அவர்கள் நீடிய நாட்களாய் சந்தோஷத்தோடு இங்கே ஜீவிப்பார்களாக. நாங்கள் இன்றிரவு வார்த்தையைச் சுற்றிலும் ஐக்கியம் கொண்டு, சரியாக எங்களுடைய வாசலிலும், இப்பொழுது எங்களுடைய பட்டணங்களுக்குள்ளும், உலகத்தைச் சுற்றிலும் போய்க்கொண்டிருக்கும் அந்த மகத்தான அற்புதமான காரியத்தின் பேரில் பேசிக் கொண்டிருக்கையில், நீர் வார்த்தையை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, நீர் உமது வார்த்தையை, உமது அபிஷேகத்தை எங்களுக்குக் கொடுத்தருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், தேவனிடமிருந்து வரும் தீர்க்கதரிசன வெளிப்பாடுகளாக அவைகளை எவ்வாறு பேசுவது என்பதை நாங்கள் அறிந்து கொள்வோமாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 3கர்த்தருடைய வீட்டிற்கு வருவதென்பது பெரியதும் மகிமையானதுமான ஒரு காரியம் ஆகும். இங்கே சபையில் நம்முடைய சகோதரன் பன்டெயின் (ஆன்ய்ற்ஹண்ய்) அவர்க ளோடும், நமக்கு இருந்து வருகிற இந்த மகத்தான ஐக்கியத்தில் இருக்கும் உடன் ஊழியக்காரர்களோடும், ஜனங்கள் எல்லாரோடும், பாமர மக்கள் அனைவரோடும், வித்தியாசமான சபைகளிலிருந்தும், ஒவ்வொரு கோட்பாடுகளி லிருந்தும், ஒவ்வொரு மக்கள் இனங்களிலிருந்தும், இனப்பிரிவுகளிலிருந்தும் வந்திருக்கிற ஜனங்களோடும் நாம் இந்தக் கூட்டத்தை மிகவும் ஆனந்தத்தோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றிரவு மேடைக்கு வரும்போது, நான் என்னுடைய நண்பர்களில் சிலரைச் சந்திக்க நேர்ந்தது. நான் இங்கே சகோதரன் ஆல்கட் அவர்களை சந்தித்தேன். அநேக வருடங்கள் (கழித்து) முதல் தடவையாக அவரைக் கண்டேன். நான் கனடாவிலுள்ள எட்மன்டனில் இருந்த போது, முதல் தடவையாக (அவரை சந்தித்தது) எனக்கு ஞாபகமுள்ளது. அந்தக் கூட்டத்தின் போது, நீர் அங்கே எங்களோடு இருந்தீர் என்று நம்புகிறேன். இங்கேயிருக்கும் ஒரு சகோதரன் - ஹாலண்டர், அவரைக் காண்பதும், வழிநெடுக வெவ்வேறு நண்பர்களை சந்தித்ததும் அருமையாக இருந்தது. உங்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். நான் உங்கள் கரத்தைக் குலுக்கி, உங்களுடைய வீட்டிற்கு வந்து எப்படி... என்று பார்க்க எனக்கு நேரம் இருக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். உமது மனைவி அங்கே தேசத்திலேயே மிகச் சிறந்த சமையல் செய்கிறவர்கள் என்று எனக்குத் தெரியும்; நான் அதை அறிவேன். எனவே, நான் அதை நம்புகிறேன். எனவே, உம்மோடு வீட்டிற்கு வர விரும்புகிறேன். ஆனால்... ஏறக்குறைய 14 வருடங்களுக்கு முன்பு கனடாவில் வைத்து அதைப் போன்ற ஏதோவொன்றை நான் கூறினேன் என்று நம்புகிறேன். ஆனால் இந்நாட்களில் ஒன்றில், அந்த மகத்தான ஆயிர வருட அரசாட்சியில் நான்- நான் அதைச் செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், அங்கே நமக்கு அதிக நேரம் உண்டாயிருக்க முடியும், நாம் துரிதப்பட வேண்டியதில்லை, குழந்தைகளுக்கு தீங்கு (எதுவும்) ஏற்படப் போவதில்லை, அங்கே எந்த... ம் இருக்காது. எதுவும் எதற்கும் கெடுதி (ஒன்றும்) செய்யப் போவதில்லை. 4நான்... போய்க் கொண்டிருந்ததைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு-எனக்கு மலைகள் என்றால் பிடிக்கும். ஆயிரவருட அரசாட்சி முழுவதும் (இருப்பதைக்) குறித்து எண்ணிப் பார்க்கிறேன், நான் அப்படியே அந்த மலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து, அவைகளைச் சுற்றிப் பார்க்க சில பத்து இலட்சம் வருடங்களை செலவு செய்ய விரும்புகிறேன். எனக்கு-எனக்கு அது பிடிக்கும். அங்கே வெளியில் அந்த மலைகளில் ஒரு சகோதரிக்கு நான்-நான் எதிர்ப்படுவதைக் குறித்து நினைக்கிறேன். அவள் ஒருக்கால் பத்து இலட்சம் வருடங்களாக அங்கே இருந்து, ஒரு சீமாட்டி எப்படியிருப்பாளோ அப்படியாக, அதன் நெடுகிலும் நடந்து திரிந்து கொண்டிருப்பாள், அது உங்களுக்குத் தெரியும். அவள் ஒரு நாய்க்குட்டியுடன் அல்லது ஏதோவொன்றுடன் இருப்பதைப் போன்று (காணப்படும்), ஆனால் அவளோ ஒரு பெரிய புலியோடு அல்லது ஏதோவொன்றோடு அதனூடாக நடந்து திரிந்து கொண்டிருப்பாள். நான், 'வணக்கம், சகோ தரியே?' என்று கூறுவேன். ஏன், அவள், 'நீங்கள் சகோதரன் பிரன்ஹாம் தானே? ஆமாம், நீர் எப்படியிருக்கிறீர்? உம்மைச் சந்தித்ததில் நிச்சயமாகவே மகிழ்ச்சி' என்பாள். நீங்கள் நேரத்தை எண்ணிக் கொண்டிருந்தால், இப்பொழுது, நேரத்தைப் போன்று அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்குமானால், 'நீங்கள் இங்கே வெளியில் எவ்வளவு காலமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்' என்று கேட்பாள். 'ஓ, சில பத்து இலட்சம் வருடங்களாக அல்லது அவ்வளவு வருடங்களாக இங்கே இருந்து வருகிறேன், (இவ்வாறாக) கொஞ்சமாகத் தான் உலாவி சுற்றித்திரிந் திருக்கிறேன்' என்பேன். ஓ, அது அற்புதமாக இருக்காதா? அது வெறுமனே ஏதோவொரு வகையான மாயக் கனவு அல்ல; அது சத்தியமாயிருக்கிறது. அது உண்மை. அது உண்மையிலும் உண்மை. நாம் எங்கோ ஓரிடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம், நாம் அங்கே போய்ச் சேரும்போது, யாரோ ஒருவராக இருப்போம். நான்-நான் அதை விரும்புகிறேன். 5இப்பொழுது, கடந்த இரவில், நாம் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் இருந்து, தேவனுடைய முத்திரையும் மிருகத்தின் முத்திரையும் என்பதின் பேரில் பேசிக் கொண்டிருந்தோம், நான் அவை இரண்டையும் பொருத்தினேன். தற்செயலாக, நான் சில வேதவாக்கியங்களை எழுதி வைத்திருந்தேன். நான் வெளியில் அவைகளை ஓட்டல் மேஜையில் வைத்தவாறே விட்டு வந்து விட்டேன், பில்லி அவைகளை எடுக்க திரும்பிப் போயிருக்கிறான். மேலும் நான்-நான் மிகத் துரிதமாகப் புறப்பட்டு வந்து விட்டேன். அவன் விசிலடித்து என்னைக் கூப்பிட்டதை நான் கேட்டேன். எனவே நான் இவ்வாறு நினைத்தேன், என்னுடைய வேத வாக்கியங்களை எடுப்பதற்காக அவன் போயிருக்கையில், நான் கடந்த இரவில் பேசின காரியங்களிலிருந்து சற்று ஆராய விரும்பினேன், மேலும் சில அறிவிப்பு களையும் கூட கொடுக்க விரும்பினேன். 6இப்பொழுது, நாளைக்குப் பிரசங்கம் பண்ண மூன்று செய்திகள் என்னிடம் உள்ளன. எனவே... மேலும் நான்... உங்களுடைய பனிப்புகை மூட்டம் (smog) உண்மையிலேயே என்னுடைய தொண்டைக்கு அதிக நன்மையைச் செய்யவில்லை. அது உண்மையாகவே மோசமாகி விடுகிறது. நாளைக் காலையில், கிளிஃப்டன் உணவு விடுதியில் வைத்து முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் காலை உணவுக் (கூட்டத்தில்) அந்த ஒளிபரப்பு எனக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். அது பிராட்வேயில் இருக்கிறது என்று நம்புகிறேன். அது பிராட்வே தெருவில். அங்கே அவைகளில் இரண்டு உள்ளன; இது ஏழாவது (தெருவில்) இருக்கிறது, பிராட்வேயில் வைத்து தான் வழக்கமான காலை உணவுக்(கூட்டம்) நடைபெறுகிறது. நான்-நான் அந்த ஒலிபரப்பில் பேசுகிறேன். அந்த ஒலிபரப்பிற்குப் பிறகு உடனடியாக, எனக்கு இருக்கிறது - நான் அங்கேயிருக்கும் விசுவாசிகளின் சரீரத்திடம் பேச விரும்புகிறேன். அது நாளை காலையில் நடைபெறும். அதன்பிறகு நாளை இரவில், இங்கே இந்தக் கூடாரத்திற்கே திரும்பி வருவோம், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் இந்த சபைக்குத் திரும்பி வருவோம். நாளை இரவில், நாம் கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன். இங்கே இச்சபையில் இது முடிவடையும், நாம் நாளை இரவில் ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருப் போமானால், அது அருமையாக இருக்கும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா? செய்திக்குப் பிறகு-பிறகு, அப்போது ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருக்கலாம். எனவே, நாளை இரவு சரியாக 6 மணிக்கு பையன்களை அனுப்புவேன், அப்பொழுது அவைகள் ஆராதனையின் மற்ற பாகங்களைக் குறுக்கிடாது, அவர்கள் ஜெப அட்டைகளைக் கொடுப்பார்கள், நாம் நாளை இரவில் ஜெப வரிசையை அழைத்து, இப்பொழுது, அங்கேயிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சரீரங்கள் சுகமடைவதற்காக ஜெபிப்போம். 7அதன்பிறகு, முக்கிய அரங்கமாகிய முனிசிபல் அரங்கத்தில் வைத்து ஞாயிறு பிற்பகலில் நடைபெறும். அது ஒரு மகத்தான பெரிய இடம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களோடு சில நண்பர்களையும் அழைத்து வருவீர்கள் என்று நம்புகிறோம், ஏனென்றால் அதில் ஏறக்குறைய 4500 அல்லது அதைப் போன்ற ஏதோ இருக்கைகளைக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். சென்ற முறை நான் அங்கே இருந்தேன். அது ஏறக்குறைய பன்னிரெண்டு, பதினான்கு வருடங்களுக்கு முன்பு இருந்து வந்தது. அந்நேரத்தில் ஒரு மகத்தான கிறிஸ்தவராகிய சகோதரன் சார்லஸ் ஃபுல்லர் அவர்கள் அங்கே ஆராதனைகளை நடத்திக் கொண்டிருந்தார். இங்கே வெளியிலிருந்து வரும் சகோதரன் ஃபுல்லர் அவர்களை உங்கள் எல்லாருக்கும் தெரியும் என்பதில் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ளயாரோ ஒருவர் சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறார் - ஆசிரியர்.ன என்ன? ஞாயிறு இரவில், ஆமாம். ஞாயிறு இரவு ஏழு மணிக்கு, அப்போது தான் என்று நினைக்கிறேன். அதன்பிறகு - இந்த வருகிற ஞாயிறு இரவில் தான் கூட்டங்கள் முடிவடைகிறது. 8அதன்பிறகு நாங்கள் அங்கிருந்து... மேலே வென்ஸ்... விசாலியாவுக்குப் (Visalia) போகிறோம். ஓ, என்னே. இங்கே சுற்றிலுமிருக்கும் இந்தப் பெயர்களில் சில. அவைகள் எல்லாம் அங்கேயிருக்கும் எல்லாமே எ-களைக் கொண்டும், ஏ-களைக்கொண்டும், இந்த பரிசுத்தவானின் (பெயர்கள்) எல்லாவற்றைக் கொண்டும், மற்றும் பரிசுத்தவானின் (நஹண்ய்ற்), இங்கே மேலேயிருக்கும் இந்த சான் ஜோஸ் (என்ற இடத்தைப்) போல. அது அவ்விதமாகத்தான் எனக்கு ஒலிக்கிறது - அவர்கள் என்னிடம் கூறுகின்றனர், அது ஒரு... (நான் பில்லிக்காக காத்துக் கொண்டிருக்கையில்), ஒரு முறை அங்கே மேலே வந்த ஒரு நபரைக் குறித்துக் கேள்விப் பட்டேன். அவர் சொன்னார், அவர் உள்ளே வந்து, அவர், 'சீமாட்டியே, செயின்ட் ஜோஸ் எங்கேயிருக்கிறது என்று நீங்கள் என்னிடம் கூற முடியுமா?' என்று கேட்டார், அவர் ஒரு உணவகத்தில் இருந்தார். 'என்ன?' என்றாள். 'சான் ஜோஸ்' என்றார். 'அப்படிப்பட்ட ஒரு இடம் இல்லை.' 'இதோ அது சரியாக இங்கே வரைபடத்தில் உள்ளதே' என்றார். 'அது சான் ஜோஸ்' என்றாள். அப்போது அவர், 'ஓ' என்றார். அவள், 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டாள் - கேட்டாள். அவர், 'கென்டக்கியிலிருந்து வருகிறேன்' என்றார். அவர், 'நல்லது, இங்கே வெளியே எல்லாமே ஒ- களாகவும், ஏ-களாகவும் உள்ளன' என்றாள். நல்லது, 'கென்டக்கியின் பின்புற பகுதிகளில் நாங்கள் ஒ- ஐ ஒஎன்றும், ஏ-ஐ ஏ என்றும் அழைக்கிறோம். அதை இங்கே வெளியில் எவ்வாறு நீங்கள் அழைக்கிறீர்கள் என்று எனக்கு-எனக்குத் தெரியவில்லை' என்றார், அவர் கூறினார். அவள், 'நீர் வேலை பார்க்கிறீர் என்று எனக்குத் தெரிகிறது' என்றாள். அவர், 'ஆமாம், பெருமாட்டியே' என்றார். 'நீர் எப்போது வேலை முடிந்து இங்கிருந்து போவீர்?' என்று கேட்டாள். அவர், 'ஓ, ஏறத்தாழ ஹூன் (Hune) அல்லது ஹூலை (Huly) மாதத்தில், அதில் ஒன்றில் போவேன் என்று நினைக்கிறேன்' என்றார். அவன் மிக வேகமாக பிடிக்கப்பட்டு விட்டான். அது ஜூன் அல்லது ஜூலையாக இருந்தது, அவனோ, 'ஹூன் அல்லது ஹூலை' என்றான். எனவே, இந்த எல்லா ஸ்பெயின் நாட்டுப் பெயர்களும், நான் அவைகளைக் குறித்து முழுவதுமாக குழப்பமடைந் துள்ளேன். 9எனவே... ஆனால் இதுவோ வென்-... இது அங்கே மேலே இருக்கிறது. ஃபிரஸ்நோவுக்கும் (Fresno) பேக்கர்ஸ் பீல்டுக்கும் (Bakersfield) இடையில் ஏதோவொரு இடமாக இருக்கிறது. பிறகு, நாங்கள் அங்கே மேலேயிருக்கிற ஊழியக்கார குழுவின(ரிடமிருந்து), அதை நடத்துவதற்கான பண உதவியைப் பெற்றுள்ளோம், 22ம் தேதி தொடங்கி, ஞாயிறு முடிய ஐந்து இரவுகள் நாங்கள் (கூட்டங்களை) உடையவர் களாயிருக்கிறோம். உமக்கு நன்றி. எனக்கு ஐந்து இரவுகளில் ஆராதனைகள் உண்டு. மேலும் நாங்கள்... அங்கே மேலே சுற்றிலும் உங்களுடைய நண்பர்களில் யாராவது இருந்தால், நல்லது, அவர்கள் வந்து எங்களை சந்திக்கும்படியாக நாங்கள் அவர்களைக் கொண்டிருக்க மகிழ்ச்சியாயிருப்போம். அவர்கள் வருவதை நாங்கள்- நாங்கள் பாராட்டுவோம். இப்பொழுது ... நான்-நாங்கள் இங்கிருந்து போகும்போது, இப்பொழுது நீங்கள் சபைக்கு வருவதை நிறுத்திக் கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை; நீங்கள் தொடர்ந்து வர வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம்; எப்படியும் தொடர்ந்து வாருங்கள். நான் இங்கே சுற்றிலும் வசித்திருந்தால், நான் - ஒருக்கால் அநேகமாக இதுதான் சரியாக இங்கே தான் என்னுடைய சொந்த சபையாக இருந்திருக்கும். நான் இங்கே வசித்திருந்தால், இங்கே தான் வந்திருப்பேன். நான் இதை விரும்புகிறேன்; இது ஒரு அற்புதமான சிறிய சபையாய் உள்ளது; இது இங்கேயிருக்கும் ஒரு அன்புநிறைந்த சிறிய மேய்ப்பரைக் கொண்டுள்ளது. முழு சுவிசேஷத்தையும் பிரசங்கம் பண்ணுகிற எந்த மனிதனாயிருந்தாலும், நான் அங்கே அதன் ஒரு பாகமாக இருப்பேன் என்பதில் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன், ஏனென்றால் அதைத்தான் நான் விசுவாசிக்கிறேன். மற்றவர்கள் யாருக்கும் விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது, ஆனால் எனக்கு, என்னுடைய-என்னுடைய ருசியும், நான் கூடுகிற சபையும் அதுவாகத்தான் இருக்கும். 10இப்பொழுது, இந்த அறிவிப்புகளை மறந்து விட வேண்டாம்: நாளைக் காலையில் கிளிப்டன்ஸ் உணவு விடுதி (Clifton's Cafeteria). அங்கே மேலே இருக்கிற நீங்கள், அல்லது அதைச் சரிசெய்து விடுங்கள், நான் நினைக்கிறேன்... ஒரு நேரடி ஒலிபரப்பு சென்று கொண்டிருக்கிறதா, அல்லது அது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதா, அல்லது உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு நேரடி ஒலிபரப்பாக இருக்கிறது, மேலும் நாளை காலையிலும் (இருக்கப் போகிறது.) அது எந்த வானொலி நிலையத்தின் வழியாக வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அப்படியானால் இங்கேயிருக்கும் இந்தச் சகோதரனுக்கு (அது தெரியும்) என்று நினைக்கிறேன், சகோதரனே, உங்களுக்கும் கூட ஞாயிற்றுக் கிழமையில் இங்கே ஒரு ஒலிபரப்பு இல்லையா, அல்லது ஒலிபரப்பு இருக்கிறதா? இல்லை, ஒலிபரப்பு கிடையாது. மற்ற ஊழியக்காரர்கள், எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிற இந்த அருமையான ஊழியக்கார குழுவை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் - இங்கே இந்தக் கூட்டங்களுக்கு அவர்களுடைய ஜனங்களில் அநேகர் வருகிறார்கள். இந்த மனிதர்களை நான்-நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். நான் இங்கே அவர்களிடம் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். நான்- -நான் கடினமாக முயற்சி செய்து, நகராட்சி அரங்கத்தில் நடக்கிற இந்தக் கூட்டத்தை எடுத்துக் கொள்வதைக் குறித்து என்னுடைய விலையேறப்பெற்ற சிறிய நண்பரிடம் பேசினேன்; நான் அவ்வாறு செய்தேன். ஆனால் ஜனங்கள் நின்று கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது என்று கூறியும், மற்றவைகளைக் குறித்தும் அவர் ஜனங்களுக்காக இரக்கமான உணர்வைக் கொண்டிருந்தார். ஆனால் சகோதரனே, எனக்கு அது விருப்பமில்லாததற்கான காரணம் இதோ இருக்கிறது. இப்பொழுது, நான் இந்த ஸ்தாபனங்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருப்பதாக நீங்கள் சிலசமயங்களில் கேள்விப்படுகிறீர்கள், ஆனால் அந்த ஸ்தாபனங்களில் இருக்கிற மனிதர்களை நான் அவ்வாறு செய்வதில்லை. அது- அது அப்படியே அந்த ஸ்தாபனங்களைத் தான். இப்பொழுது, நான் இதை உணர்ந்து கொள்ளுகிறேன், நாம் நாளை இரவில் அங்கே போவோமானால், அது - என்னவாக இருக்கும்... நாம் ஊழியக்காரர்கள் எல்லாரோடும் முழு ஒத்துழைப்பைக் கொண்டிருந்தால், அங்கே போவதென்பது அருமையாக இருக்கும். அது உண்மை. ஆனால் அல்லது, நான் ஞாயிற்றுக் கிழமையைத் தான் பொருட்படுத்திக் கூறுகிறேன், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான்-நாம் முழு ஒத்துழைப்பைக் கொண்டிருந்தோமானால், எல்லா ஊழியக்காரர்களும், தங்கள் சபைகளையும் மற்றவைகளையும் மூடி விடுவார்கள். ஆனால் அங்கே போவதற்கு, ஜனங்களில் சிலர் வியாதியஸ்தரா யிருந்து, ஜெபிக்கப்படுவதற்காக வரப் போகிறார்கள், ஒருக்கால் அந்த ஊழியக்காரர்களுக்கு அது முன்கூட்டியே தெரியாமலிருந்திருக்கும், எனவே அவர்கள் அந்த இரவுக்காக தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களை வைத்திருந்தார்கள். சகோதரர்களே, அதைச் செய்ய எனக்கு—எனக்கு விருப்பமில்லை, நான்... அது நேர்மையானதாக இருக்கிறது. அதைச் செய்ய நான்-நான் விரும்புவதில்லை, ஏனென்றால், எல்லாவற்றிற்கும் பிறகு, இருபுறமும் இருக்கிற இந்த நீட்டமான எல்லா கம்பளங்களும், அது உங்களுக்குத் தெரியும். அது உண்மை. 11நான் அவ்வாறு செய்தால், நான் எதற்காவது மரியாதை வைத்திருக்கிறேன் என்றால், அது தேவ மனிதர்களைத் தான், தேவனுடைய ஊழியக்காரர்களைத் தான். சிலசமயங்களில் உலகத்திலேயே மிகவும் சந்தேகம் நிறைந்தவர்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்றால், அது பிரசங்கிமார்கள் தான். அது உண்மை. இவர்கள் தான் அவர்கள் எல்லாரிலும் அதிக சந்தேகம் பிடித்தவர்கள். ஆனால் அது ஏனென்று நான்-நான் கூற விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் ஆடு மேய்ப்பவர்களாயிருக்கிறார்கள். அது உண்மை. அவர்கள் தங்கள் ஆடுகளை காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் (பாருங்கள்?); அவர்கள் சந்தேகப்பட்டு, பொறுத்திருந்து, விழிப்புடன் இருக்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் வார்த்தையும் தேவனும் ஒன்றாக கிரியை செய்து கொண்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதனோடு அதற்குள் செல்ல அதுவே நேரம் (உங்களுக்குப் புரிகிறதா?), வார்த்தையும் தேவனும் ஒன்றாக வருவதை நீங்கள் காணும் போது. எனவே அது அவ்வாறு அங்கே இருந்ததற்கான காரணத்தை ஊழியக்கார சகோதரர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன், ஏனென்றால் ஒருக்கால் அது ஜனங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்து, அவர்கள் எல்லாருமே அமர்ந்திருக்க வேண்டுமென்று அந்த சகோதரன் எண்ணியிருக்கக்கூடும். அவருடைய இருதயம் சரியாக அதன்பேரில் இருக்கிறது; அவர் என்ன கருதுகிறார் என்று எனக்குப் புரிகிறது. ஆனால் எனக்கோ, நான் இதோ சரியாக இங்கே சபையிலேயே தரித்திருந்து தொடர்ந்து போக விரும்பினேன். ஆனால் அங்கே ஞாயிறு இரவில் அனேகர் திரும்பிப் போய் விட்டதாகவும், அதன்பிறகு சுகமளிக்கிற ஆராதனைகளுக்காகவும் கூட அறிவிப்பு கொடுக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார், அப்படியானால் அது சற்று கூடுதல் ஜனங்களை வரும்படி செய்யும். 12எனவே இப்பொழுது, நாளை இரவில், கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு ஆறு மணிக்கு, நாம் ஒரு-ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருப்போம். எனக்கோ, நான் அதைக் குறித்து எவ்விதம் உணருகிறேன் என்றால், நாம் ஒவ்வொரு இரவும் ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருக்கி றோம் என்பதே. பாருங்கள்? ஏனென்றால், 'விசுவாசிக்கிறவர் களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.' ஒரு இரவு அல்ல, கடந்த மூன்று நான்கு இரவுகளாக, ஆனால் பரிசுத்த ஆவியானவர் கூட்டத்திற்குள் நம் மத்தியில் வந்து, வெளியிலிருக்கும் ஜனங்கள் மத்தியில் சென்று, அவர்களை அழைத்து, அவர்கள் யார் என்றும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்றும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும், மேலும் மற்றவைகளையும், என்ன தவறு இருக்கிறது என்றும், என்ன சம்பவிக்கும் என்றும், அதைப் போன்ற எல்லாவற்றையும் அவர்களிடம் கூறுகிறார். அப்படியானால் ஜனங்கள் - ஜனங்களுடைய விசுவாசம் அதிகரிக்கிறது, மேலும் நான், 'இங்கேயிருக்கும் எத்தனை பேர் விசுவாசி களாயிருக்கிறீர்கள்?' என்று கேட்க, கட்டிடம் முழுவதும் கரங்கள் உயர்த்தப்படுகின்றன. 'இப்பொழுது, உங்கள் கரங்களை யாரோ ஒருவர் மேல் வையுங்கள். நீங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டாம், ஆனால் அவர்களுக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள்.' பாருங்கள்? நல்லது இப்பொழுது, அது வேதப்பிரகாரமாக இல்லை என்றால், எனக்கு அது தெரியாது. 'உங்கள் தப்பிதங்களை ஒருவருக் கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சுகமடைவார்கள்.' புரிகிறதா? அது வேதவாக்கியமாயுள்ளது. எனவே ஒவ்வொரு இரவும் அவ்விதமே நான் உணருகிறேன், ஜெபத்திற்காக (வரும்) ஒவ்வொரு நபரின் மேலும் கரங்களை வைத்திருக்கிறேன், நான் ஒவ்வொரு இரவிலும் அவ்விதமே செய்கிறேன். இப்பொழுது, என்னுடைய கரங்கள் வேறு யாருடைய கரங்களைக் காட்டிலும் மேலானது அல்ல. அது அப்படியே - அது வெறுமனே வேறொரு மனிதன். ஆனால் தேவனுடைய கரத்தைத் தான் உங்கள் மேல் (வைக்க) நீங்கள் விரும்புகிறீர்கள். அவர்... செய்திருக்கிறார். வாக்குத்தத்தம் பண்ணினவர் தேவனே. 'நீங்கள்... விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் வியாதி யஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சொஸ்தமடைவார்கள்.' அதுதான் சரியாக தேவன் வாக்குத்தத்தம் பண்ணினது. பிறகு அங்கிருந்து, நாம் சரியாக அங்கிருந்து தான் அதை பின்பற்றி வருகிறோம். 13இப்பொழுது, நம்முடைய வேதவாக்கியத்திற்கும் நம்முடைய பாடத்திற்கும் திரும்பி வருவோம். சகோதரன் பார்டர்ஸ் அவர்களே, நீர் வேதவாக்கியத்தை வாசித்து விட்டீரா? சரி, வேதாகமம் வாசிக்கப்படுவதைக் கேட்பது எனக்குப் பிடிக்கும். நான் சரியாக வெளிப்படுத்தின விசேஷம் 7-ம்அதிகாரத்திற்குத் திருப்பி இருக்கிறேன், நாம் இன்றிரவு பெரும்பாலும் அங்கிருந்து தான் பேசப் போகிறோம் என்று நினைக்கிறேன். இப்பொழுது, கடந்த இரவு பேசினதை மறுபடியும் சற்று பார்ப்போம். இப்பொழுது, நம்முடைய பாடமானது இந்த... நாம் கொண்டிருந்தோம் - முதலில் நமக்கு சுகமளிக்கிற ஆராதனைகள் உண்டாயிருந்தன, பிறகு சுவிசேஷ பிரசங்க ஆராதனைகளுக்குள் சென்றோம், இப்பொழுது போதிப்பதற்கு நமக்கு இரண்டு இரவுகள் கிடைத்தன; நாளை இரவும் ஞாயிறு இரவும் சுகமளிக்கிற ஆராதனைகள் இருக்கின்றன. இப்பொழுது, மிகவும் முக்கியமானதென்று நான் எண்ணியிருந்த இரண்டு பாடங்களின் பேரில் நாம் சென்ற இரவு போதிக்கத் துவங்கினோம். இது இன்றியமையாதது என்று நான் நினைத்திராவிட்டால், நான் இவைகளைக் குறித்து எதையும் கூறியிருக்க மாட்டேன். பாருங்கள்? முதலாவது காரியம் என்னவென்றால், சபையை எச்சரிக்கை செய்வதற் காகத்தான். அதற்காகத் தான் ஜாமக்காரன் கோபுரத்தின் மேல் நிற்கிறான். சத்துரு வருவதை அவன் காணும் போது, அவன் பட்டணத்தில் இருப்பவர்களை எச்சரிக்கிறான். அப்போது ஜாமக்காரன் எச்சரிக்கை செய்யாவிட்டால், அந்தப் பட்டணத்தின் இரத்தப்பழியை தேவன் அவன் கையில் கேட்பார். அது உண்மை. ஆனால் அவன் எச்சரிக்கை செய்தும் ஜனங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றால், அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் மேலேயே இருக்கும். ஆகையால் தான் நான் அப்படியே - அப்படியே இங்கே எழுதப்பட்டிருக்கும் விதமாகவே அதை ஆயத்தப்படுத்துகிறேன். புரிகிறதா? அப்படியானால் அது உங்களைப் பொறுத்தது, நியாயத்தீர்ப்பின் நாளிலே, நான் விரும்புகிறேன் - நான் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும் போது, நான் அப்பொழுதும் சுயநினைவோடு இருந்தவாறே, மரித்துக் கொண்டிருப்பேன் என்றால், பவுலைப் போல், 'நான் அறிந்துள்ள வரையில், தேவனுடைய ஆலோசனைகள் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், முழுவதையும் உங்களுக்கு அறிவித்தபடியால், யாருடைய இரத்தப்பழியும் என் கரங்களின் மேல் இல்லை' என்று கூற இயலும்படியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அப்படியே அந்தவிதமாக இருக்கவே விரும்புகிறேன். கருத்துக்கள் மற்றும் காரியங்களைக் கொண்ட உங்களுடைய கடிதங்களுக்காக உங்களுக்கு நன்றி, நான் அவைகளை நிச்சயமாகவே மிகவும் பாராட்டுகிறேன். 14இப்பொழுது, மிருகத்தின் முத்திரையும் தேவனுடைய முத்திரையும். இப்பொழுது, சென்ற இரவு எத்தனை பேர் இங்கேயிருந்தீர்கள்? வகுப்பில் இருந்தவர்களை நாம் பார்ப்போம். ஓ, ஏறக்குறைய எல்லாருமே இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். சரி. இப்பொழுது, எனவே அதனோடு கூட இன்றிரவு நாம் (பேசப்) போகிற இடத்தைக் குறித்த ஒரு சிறு பின்னணியைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு... இப்பொழுது, நான் அந்த இரண்டு பாடங்களையுமே எடுத்துக் கொண்டு, அவைகளை ஒன்றாக இணைக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அவைகள் ஒன்று மற்றொன்றுக்கு இணையாகச் செல்கிறது. நாம் கண்டு கொண்டோம்... அவைகள் ஆதியிலே இருந்தது என்று நான் எண்ணியிருந்ததை (உங்களுக்கு) அறிவித்தேன், மேலும் இப்பொழுது வேதவாக்கியத்தைப்பயன்படுத்தி இது சரிதான் என்று நான் எண்ணுவதை நிரூபித்துக் காட்டு(கிறேன்). தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்த ஆவி என்று நினைக்கிறேன். வேதாகமம் அதை ஆதரிக்கிறது. மிருகத்தின் முத்திரை என்பது பரிசுத்த ஆவியைப் புறக்கணிப்பதாகும். அங்கே இரண்டு வகையான ஜனங்கள் மாத்திரமே உண்டு. இரட்சிப்பின் பக்கம் இருக்கும் ஜனங்களும், (அதைப்) புறக்கணிக்கிறவர்களும் தான், மற்ற ஒவ்வொன்றும் துவங்கினது போன்று இவையும் ஆதியாகமத்திலேயே துவங்கினது. 15'அசெம்பிளிஸ் ஆப் காட் (Assemblies of God) ஆதியாகமத்திலேயே தொடங்கினது என்பதை உம்மால் நிரூபிக்க முடியுமா?' என்று எழுதப்பட்டிருந்த ஒரு குறிப்பு இன்று எனக்குக் கிடைத்தது என்று நினைக்கிறேன். அந்த ஸ்தாபனத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் அசெம்பிளிஸ் ஆப் காட்-ல்இருக்கும் ஆவி ஆதியாகமத்திலேயே தொடங்கி விட்டது. அது முற்றிலும் உண்மை. மற்ற எல்லா மறுபடியும் பிறந்த சபைகளும் ஆதியாகமத்தில் தான் தொடங்கின, நிச்சயமாகவே எல்லா சபைகளும், வெறும் பெயரளவிலான சபைகளும், அவைகள் ஆதியாகமத்தில் தான் தொடங்கின. அவைகள் இரண்டுமே முதல் இரண்டு குமாரர்களாகிய காயீன் ஆபேல் இருவரையுமே பிரதிநிதித்துவப்படுத்தின. காயீன் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொண்டு, தூரமாக அனுப்பப்பட்டான். அவனுடைய - அவனுடைய தாயை வஞ்சித்தவனாகிய அந்த சர்ப்பமானது ஒரு மிருகமாக இருந்தது, ஊர்ந்து செல்கிற ஒன்றாக அல்ல என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டோம். அவன் பூமியின் (ச்ண்ங்ப்க்) மிருகங்கள் எல்லாவற்றிலும் அதிக தந்திரமுள்ளவனா யிருந்தான். ஆதியாகமம் 14-ல் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், ஆதியாகமம் 4:15ல், தேவன் அனுப்பினார் - தேவன் காயீனை அடையாளமிட்டார். காயீன் அடையாள மிடப்பட்ட உடனே, அவன் கர்த்தருடைய சந்நிதியை விட்டு வெளியே போய் விட்டான். இப்பொழுது சென்ற இரவில் நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் அதை வாசித்தீர்களா? முத்திரை வந்தவுடனே, அவன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டுச் சென்று, நோத் என்னும் தேசத்திலிருந்து தனக்கு ஒரு மனைவியைப் பெற்றுக் கொண்டான் (took). இப்பொழுது, உங்களுக்கு அது புரிகிறதா? அது எப்படி என்று விளங்கிக் கொண்டீர்களா? சபையானது... இப்பொழுது, தேவன்... 16காயீன் வெறுமனே ஒரு சாதாரண மனிதனைப் போலவே இருந்தான். அவன் எழும்பி வருகிறான். அவன் அப்படியே ஏசாவையும் யாக்கோபையும் போல இருந்தான்; நம்மால் மறுபடியுமாக அங்கேயிருக்கும் அவர்களை மாதிரியாக அமைக்க முடிந்தது. வேதாகமம் முழுவதும் அந்த ஆவி அசைந்து கொண்டே, வந்து, (தொடர்ந்து) வந்து, கடைசியாக நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் சரியாக இங்கேயிருக்கும் தலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், காயீன், ஏசாவைப் போன்று, உலகத்திலுள்ள ஒரு மனிதனாக, இயற்கையான ஒரு மனிதனாக இருந்தான். மேலும்-மேலும் அவன் பக்தியில் நாட்டங்கொண்டவனாயிருந்தான். எனவே அங்கே ஒரு தேவன் இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான்; அவன் அதை விசுவாசித்தான். அவன் சென்று... இப்பொழுது, பாருங்கள், அங்குதான், 'உங்களால் செய்யக் கூடிய ஒரே காரியம் என்னவென்றால், வெறுமனே விசுவாசிப்பது தான், தேவன் அதையே நீதியாக ஏற்றுக் கொள்கிறார்' என்று கூறுகிற சபைகளோடு நான் ஒவ்வாமல் வித்தியாசப்படுகிறேன். நல்லது, ஒரு விதத்தில் அது-அது உண்மை தான்; அதில் பகுதியே சத்தியமாயுள்ளது, ஆனால் முழுவதும் சத்தியமல்ல. சமீபத்தில், அருமையான பாப்டிஸ்டு சகோதரன் என்னிடம் வந்து, 'சகோதரன் பிரன்ஹாமே, ஆபிரகாமால் விசுவாசிப்பதைக் காட்டிலும் மேலானதாக எதைச் செய்ய முடியும்? ஆபிரகாம் விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதே' என்றார். நான், 'அது சரிதான். ஆனால் அவனுடைய விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டதற்காக ஒரு அடையாளத்தை, விருத்தசேதனம் என்ற அந்த முத்திரையை தேவன் அவனுக்குக் கொடுத்தாரே' என்றேன். 17இப்பொழுது, பரிசுத்த ஆவியே தேவனுடைய முத்திரையாக உள்ளது. இப்பொழுது, நீங்கள் விசுவாசிப்ப தாகக் கூறியும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், தேவன் இன்னுமாக உங்கள் விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அது உண்மை. ஏனென்றால் தேவன் உங்களில் தம்முடைய கிரியையை நிறைவேற்றி முடித்து விட்டார் என்பதன் அங்கீகாரமே முத்திரையாக இருக்கிறது, (அது உண்மை), அவர் ஏற்றுக்கொண்டு விட்டார், நிச்சயமாக. யாரோ ஒருவர்,'சகோதரன் பிரன்ஹாமே, பரிசுத்த யோவான் 5:24 கூறுவதை ஏன் அதிக கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறீர்?' என்று கேட்டார். அதுதான் அந்த ஆவியின் துவக்கமாக உள்ளது. அது சரியே. ஒரு மனிதனாகிய நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவுடனே, அது பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாக உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் பரிசுத்தமாக்கப்படும் போது, பரிசுத்த ஆவியின் வேறொரு பாகம் உங்களைச் சுத்திகரிக்கிறது. அதன்பிறகு தான் நீங்கள் பரிசுத்த ஆவியால் நிறையப்படுகிறீர்கள். அது சரியே. இப்பொழுது, 'ஆனால் என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.' அங்கே ஒரே ஒரு வகையான நித்திய ஜீவன் தான் உண்டு; அதுதான் தேவனுடைய ஜீவன். 18இப்பொழுது, நாம் காயீனைக் கவனிக்கிறோம், அவன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதன்மேல் பலியை வைத்தான். பிறகு அவன் முழங்கால்படியிட்டு, தேவனிட முள்ள தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிட்டு, தேவனை ஆராதித்தான். வேறு வார்த்தைகளில் கூறினால், அப்படியே இன்றைக்குள்ள இந்த பக்தியுள்ள மனிதனைப் போன்று. பெரும்பாலும் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது (சதவீதம்) பேர், அவர்கள், 'இதோ அது இருக்கிறது' என்று கூறுகிறார்கள். 'இதுவே என்னால் செய்ய முடிந்த சிறந்தது' என்று காயீன் கூறினான். 'இது... நான்-நான்-நான் ஒரு பலிபீடத்தைக் கட்டினேன். நான் இங்கேயுள்ள இந்தச் சபையைச் சேர்ந்தவன். நான் ஒரு பலி செலுத்தினேன். என்னால் செய்ய முடிந்த சிறந்தது இதுவே; இதை ஏற்றுக்கொள்ளும் அல்லது இதை விட்டு விடும். அதோ அது இருக்கிறது.' அதுதான் அப்படியே - அதுதான் இன்றும் ஜனங்களுடைய மனப்பான்மையாக உள்ளது. 'நான் சபைக்குப் போகிறேன், நான் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்கிறேன். நாங்கள் ஒரு அருமையான கட்டிடத்தைக் கட்டியிருக்கிறோம். நாங்கள் இந்த எல்லாவற்றையும், அந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறோம், எல்லாவற்றையும் செய்திருக்கிறோம். நான் விதவைகளுக்கு பண உதவி செய்திருக்கிறேன், நான் இவை எல்லாவற்றையும் செய்கிறேன். அதோ அது இருக்கிறது, இதுதான் என்னால் செய்யக்கூடிய சிறந்தது, இதை ஏற்றுக்கொள்ளும் அல்லது இதை விட்டு விடும்.' ஆனால் தேவன் அதைப் புறக்கணித்து விடுவார். அவர் அங்கே காயீனுடையதையும் புறக்கணித்து விட்டாரே; அவர் அங்கு உங்களுடையதையும் புறக்கணித்து விடுவார். 'மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழி.' தேவனால் அருளப்பட்ட ஒரே ஒரு வழி தான் உண்டு, அதுதான் பரிசுத்த ஆவியானவரை நோக்கி ஓடும் குருதி ஓட்டத்தின் கீழிருப்பதாகும். அது இல்லை என்றால், நீங்கள் முடிந்து விட்டீர்கள், நீங்கள் முடிவடைந்து விட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் உள்ளே போக மாட்டீர்கள். 19கவனியுங்கள், 'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவனால் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது.' அது உண்மை. நீங்கள் கட்டாயம் வந்தாக வேண்டும். நீங்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருந்தாலும், நீங்கள் என்ன வெல்லாம் செய்திருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. அது உங்களை மிகவும் நல்ல பிரஜையாக ஆக்குகிறது, ஆனால் அங்கேயுள்ள அந்த இராஜ்யத்தின் பிரஜையாக அல்ல, ஒருக்கால் இங்கேயுள்ள இந்த இராஜ்யத்தின் பிரஜையாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது; நீங்கள் அந்த இராஜ்யத்தில் பிறந்திருக்கிறீர்கள். இராஜ்யம்...க்குள் வருகிறது. தேவனுடைய இராஜ்யம் என்பது பரிசுத்த ஆவியாயிருக்கிறது; நீங்கள் அந்த இராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் தான் ஸ்திரீகள் தங்களுடைய மயிரைக் கத்தரித்துக் கொள்வதில்லை, அவர்கள் குட்டை உடைகளை அணிவதில்லை. ஆகையால் தான் மனிதர்கள் சிகரெட்டுகளையும் அதைப் போன்ற காரியங்களையும் புகைப்பதில்லை. அவர்கள் பரத்திலிருந்து வந்தவர்கள், அவர்களுடைய ஆவி நீதியையும் பரிசுத்தத்தையும் அவர்களுக்குப் போதிக்கிறது. அவர்கள்-அவர்கள்ஆணை யிடுவதில்லை; அவர்கள்-அவர்கள் மோசமான வார்த்தைகளையும் காரியங்களையும் உபயோகிப்பதில்லை, ஏன்? அவர்கள் பரத்திலிருந்து பிறந்தவர்கள். அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்கள் பரத்திலிருந்து வந்த பிரஜைகள். 20இப்பொழுது, கவனியுங்கள். ஆனால் உலகமோ, அவர்கள், 'நல்லது, நான் சபையைச் சேர்ந்தவன். நான் அசெம்பிளிஸ் சபையைச் சேர்ந்தவன். நான் நான்குசதுர (Foursquare) சபையைச் சேர்ந்தவன். என்னால் செய்யக்கூடிய சிறந்த காரியம் அங்கே தான் இருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது அதை விட்டு விடும்' என்று கூறுகிறார்கள். நீங்கள் ஒரு தட்டு சூப்பை எடுத்து, அதில் ஒரு சிலந்தி கிடந்தால், அதைப் புசிக்கவே மாட்டீர்கள். அதை உங்களுக்குக் கொடுத்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுப்பீர்கள். அது உண்மை. அது சரியே. நீங்கள் அதைச் செய்வீர்கள். நீங்கள் எதற்காகவும் அதைப் புசிக்கவே மாட்டீர்கள். ஆனால் அப்படியே எந்தவிதமான ஒரு பழைய மதக்கோட்பாட்டையும் உங்கள் கழுத்துக்கு கீழாக உங்கள் ஆத்துமாவில் கடந்து செல்ல அனுமதிக்கிறீர்கள். அவை எல்லாவற்றிற்கும் பிறகு, எப்படியும் அந்த சரீரம் மரிக்கத்தான் போகிறது. அது உண்மை. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு பொருட்காட்சி சாலையில் இருந்தேன், அவர்கள் ஐம்பது பவுண்டுகள் எடையுள்ள - சரியாகச் சொன்னால் 150 பவுண்டுகள் எடையுள்ள ஒரு மனிதனைக் குறித்த பகுப்பாய்வை (analysis) வைத்திருந்தனர். அவனுடைய சரீரம் 84 காசுகள் (cents) பெறுமானமுள்ள ரசாயனங்களாகத் தான் இருந்தது. அது சற்றேறக்குறைய ஒரு கோழிக்கூண்டின் மேல் தெளித்து, அதை வெள்ளையடிக்கப் போதுமான அளவு கால்சியத்தையும் மற்றும் ஒவ்வொன்றையும் தான் கொண் டிருந்தது. அவனுடைய முழு எடையும் 84 காசுகள் (cents) விலைமதிப்புள்ளதாகவே இருந்தது. அங்கே இரண்டு பையன்கள் நின்று கொண்டு, ஒருவன் மற்றவனிடம், 'ஜான், நமக்கு அதிக விலைமதிப்பு இல்லை, அப்படித்தானே? என்றான். மற்றவன், 'அது சரிதான்; நாம் அதிக விலைமதிப் புள்ளவர்கள் என்று நான் நம்பவில்லை' என்றான். நூற்றைம்பது பவுண்டுகளுக்கு விலை மதிப்பு 84 காசுகள் (cents) தான். இப்பொழுது, துவக்க முதலே நீங்கள் பெரியவர்களல்ல, அப்படித்தானே? ஆனால் அந்த 84 காசுகளை (cents) நீங்கள் அக்கறை எடுத்து கவனித்துக் கொள்வதில் நிச்சயமுடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அதன் மேல் ஒரு சிறு விலங்கின் மென்மயிரினால் செய்யப்பட்ட 500 டாலர்கள் விலைமதிப்புள்ள கோட்டை அணிந்து கொண்டு, உங்கள் மூக்கை நிமிர்த்திக் கொள்கிறீர்கள். மழை பெய்தால், அது உங்களை மூழ்கடித்து விடும். அந்த 84 காசுகளை (cents) கவனிப்பதில் நீங்கள் உறுதியாய் இருக்கிறீர்கள். ஆம், ஐயா. 21ஆனால் பத்தாயிரம் உலகங்கள் விலைமதிப்புள்ள ஒரு ஆத்துமாவை நீங்கள் அங்கே உள்ளே பெற்றிருக்கி றீர்கள், அதில் எதையும் திணிப்பதற்கு நீங்கள் பிசாசை அனுமதித்து, அதைக் குறித்து தேவனுடைய சரியான வழியை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, அதை நீதி என்றும், பக்தி என்றும் அழைத்துக் கொள்கிறீர்கள். அது உண்மை. உங்கள் ஆத்துமா பத்தாயிரம் உலகங்கள் விலைமதிப்புடையது. உங்களுடைய சரீரமோ 84 காசுகள் (cents) மாத்திரமே விலைமதிப்புடையது. நீங்கள் அதை சுற்றிலும் இழுத்துக் கொண்டு சென்று, அதைக் கவனிப்பதிலேயே உறுதியா யிருக்கிறீர்கள். ஓ, நீங்கள் அதை சவரம் பண்ணி, அதைச் சரியாக சிங்காரித்து, ஆனால் என்னே, அதற்கு அருமையாக உடையுடுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் அந்த ஆத்துமாவுக்கு வஸ்திரம் தரிக்க நீங்கள் உறுதியற்றவர்களாய், இஸ்டமான எதையும் அதன் வழியாக இழுக்க அனுமதிக்கிறீர்கள். அதில் ஒரு சிலந்தியோடு உங்களிடம் கொடுப்பார்களானால், அதை உங்களுக்குக் கொடுத்த உணவு விடுதி மீது வழக்குத் தொடுப்பீர்கள். ஆனால் ஒரு சபையானது உங்களிடம், 'மேய்ப்பரோடு கரங்களைக் குலுக்கி, நீங்கள் தேவனை விசுவாசிப்பதாகக் கூறி, ஆராதியுங்கள், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவ்வளவு தான்' என்று கூறலாம். அது சரி என்றால், காயீனும் சரியாகத்தான் இருந்தான். ஆனால், தேவனோ, 'உன்னுடைய சகோதரனைப் போல தொழுது கொள்வாய் என்றால், நீ நன்மை செய்வாய்' என்று காயீனிடம் கூறினார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் அதைச் செய்ய அவனுக்கு விருப்பமில்லை. இன்றும் அவ்விதமாகத்தான் அது இருக்கிறது; அவர்கள் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் சும்மா சபைக்குச் சென்று, எப்படி ஆராதிப்பது என்று சபை கூறுகிற விதமாகவே ஆராதிக்க விரும்புகிறார்கள். எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்று தேவன் கூறுகிற விதமாகவே தொழுது கொள்ளுங்கள். இயேசு, 'தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்' என்றார். அது சரியே, அவைகளை ஒன்றாக வையுங்கள், வார்த்தையையும் ஆவியையும் ஒன்றாக வையுங்கள். ஆவியானது வார்த்தையில் இருக்குமானால், வார்த்தை தன்னைத்தானே வெளிப்படுத்தும். சரியாக அக்காரணத்தினால் தான் பகுத்தறிதலையும் சுகமளித்தலையும் அவ்விதமான காரியங்களையும் நீங்கள் காண்கிறீர்கள்; அது வார்த்தை வெளிப்படுத்திக் காண்பிப்பதாகும். 22இயேசு, 'உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள்' என்றார். உலகமெங்கும் போய் சபைகளைக் கட்டுங்கள் என்றோ அல்லது இன்ன இன்ன காரியங்களைச் செய்யுங்கள் என்றோ அவர் கூறவேயில்லை. அந்தக் காரியங்கள் எல்லாம் சரிதான். ஆனால் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் போதியுங்கள் என்றும் கூறவில்லை; அவர், ' சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள்' என்றே கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை வெளிப் படுத்திக் காண்பிக்கும்படியாக சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள் என்பதாகும். பவுல், 'சுவிசேஷம் வசனத்தோடு மாத்திரமல்ல, ஆனால் வல்லமையோடும் வந்தது' என்றான், அது பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படுத்துதல்களோடும் வந்தது. அதற்கு தொட்டடுத்த வார்த்தையானது, 'விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்' என்று இருக்க வேண்டியதாய் இருக்கிறது. அது உண்மை. அது வார்த்தையை வெளிப்படுத்த வேண்டியதாய் இருக்கிறது. ஆவியானது வார்த்தையில் இருக்குமானால், தேவனுடைய உண்மையான ஆவி வார்த்தையில் இருக்கு மானால் ,நீங்கள் என்னிலும் , என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், அது உங்களுக்குச் செய்யப்படும்.' சரி. புரிகிறதா? சரியாக அப்படியே நேராக வேதவாக்கியத்துக்குத் திரும்பி வாருங்கள். உங்களால் வேதவாக்கியங்களை விட்டு வெளியே போக முடியாது; அது சரியாக அதனையே திரும்ப எடுத்துக்கொண்டு வந்து, அது ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே சமநிலையில் ஆக்கிக் கொள்ளும். 23ஆனால் காயீன், அவனோ அழகான ஏதோ வொன்றை விரும்பினான். இப்பொழுது, அழகு, அதுதான் கண்ணின் கவர்ச்சி என்று சென்ற இரவு கூறிக் கொண் டிருந்ததை நினைவுகூருங்கள்.நீண்ட-நீண்ட காலத்துக்கு முன்பு, அழகுபடுத்துவதற்கும், அவ்விதமான காரியங்களைச் செய்வதற்கும் கண் தான் அதனூடாக ஆத்துமாவின் வாசலாக இருக்கிறது என்று கத்தோலிக்க சபை கற்பித்தது, ஜனங்கள் அதற்காக விழுந்து போயினர். நீண்ட காலத்துக்கு முன்பே ஹாலிவுட் அதைக் கற்றுக்கொடுத்தது. நீங்கள் எதையும் செய்வதற்கு முன்பே பிசாசு அதை அறிந்து கொண்டான். அது முற்றிலும் உண்மை. அந்த உத்திகளில் தான் அவன் கிரியை செய்தான், அதே காரியம் தான். அவன் தனக்குத்தானே மிகவும் அழகான இராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டான். அது எப்போதுமே அழகாக இருந்து வருகிறது. பிசாசு கூட-அவன்கூட, சாபம் அவன் மேல் வந்த பிறகு, அவன் ஒரு சர்ப்பமாக ஆகி விட்டான்; அவன் இன்னும் ஒரு அழகான சிருஷ்டியாக இருக்கிறான். அவனால் எவ்வளவு அழகாக போக முடிகிறது என்றும், அவனுடைய நிறங்கள் எவ்வளவு அழகாயுள்ளது என்றும் பாருங்கள். அவன் சபிக்கப்பட்ட போதும் கூட அழகு அவனை விட்டு எடுக்கப்படவேயில்லை. யூதாஸ்காரியோத்து கழுத்துப்பட்டையை உயர்த்தி வைத்துக் கொண்டு, மயிரை பக்கவாட்டாக சீவியிருந்த ஒரு வயதான குடிகாரன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலும்... அவன் நயமாக பேசும் ஒரு திறமைசாலியான வாலிபனாயிருந்தான். ஆம், ஐயா. பிசாசு அதற்காக மிகவும் புத்திசாலியாக இருக்கிறான். நான் பிகாலுக்குச் சென்ற போது, சகோதரன் மூர் அவர்களும் நானும் - நான் பிரான்சில் இருந்த போது, பிகாலைச் சேர்ந்த அந்தப் பழைய விபச்சாரிகளைக் கண்டதாக நினைத்துக் கொண்டோம், அது அப்படியே வெளியேயுள்ள விஷமான ஏதோவொன்றாக உள்ளது. சாத்தான் அதற்கு மிகவும் புத்திசாலியாக இருக்கிறான்: அவர்கள் நீங்கள் எப்பொழுதும் கண்டதிலேயே மிகவும் அழகான பெண்கள். புரிகிறதா? அவன் புத்திசாலியாக இருக்கிறான். பாவம் மயக்கி இழுக்கக் கூடியது. பாவம் அழகாயுள்ளது. ஆனால் அது மரணமாயுள்ளது. அது உண்மை. அழகைப் பார்க்காதேயுங்கள். சத்தியத்தைப் பாருங்கள், அழகை அல்ல. இன்று சபையோடுள்ள காரியமும் அதுதான், அது-அது அழகுக்காக துள்ளிக் குதித்து, மரித்துக் கொண்டிருக்கிறது. அது உண்மை, ஏனென்றால் அது மரணத்தையே பெற்றுக் கொள்கிறது. அதன் பேரில் மிக நீண்ட நேரம் தரித்திருக்க விருப்பமில்லை, நான் அதன் பேரில் பிரசங்கம் பண்ணப் போகிறேன். 24ஆனால் எப்படியும், காயீன் தேவனை விட்டு விலகிச் சென்று, நோத் என்னும் தேசத்திலுள்ள வேறொரு குழுவிலிருந்து தனக்கென ஒரு மனைவியைக் கொண்டான் (took) என்பதை நாம் கண்டு கொள்கிறோம். தேவனிடம் வந்து அவரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்காத மனிதன் முற்றிலும் அந்தவிதமாகத்தான் செய்கிறான்; அவன் விலகிச் சென்று தனக்கென ஒரு சபையைப் பெற்றுக் கொள்கிறான், அது அவனைத் திருப்திபடுத்தி விடும். விலகிச் செல்கிறான்... ஆனால் சேத் ஒரு முன்னடையாளமாயிருந் தான் என்பதை நினைவுகூருங்கள். ஆபேல் கொல்லப் பட்டான், சேத் அவனுடைய இடத்தை எடுத்துக் கொண்டான், அது கர்த்தருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு ஒரு அடையாளமாக இருந்தது, திரும்ப மறுபடியும் பொருத்தப்படுதல். அந்த சந்ததிகள் எவ்விதம் வந்து கொண்டிருந்தது என்பதைக் கடந்த இரவில் கவனித்தோம். 25இப்பொழுது, நாம் இங்கே தொடர்ந்து சென்று நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த நம்முடைய - நம்முடைய வேதவாக்கியங்களில் சிலவற்றைப் புரிந்து கொள்வோம். முத்திரை என்பது அடையாளமாக இருக்கிறது என்றும், ஒரு பெயருக்குப் பதிலாக எவ்வாறு முத்திரையை பயன்படுத்தி னார்கள் என்றும் எவ்வாறு அதன் பேரில் முத்திரையிட்டார் கள் என்றும் (பார்த்தோம்). இயேசு கிறிஸ்துவின் நாமமானது தேவனுடைய முத்திரையாக, தேவனுடைய நீதியாக இருக்கிறது. 'கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.' அது தேவனுடைய முத்திரையா? 'என்னுடைய நாமத்தினாலே நீங்கள் பிதா வினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ, நான் அதைச் செய்வேன்.' அது சரியா? 'வார்த்தையினாலாவது கிரியை யினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதை எல்லாம் இயேசுவின் நாமத்தில் செய்யுங்கள்.' அது சரிதானா? நீங்கள் செய்யும் ஒவ்வொன்றுமே... பெந்தெகோஸ்தே நாளில் பேதுரு, 'நீங்கள் மனந்திரும்பி, உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்' என்றான், தேவனுடைய முத்திரை. தேவ னுடைய அடையாளம் பண்ணப்பட்ட முத்திரை, அடையாளம், கர்த்தராகிய இயேசுவின் நாமமாக உள்ளது. இயேசு உங்களுக்குள் வரும்போது, அது அவருடைய ஆவியை உள்ளே வைக்கிறது. அதற்கு வெளியே நீங்கள் எத்தனை நாமங்களை எழுதியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அந்த ஆவி அங்கே உள்ளில் இருக்குமானால், அது சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறது. 26அதன்பிறகு, தேவன் ஏதேனில் காயீனை எடுத்து, அவனுக்கு அடையாளமிட்டு அவனை வெளியே அனுப்பி விட்டார் என்றும், ஆனால் சேத்தோ தேவனுடைய சந்நிதி யிலேயே தரித்திருந்து, தேவன் அவனுக்கு அவனுடைய மனைவியைக் கொடுத்தார் என்றும் கண்டுகொள்கிறோம். உண்மையான சபையும் அவ்விதமாகத்தான் இருக்கிறது; அது தேவனுடைய சந்நிதியிலேயே தரித்திருந்தது. ஓ, இங்கே மேலேயுள்ள வரலாற்றாசிரியரான பால் பாய்ட் அவர்களை அழைத்து வரக் கூடுமா என்று விரும்புகிறேன். தற்செயலாக, அவர் தனிப்பட்ட பேட்டிகளில் ஒன்றுக்கு மூன்று வருடங் களாக காத்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் தொடர்ந்து வீட்டில் இருக்கிறார்கள்; அவர்கள் ஆசியாவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், எல்லா இடங்களிலுமிருந்தும் வந்து, தங்கள் பேட்டிகளுக்காக வருடக்கணக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதன் பேரில் உள்ளே வரும்போது, பரிசுத்த ஆவியானவர் பேசும் மட்டுமாக நாங்கள் அங்கேயே அமர்ந்திருப்போம். இக்காலையில், நாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தரிசனங்கள் நின்று போயின. இது சுவிசேஷ ஆராதனை. எனது வீட்டிலும் வித்தியாசமான இடங்களிலும், அங்கு தான் தரிசனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. எந்த வழியில் திரும்புவது என்று அறிந்திராத ஜனங்கள் வருகிறார்கள், பரிசுத்த ஆவியானவர்... மட்டுமாக சரியாக அங்கேயே நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் ஒரு காரியத்தையும் கூற மாட்டார்கள், பரிசுத்த ஆவியானவரையே பேசும்படி விடுகிறேன். அவர் உள்ளே வந்து, அதை வெளிப்படுத்தி, அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் கூறுகிறார். வெறும் அந்த ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்கள். ஓ, தேவன் எவ்வளவு அற்புதமாக... இந்தக் காலையில், அங்கு எங்கோவுள்ள அந்த நதிக்கரைக்கு நடந்து செல்ல வேண்டி யிருந்தது மிகவும் மகத்தானதாக இருந்தது. நான்... முயற்சித்துக் கொண்டிருந்த போது, அங்கேயிருந்த மேய்ப்பர் (pastor) இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றேன். அது என்னை மிக மோசமாக அதிர்ச்சிடையச் செய்திருந்தது. திறந்து வெளிப்படுத்தி, நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எதைச் செய்திருக்கக் கூடாது என்றும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும், நீங்கள் அதைச் செய்த பிறகு என்ன சம்பவிக்கும் என்றும் கூறுகிற அந்த மகத்தான வல்லமை மிக்க தரிசனங்களை விட்டு என்னுடைய பலத்தை மறுபடியுமாக திரும்பப் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஓ, அது தேவனுக்குத் தெரியும். ஒரு முறை அல்ல, இங்கேயோ அல்லது எந்த இடத்திலும் உள்ள யாராவது ஒருவரிடம் நான் கேட்பேன் என்றால், அவர்களிடம் எப்பொழுதாவது எதையும் கூறியிருக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படியே சரியாக என்ன சம்பவித்தது என்று கூறப்பட்டது, ஏனென்றால் அதனால் பொய் சொல்ல முடியாது; அது தேவனாக உள்ளது. தேவனால் பொய் சொல்ல முடியாது. 27ஓ, பரிசுத்த ஆவியானவரின் கீழாக ஜீவிப்ப தென்பது... சேத் தன்னுடைய மனைவியைப் பெற்றுக் கொண்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... தேவன் அவனுக்கு அவன் மனைவியைக் கொடுத்தாக வேண்டி யிருந்தது; அவன் தேவனோடு தரித்திருந்தான். இப்பொழுது வேதாகமத்தோடு தரித்திருந்து, தேவனோடு தரித்திருக்கும் விசுவாசி, அப்படியானால் அவனே - உண்மையான சபை தான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கும். மற்ற வைகளோ உலகத்தின் மணவாட்டியைத் தான் கொண்டிருக் கும், அப்படியே எதையும் கொண்டிருக்கும்; நாம் அதைச் சென்ற இரவில் கண்டுகொண்டோம். அதோடு கூட, ஏறக்குறைய காயீனும் ஆபேலும், அவர்கள் இருவரும் எங்கு தொடங்கினார்கள் என்பதை நாம் அங்கே வாசித்தோம், அதன்பிறகு நாம் அதை பாபிலோ னுக்குக் கொண்டு வந்தோம். பாபிலோன் எப்படியாக ஆதியாகமத்தில் தோன்றினது என்றும், பிறகு வேதாகமத்தின் மத்தியிலும், வேதாகமத்தின் கடைசியிலும் தோன்றினது என்பதையும் (கண்டு கொண்டோம்). இயேசு காட்சியில் வந்த போதும், அவர் காட்சியை விட்டுப் போன போதும் உள்ள அந்த இடத்தை நாம் கொண்டிருந்தோம். யூதாசும் அதே விதமாகவே வந்தான். அந்திக்கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் அதே விதமாகவே வந்தன. அதற்கான வேதவாக்கியங்கள் மத்தேயு 27, எனவே-அல்லது மத்தேயு 26-ல் உள்ளன. 28பிறகு நாம் இங்கே இதைக் கண்டுகொள்கிறோம்... நாம் இஸ்ரவேலரைக் கண்டுகொள்கிறோம்; நாம் இஸ்ரவேலரைக் கொண்டிருந்து அந்த இஸ்ரவேலர் எவ்வாறு உண்மையாகத் தரித்திருந்தார்கள் என்றும், அந்த வம்சத்தார் எவ்வாறு உண்மையாக இருந்தார்கள் என்றும் அதை மோவாபியரோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். இங்கே முறை கேடாகப் பிறந்த அந்த மோவாபு, இஸ்ரவேலரைப் போலவே அதேவிதமாக முழுவதும் அடிப்படைவாதிகளாக இருப்ப தைக் கண்டு கொள்கிறோம். ஆனால் உண்மையான வம்ச மாகிய இஸ்ரவேலரோ தங்களைப் பின்தொடரும் அடை யாளங்களையும் அற்புதங்களையும் உடையவர்களாயிருந் தனர். அவர்கள் ஒரு வெண்கல சர்ப்பத்தையும், தெய்வீக சுகமளித்தலையும் உடையவர்களாயிருந்தனர். பாளயத்தில் ராஜாவின் ஜயகெம்பீரமும் அவர்களுக்கு இருந்தது. அவர் களுடைய இரட்சிப்புக்காக ஒரு அடிக்கப்பட்ட கன்மலையும் அவர்களுக்கு இருந்தது. பரத்திலிருந்து அவர்களைப் போஷித்துக் கொண்டிருந்த ஒரு பரம பிதாவும் அவர்களுக்கு இருந்தார். அவர்கள் எந்த நுகத்திலும் பிணைக்கப்படா தவர்களாய் ஒரு மகிமையான நேரத்தைக் கொண்டிருந்து, அப்படியே எந்த ஸ்தாபனத்தையும் சேராதவர்களாய் (interdenominational) சுற்றித்திருந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஒரு தேசம் கூட இல்லாமல், அப்படியே நாலாபுறமும் பரவியிருந்த ஒரு ஜனமாக இருந்த காரணத் தினால், அவர்கள் இவர்களைப் பார்த்து கேலி செய்து கொண்டிருந்தனர். ஆனால்... இதோ அது இருக்கிறது; உங்களுக்கு அது புரிகிறது என்று நம்புகிறேன். அவர்கள் தங்கள் சொந்த தேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர், அது சொந்த தேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கும், இன்றைக்குள்ள உண்மையான சபைக்கு பரிபூரண முன்னடையாளமாக இருந்தது. செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும் மற்றவற்றையும் அனுபவித் தும், நாமோ தேவன் (தாமே) கட்டி உண்டாக்கின ஒரு நகரத்துக்குக் காத்திருக்கிறோம். இன்று உண்மையான சபை யும் அவ்விதமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. மோவா பியர்கள் மகத்தான அடிப்படைவாதிகளைப் போன்றிருந்தனர், அவர்கள் இஸ்ரவேலர்கள் கொண்டிருந்த பலியைப் போன்று பரிபூரண பலியோடு வெளியே வந்தார்கள்: இஸ்ரவேலர்கள் எவ்வாறு அடிப்படைவாதிகளாகவும் மற்றும் ஒவ்வொன்றாக வும் இருந்தார்களோ அப்படியே மோவாபியரும் இருந்தார் கள், ஆனால் அவர்களிடம் அந்த ஆவி இருக்கவில்லை. 29நாம் தொடர்ந்து காயீனைக் குறித்து - ஏசாவையும் யாக்கோபையும் குறித்துப் பேசினோம். அது முன்னறிதல் என்றும், தேவனுடைய முன்குறித்தல் என்றும் தேவன் சொல்லியிருக்கிறார்... ஏசாவை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க வேண்டுமென்று தேவன் விரும்பினதால் அல்ல, ஆனால் அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார்... தேவன் தேவனாக இருப்பாரென்றால், அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். பூமியில் எப்போதுமே இருந்த ஒவ்வொரு தெள்ளுப்பூச்சியையும் அவர் அறிந்தி ருந்தார். பூமியில் எப்பொழுதும் இருந்த ஒவ்வொரு கொசு வையும் (ஞ்ய்ஹற்), அது பூமியில் உருவாகும் முன்னமே அதை அறிந்திருந்தார், அது எத்தனை முறை தன்னுடைய கண்களை சிமிட்டும் (மூடித்திறக்கும்) என்றும், அது குறிப்பிட்ட நிலையை அடையுமானால், அது எவ்வளவு கொழுப்பை உற்பத்தி செய்யும் என்றும் அவர் அறிந்திருந்தார். அவர் முடிவற்றவராயிருக்கிறார். யாரால் முடியும் - முடிவற்றது என்றால் என்ன என்பதை யாரால் கூற முடியும்? அவர் முடிவற்றவராயிராவிட்டால், அவர் தேவனல்ல. அவர் முடிவற்றவராய் இருப்பாரானால், ஆதி முதற்கொண்டு சகலத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகையால் தான் அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது, அவர் விரும்பின காரணத்தினால் அல்ல, ஆனால் யார் தெரிந்து கொள்ளப் பட்டவனாயிருப்பான் என்றும், யார் தெரிந்து கொள்ளப்பட்ட வனல்ல என்றும் அவர் அறிந்து கொள்ளும்படி செய்தஅவருடைய-அவருடைய முன்னறிவின் நிமித்தமாக அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆகையால் தான் எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் முழு சபையுடைய பெயரும், எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் ஒவ்வொரு நபருடைய பெயரும் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டு விட்டதாக வேதாகமம் கூறுகிறது. அது உண்மை. தேவன் அதை அறிந்திருந்தார். 30தேவனுடைய முன்னறிவினாலே இயேசு வந்தார், இயேசு அந்த சபையை விடுவிக்க அல்லது அதை மறுபடியும் கிரயத்துக்குக் கொள்ளும்படிக்கு வந்ததை அறிந்திருந்தார். பிரசங்கிமார்கள் குட்டைக்குச் சென்று ஒரு வலையை வீசி விட்டு, அதை இழுக்கிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். தேவனுடைய இராஜ்யம் ஒரு வலையை எடுத்துக்கொண்டு, கடற்கரைக்குச் சென்ற ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் அதை இழுக்கும் போது, அவனுக்கு-அவனுக்கு தண்ணீர் சிலந்திகளும், பாம்புகளும், சர்ப்பங்களும், தவளைகளும், மற்ற ஒவ்வொன்றும் கிடைத்தது, ஆனால் அவனுக்கு மீனும் கிடைத்தது. இப்பொழுது, எது மீன் என்றும், எது மீன் அல்லவென்றும் நமக்குத் தெரியாது; நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், வலையை வீசி மீன்பிடிப்பது தான். சகோதரன் பன்றேன் (Buntane) அவர்கள் இங்கே நீண்ட காலமாக வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார். சகோதரன் பன்றேன் அவர்களே, நானும் என்னுடைய வலையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, உம்மோடு கூட வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறேன். நான் அதை அங்கே வீசி விட்டு அதை இழுக்கிறேன். இதோ அவர்கள் பீடத்தைச் சுற்றிலும் வந்து, எழுந்து நின்று கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிறார்கள். எது வெள்ளாடு என்றோ, எது செம்மறி ஆடு என்றோ, எது சிலந்தி என்றோ, அல்லது எது தவளை என்றோ, அல்லது அது என்னவாக இருந்தாலும் அது எனக்குத் தெரியாது, ஆனால் அது என்னவென்று உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவனுக்குத் தெரியும். 'பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா முதலில் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவனால் வர முடியாது. பிதா எனக்குக் கொடுத்திருக்கிற (கடந்த காலம்) யாவும் என்னிடத்தில் வரும்.' அது உண்மை. அவர் அதைச் சொல்லி யிருக்கிறார். இப்பொழுது, அது யார் என்று எனக்குத் தெரியாது; நான் வெறுமனே வலையை வீசி விட்டு, 'சோர்ந்து போய் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் வாருங்கள்' என்று கூறுகிறேன். அப்படியானால் எது எதுவென்று தேவ னுக்குத் தெரியும்; எனக்கோ தெரியாது. வேறு யாருக்குமே தெரியாது, அது அப்படியே தேவனைப் பொறுத்தது. எனவே அவர் வரும் வரையில் நாம் தொடர்ந்து வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருப்பதே நம்முடைய-நம்முடைய கடமையாயிருக்கிறது. 31எனவே இப்பொழுது, அந்த மகத்தான சபையானது தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏசாவும் யாக்கோபும், அந்தப் பிள்ளைகளில் இரண்டில் ஒன்றாவது பிறக்கும் முன்பே, அவர் ஒருவனை நேசித்து மற்றவனை வெறுத்ததாக தேவன் கூறினார் என்பதைக் கண்டுகொள் கிறோம். அவர்கள் இரட்டையர்களாக இருந்தார்கள் என்பதை நினைவுகூருங்கள்: ஒரே தாயும் ஒரே தகப்பனும் தான். அது புரிகிறதா? அவர்கள் இரட்டையர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு எழுப்புதலும் இரட்டையர்களைப் பிறப்பிக்கிறது. நிச்சயமாக அவ்வாறு செய்கிறது. இயற்கையான மனிதனுக்கும் ஆவிக்குரிய மனிதனுக்கும் இரட்டையர்கள் பிறக்கிறார்கள். அது முற்காலத்தில் ஏதேன் தோட்டத்திலும் இருந்தது, காயீனும் ஆபேலும், அதே காரியம் தான். அங்கிருந்து தொடங்கி, அப்படியே தொடர்ந்து கீழே வந்து கொண்டே யிருக்கிறது. அந்த சபையைக் கவனித்துப் பாருங்கள், மேய்ப்பராகிய இயேசுவும், பொக்கிஷதாரியாகிய யூதாசும், சகோதரர்கள் தான், அவர்கள் ஒரே கோத்திரத்திலிருந்தும் மற்றவற்றி லிருந்தும் வந்தவர்கள், அவர்கள் சரியாக அதே குழுவி லிருந்தும், அதே சபையிலிருந்தும் வந்தவர்கள். ஒருவர் மேய்ப்பராக இருந்தார், மற்றவனோ பொக்கிஷதாரி. அதில் ஒருவன் பிசாசாகவும் மற்றவரோ தேவனாகவும் இருந்தார்கள். அது அவ்விதமாகத்தான் சம்பவிக்கிறது. இயேசு, 'கடைசி நாட்களில், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு அந்த இரண்டு ஆவிகளும் மிகவும் நெருக்கமாக இருக்கும்' என்று கூறியிருக்கிறார். ஆமென். அது கூடுமானால் என்றுள்ளது, ஆனால் அது (தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிப்பது) கூடாத காரியம். மேலும் அது... அவர்கள் ஒருபோதும் வஞ்சிக்கப்படவே மாட்டார்கள். சரி. 32ஆனால்... அவன் உண்மையான முத்திரையைப் பெற்றுக் கொள்கிறான். தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்த ஆவியாக உள்ளது. இப்பொழுது, கடந்த இரவில் நாம் முடித்து விட்டுப் போன எசேக்கியேல் 9-ம் அதிகாரத்திலிருந்து, அந்த இடத்திலிருந்து தொடங்கலாம். எத்தனை பேர் அதை வாசித்தீர்கள்? பெரும் சந்தோஷம் கிடைத்ததா? இப்பொழுது அதையே வாசிப்போம். அந்த இடத்தில் தான் தீர்க்கதரிசி பெந்தெகோஸ்தேவை முன்னரே கண்டு, என்ன சம்பவிக்கும் என்றும் கூறினான். ஆறு மனிதர்கள் உயர்ந்த வாசலிலிருந்து வருவதை அவன் கண்டான். அவர்களிடம் வெட்டுகிற ஆயுதங்கள் இருந்தன. அது எருசலேமுக்கு மாத்திரம் குறிக்கப்பட்டிருந்தது என்பதை கவனித்தீர்களா, வெறுமனே எருசலேமுக்கு மாத்திரம், ஏனென்றால் அங்கே தான் யூதர்கள்... தேவன் புறஜாதிகளோடு தனிப்பட்ட நபர்களாக ஈடுபடுகிறார். ஆனால் இஸ்ரவேலரே ஒரு தேசமாக, தேவனுடைய தேசமாக இருக்கிறார்கள். ஆமாம். ஒரு மிஷனரி எனது சபையில் நின்றிருந்தார். சகோதரன் ஃபிரட் சாத்மன் அங்கு எங்கேயோவிருந்து அவ்வப்போது, 'ஆமென்' என்று கூறுவது எனக்குக் கேட்கிறது. அவர் வெளியே சபையில் இருக்கிறார். எப்படியும், அந்த சகோதரர்களில் சிலர் கூடாரத்தில் வெளியிலிருந்து வந்திருக்கிறார்கள், ஒரு யூத சகோதரன் எல்லா நேரமும் இஸ்ரவேல் தேசத்துக் குச் சென்று, யூதர்களுக்கு எதையாகிலும் செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்... அவர்களை கர்த்தருக்காக ஆதாயம் பண்ண அவர் விரும்பினார் என்று நினைக்கிறேன். அன்றொரு நாள் காலையில், அவர் கூடாரத்துக்கு வந்து, தொடர்ந்து அபிஷேகம் இருந்த போது, அவர் எழும்பி நின்று, 'சகோதரன் பிரன்ஹாமே, உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நான் எப்படி எருசலேமுக்குள் போவது? நான் ஒவ்வொரு வழியிலும் முயற்சித்து வந்திருக்கிறேன்' என்றார். நான், 'உம்மிடம் என்ன சொல்லுவதேன்றே எனக்குத் தெரியவில்லை' என்றேன். ஏறக்குறைய அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, 'அது அப்படி அல்ல, ஏனென்றால் இஸ்ரேவேல் ஒரே நாளில் பிறக்கும்' என்றார். எப்போதுமே. ஓ, நாம் அருகாமையில் இருக்கிறோம். ஓ, கர்த்தருக்குச் சித்தமானால், இப்பொழுது ஒரு சில நிமிடங்களில், நாம் அதற்குள் போகப் போகிறோம். 33வெட்டுகிறவன் புறப்பட்டுப் போவதற்கு முன்பு, நாம் அதைக் கண்டுகொள்கிறோம்... இப்பொழுது கவனியுங்கள்; இதைத் தவற விட வேண்டாம். வெட்டுகிறவன் புறப்பட்டுப் போவதற்கு முன்பு, வெண்வஸ்திரம் தரித்திருந்த ஒரு மனுஷன் புறப்பட்டு வருவதை அவர் கண்டார். வெண்மை நிறம் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? பரிசுத்தவான் களின் நீதிகளை. இப்பொழுது, அவர் தம்முடைய அரையில் ஒரு-ஒரு கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்தார். அவர் முதலில் எருசலேம் நரத்துக்குள் உருவப்போய், அந்த நகரத்தில் செய்யப்படும் அருவருப்புகளினிமித்தமாக பெரு மூச்சு விட்டழுகிறவர்களை முத்திரையிட்டார். வேதாகம வாசகர்களே, அது சரிதானா? பிறகு வெட்டுகிறவன் புறப்பட்டுப் போன போது, அது, 'முதியோர், வாலிபர், பிள்ளைகள், குழந்தைகள், எதுவாக இருந்தாலும், யாரையும் தப்ப விடாதீர்கள். இந்த அடையாளம் இல்லாத எல்லா வற்றையும் சங்கரித்துக் கொன்று போடுங்கள்' என்றது. புரிகிறதா? எதுவுமே மீதியாக விடப்படவில்லை. அவர்கள் ஒன்றில் முத்திரையைப் பெற்றிருந்தார்கள் அல்லது முத்திரை யைப் பெறாதவர்களாக இருந்தார்கள். ஆகையால் தான் இந்த நாளில் நாம் வந்து கொண் டிருக்கிற - நாம் இங்கே புதிய ஏற்பாட்டிலுள்ள அதற்கு (இன்னும்) ஒரு நிமிடத்தில் போகப் (போகிறோம்), அவர்கள் - தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்த ஆவியாக உள்ளது, அதற்குப் புறம்பே அது வெட்டுகிறவனுக்காக உள்ளது. ளசகோதரன் பிரன்ஹாம் தம்முடைய தொண்டையைச் சரிசெய்கிறார் - ஆசிரியர்.ன என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அவர்கள் இழக்கப்பட்டுப் போனார்கள். 34இப்பொழுது, நாம் கடந்த இரவில் ஜோசபஸ் எழுதினவைகளையும் மற்றவைகளையும், மற்ற பண்டைய வரலாற்றாசிரியர்கள் அநேகர் எழுதினவைகளைக் குறித்தும் பேசினோம், நான் அதைக் குறிப்பிடுகையில். ஜோசபஸ் வாழ்ந்தான் - அவன் அநேகமாக நசரேயனாகிய இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களுக்கு நெருங்கிய காலத்தில் வாழ்ந்தான், அவன் அந்த நாட்களைக் குறித்து எழுதி வைத்திருக்கிறான். இப்பொழுது, அவன் அதைக் குறித்துப் பேசினான், அந்த ஜனங்கள்... அவர்கள் நர மாம்சம் உண்பவர்களாக இருந்து, நசரேயனாகிய இயேசுவின் சரீரத்தைப் புசித்துக் கொண்டிருந்ததாக அவன் குறிப்பிட்டான் என்று நம்புகிறேன். நிச்சயமாக அது அவர்கள் எடுத்து வந்த இராப்போஜனமாக இருந்தது. அவனுக்கு அது தெரிய வில்லை; அவன் வெறுமனே மனந்திரும்பாத மனதை உடையவனாயிருந்தான்; அவன் வெறும் ஒரு வரலாற்றா சிரியன் தான். ஆனால் அவன்... அந்த காரியம் சம்பவிக்கத் துவங்கினதை அவர்கள் கண்ட போது, அவர்கள் எருசலேமை விட்டு அவசர அவசரமாகப் புறப்பட்டு இரகசியமாய் தப்பி ஓடி, மேலே யூதேயாவுக்குள் போய், அதை விட்டு மிகவும் அதிக தூரமாய்ப் போய் விட்டார்கள். ஆனால் அந்த மகத்தான ஸ்தாபனங்களாய் இருந்த யூதர்கள் எல்லாரும் திரும்பி ஒன்றாக (கூடி) வந்து, 'நாம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போவோம். யேகோவா தான் நம்முடைய பாதுகாப்பு. நாம் இதற்குள்ளே தான் வாழ்ந்து இருக்கிறோம். தேவன் இந்த ஆலயத்தைக் கட்டினார். யேகோவா இதைச் செய்து, சாலமோன் இந்த ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணினான்; இது ஒரு மகா பரிசுத்த ஸ்தலமாக உள்ளது' என்றார்கள். 35ஒரு... ஆனால் மேசியா வந்து, அவர் செய்வார் என்று வேதாகமம் கூறின அதே காரியங்களைச் செய்வார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட விதமாகவே மிகச்சரியாக அவர் அவர்களிடம் வந்த போது, அவர்களோ அவரைப் புறக்கணித்தனர். ஆனால் அவர்களுடைய வேதசாஸ்திரத்தின் படி அவர் வரவில்லை. அது புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன், ஆனால் அது ஆழமாக நங்கூரமிடப்படுகிறது என்று நம்புகிறேன். அவர்கள் வந்தனர். அவர் தம்முடைய மேசியா அடையாளத்தை, அவர் (எப்படி) செய்வார் என்று வேதாகமம் உரைத்திருந்ததோ அதேவிதமாக அதைச் சரியாக செய்து காண்பித்தார். எத்தனை பேர் அதை விசுவாசிக் கிறீர்கள்? நிச்சயமாகவே நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். மேசியாவின் அடையாளம் என்பது என்ன? அவர் ஒரு தேவன் தீர்க்கதரிசியாக இருந்தார். பாருங்கள்? அதன் பிறகு - அவர்கள் அதைச் செய்த போது, மேசியாவின் அடையாளத்தை அவர்கள் என்னவென்று அழைத்தனர், யாராவது என்னிடம் கூற முடியுமா? அவர்கள் அதை என்னவென்று அழைத்தனர்? அவர்கள் அதை பெயல்செபூல் என்றும், ஒரு பிசாசு என்றும், ஒரு குறிசொல்பவன் என்றும் அழைத்தனர், ஏனென்றால் அவரால் அவர்களுடைய நினைவுகளை அறிய முடிந்தது, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர் அறிந்து கொண்டு, அக்காரி யங்களை அவர்களிடம் கூறினார். உண்மையான யூதர்களோ, அவர்கள் அதை என்ன வென்று கூறினர்? 'அதுதான் மேசியாவின் அடையாளம்' என்றனர். நாத்தான்வேல், 'மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்; மெய்யாகவே நீர் இஸ்ரவேலின் இராஜா' என்றான். 'நீ கூட்டத்திற்கு வரும் முன்பே நான் உன்னைக் கண்டேன் என்று நான் உன்னிடம் கூறின காரணத்தினாலா, நீ-நீஇதை விசுவாசிக்கிறாய்? அப்படியானால் நீ-நீ இதிலும் பெரிதானவைகளைக் காணக் கூடும்' என்றார். பாருங்கள், நீங்கள் முதலாவது விசுவாசித்தாக வேண்டும். அதை விசுவாசியுங்கள், அதன்பிறகு தான் நீங்கள் பெரிதானவை களைக் காண்பீர்கள். 36இப்பொழுது, என்ன சம்பவித்தது என்று நாம் கவனிக்கிறோம். ஆனால் சன்மார்க்கனும், பெரிய சபைகளும், ஸ்தாபனங்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும், ஏரோதியர் களும், அவர்கள் எல்லாரும், 'அவர் பெயல்செபூல்' என்று கூறினார்கள். அவர்கள் ஏதோவொன்றைப் பதிலாகக் கூற வேண்டியதாயிருந்தது. அவர்கள் தங்கள் சபையாரிடம் (எதை யாவது) கூற வேண்டியிருந்தது, எனவே, 'அவர் பிசாசினால் உண்டானவர்' என்று அவர்கள் கூறினார்கள். இப்பொழுது, அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பக்தியுள்ள மனுஷர்களாகவும், பரிசுத்த மனிதர்களாகவும், தெய்வ பக்தியுள்ள மனிதர்களாகவும் இருந்தார்கள். உலகத்தின் எண்ணப்படி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பாவம் இருந் தாலும், அவர்கள் கல்லெறியப்படுவார்கள். பண்டிதர்களும், பட்டம் பெற்றவர்களும், வேதாகம கல்லூரி மாணாக்கர்களும், குருமார்களின் பரம்பரையில் வந்தவர்களும், ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டு, இயேசு, 'நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்' என்றார். அப்படியானால் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை விட்டு பரிசுத்த ஆவி உங்களை வெளியே அழைக்கும் போது, நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பழித்துரைக்காதீர்கள். குருடனுக்கு குருடன் வழிகாட்டினால், அவர்கள் எல்லாரும் குழியில் விழமாட்டார் களா, நிச்சயமாக. 37வேதவாக்கியங்களையும் வாக்குத்தத்தத்தையும் கவனியுங்கள். நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த மணி நேரத்தை அறிந்து கொள்ளுங்கள். அந்த சீஷர்களோ பரிசுத்த ஆவியினால் நிறைந்து, தங்கள் நெற்றிகளில், தேவனுடைய முத்திரையாகிய அந்த அடையாளத்தைத் தரித்துக் கொண்ட வர்களாய், முன் எச்சரிக்கையோடு இருக்கத் துவங்கி, என்ன சம்பவிக்கும் என்று இயேசு கூறினதை அவர்கள் கண்ட போது, அவர்கள் அங்கிருந்து வெளியே போய் விட்டனர். சகோதரனே, நான் இதை உங்களிடம் கூறட்டும், நீங்களும் கூட இதை விட்டு வெளியே போய் விடுவது நல்லது. நாம் ஒரு சில நிமிடங்களில் அதை அடைந்து, நாம் எவ்வளவு சமீபமாயிருக்கிறோம் என்பதைக் கண்டுகொள்ளும் மட்டுமாக பொறுத்திருங்கள். ஓ, இயேசு மறுபடியும் வருவதற்கு சற்று முன்பு அதே காரியம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். 'சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.' அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணி, தேவனைக் கொண்டு ஆணை யிட்டும், இன்ன பிறவற்றையும் செய்திருக்கிறார், எனவே அது இங்கே இருந்தாக வேண்டும். 38இப்பொழுது, நீங்கள் உங்கள் இருதயத்தைச் சுற்றியுள்ள மழை கோட்டை உண்மையிலேயே எடுத்துப் போட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்தக் குடையை கீழே வைத்து விடுங்கள். உங்களுடைய மெதோடிஸ்டு குடையை அந்த மூலையிலும், உங்களுடைய பாப்டிஸ்டு குடையை அந்த மூலையிலும், உங்கள் பெந்தெ கோஸ்தே குடையை அந்த மூலையிலும் அப்படியே வைத்து விட்டு, தேவனுடைய வார்த்தையையே கவனிப்போம். பாருங் கள்? இப்பொழுது அவை எல்லாவற்றையும் அப்படியே அங்கே வைத்து விட்டு, இதைக் கவனிப்போம். பாருங்கள்? தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் மூலமாக வேதாகமம் முன்னறிவித்து, பரிசுத்த ஆவி வந்து, அது சொன்னது போல அப்படியே சரியாகச் செய்தது, சிறிய குழந்தைகள் கூட... வேதாகமம் - வரலாற்றாசிரியர்கள் அதைக் கூறியிருக் கிறார்கள்... இப்பொழுது, 'எதையும் தப்ப விடாதீர்கள்' என்று வேதாகமம் கூறியிருப்பதை நினைவுகூருங்கள். சிறு பிள்ளை களோ அல்லது வாலிபரோ, அல்லது முதியோரோ அல்லது எவருமே தப்பவில்லை. வேறு வகையில் (சொன்னால்), இந்த தேவனுடைய முத்திரையை தரித்திராத எல்லாரும் அடையாளமிடப்பட்டார்கள். யார் அதனுள்ளே அடைபட்டார்கள் என்று கவனித்தீர் களா? மதகுருவுக்காகவும், ஆசாரியர்களுக்காகவும், புகழ் வாய்ந்த மனிதர்களுக்காகவும், மகத்தான ஆசாரியர்களுக் காகவும், பண்டிதர்களுக்காகவும் தங்கள் வாழ்நாள் முழுவ தையும் கொடுத்திருந்த மனிதர்கள் தான் அவர்கள். இப்பொழுது, அது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன், நிச்சயமாக அது உண்மை தான். நிச்சயமாக அது உண்மை. அப்படியே பண்டிதர்களாக இருந்தவர்கள்... அப்படியே பரிசுத்தர்களாக இருந்து, இனிமையாகவும், அநேக மாக அருமையான ஜனங்களாகவும், தேசத்தின் பிரஜைகளாக வும் இருந்தவர்கள்... ஆனால் அது சாக்குப்போக்கு அல்ல. தேவன் ஏதோவொன்றை அனுப்பி, நீங்கள் அதில் நடக்க தவறி விடும் போது, நீங்கள் முடிந்து விட்டீர்கள்; அவ்வளவு தான். நீங்கள் ஒன்றில் அதில் நடக்க வேண்டும் அல்லது அதில் நடக்காமல் இருக்க வேண்டும். அது அவ்விதமாகத் தான் இருந்தது. பேழைக்குள் வராதவர்கள் எல்லாருமே தண்ணீரில் அமிழ்ந்து மாண்டு போனார்கள், அங்கே அதற்கு இருந்தது எல்லாமே அவ்வளவு தான், அவர்கள் யாரா யிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அது அதே காரியம் தான், இன்று கிறிஸ்துவுக்குள் இல்லாத எல்லாரும் கிறிஸ்து இல்லாமலே அழிந்து போவார்கள். அது உண்மை. எனவே, நீங்கள், 'நான் ஒரு மெதோடிஸ்டு, அல்லது பாப்டிஸ்டு, அல்லது பெந்தெகோஸ்தேகாரன், அல்லது வேறு ஏதாவதாக இருக்கிறேன்' என்று கூறிவிட முடியாது; நீங்கள் கிறிஸ்து வினுடையவர்களாக இருந்தாக வேண்டும். நீங்கள் கிறிஸ்து வினுடையவர்களாக இருப்பீர்களானால், கிறிஸ்துவினுடைய கிரியைகளையே செய்வீர்கள். அது அவ்வாறு தான் என்று இது சாட்சி கொடுத்து, நிரூபிக்கிறது. நான்... அந்த வேதவாக்கியம் அவ்வளவு தெளிவாக இருக்கிறது, அதை எவ்வாறு கூறுவது என்று நான் அறிவேன். அது இந்தப் பெரிய முகத்தின் மேலுள்ள மூக்கைப் போல, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் என்னுடைய இந்த முகத்தின் மேலுள்ள பெரிய மூக்கைப் போல அவ்வளவு தெளிவாக இருக்கிறது. அது உண்மை. 39இப்பொழுது, அவர் அதை எவ்வாறு செய்தார் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, அவர்கள்... எச்சரிக் கப்பட்டவர்கள் தப்பித்துக்கொண்டனர். மற்றவர்கள் எல்லாரும் பட்டணத்திற்குள் சென்றார்கள், அவர்கள் மரத்தின் இலைகள் எல்லாவற்றையும் புசித்தார்கள். தீத்து அந்தப் பட்டணத்தைச் சூழ்ந்து கொண்டான். எருசலேம் பட்டணம் தான் அதற்காக குறிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, நமது காலத்தில் அது முழு உலகத்திற்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவோ எருசலேம் பட்டணத்திலிருந்த யூதர்களுக்கு மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தது. தீத்து, அவன் உள்ளே வந்த போது,அவன்-அவன் அந்தப் பட்டணத்தைச் சூழ்ந்து கொண்டு, இரண்டு மூன்று வருடங்களாக அவர்களை அங்கேயே உள்ளே வைத்திருந்தான். அவன் அவ்வாறு செய்த போது, அவர்கள் மரங்களின் இலைகளையும், மரப்பட்டைகளையும், பூமியின் புற்களையும் பறித்து சாப்பிட்டனர், அவர்கள் ஒருவர் மற்றவரின் குழந்தைகளைக் கூட வேகவைத்து சாப்பிட்டனர். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வேகவைத்து அதைப் புசித்தனர்: அவர்கள் மூர்க்கவெறி கொண்டு, பித்து பிடித்தவர்களாக இருந்தனர். அதன்பிறகு கடைசியாக, அவன் வலுக்கட்டாயமாக உள்ளே வந்த போது, இரத்தம் பட்டணத்தின் வாசல்களுக்கு வெளியே பாய்ந்து போகும் அளவுக்கு அவன் அவர்களை ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்று போட்டான். 40முழுவதும் அன்பினால் நிறைந்த ஒரு மகத்தான தேவன், அவர் முழுவதும் அன்பினால் நிறைந்தவர். அவர் அன்பாக இருக்க வேண்டுமென்றால், அவர் நீதிபரராயிருக்க நியாயத்தீர்ப்பு கொடுக்கவும் வேண்டியதாயிருக்கிறது. எனவே அவர் இன்றிரவு ஒரு இரக்கமுள்ள தேவனாக இருக்கிறார். ஆனால், எனது நண்பனே, அந்த மப்பும் மந்தாரமுமான நியாயத்தீர்ப்பு நாளில், நீங்கள் அவருக்கு முன்பாக நிற்கும் போது, அவர் முழுவதும் கோபத்தால் நிறைந்த ஒரு தேவனாக இருப்பார். அவர் அவ்வாறு கடுங்கோபத்தில் இருந்ததாக வேதாகமம் கூறுகிறது. நான் அங்கே முன்பக்கத் தில் இருந்து, என்னுடைய - வெட்டிக் கொண்டிருந்தேன், கொலராடோவைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுபவர் அங்கே இருந்தார். அவரிடம் ஏதோவொரு கல் இருந்தது. அவன் ஒரு சிறு கல்லை வெட்டிக்கொண்டிருந்தான், என்னுடைய சிறிய மகளின் கழுத்தில் அணியும்படியான ஒரு சிறு காரியத்திற்காக அதை அவளிடம் எடுத்துச் செல்ல விரும்பினேன், அதுதான் ஒரு சிறு சிலுவை. எனவே அவர், 'நீங்கள் இதை வெட்டி... அதை எந்த இடத்தில் வெட்டி எடுக்க வேண்டும் என்பதை எனக்குக் காட்டுங்கள்' என்றார். அது எல்லாம் சரியாக இருந்தது, அப்போது அது ஒருவிதத்தில் கரடுமுரடாகவும் இருப்பது போலவும், மேகங்கள் தொங்கிக் கொண்டிருப்பது போலவும் தோன்றினது. நான் அதையே சிலுவையின் உச்சியில் பொருத்தினேன். அந்த சீமாட்டி, 'நீர் ஏன் அவ்வாறு செய்கிறீர்? நீர் ஏன் சித்திர அழகு வாய்ந்த பளிங்கு போன்ற தெளிவான பாகத்தை இங்கிருந்து வெட்டி எடுக்கவில்லை?' என்று கேட்டாள். நான், 'சிலுவை சித்திர அழகு வாய்ந்ததல்ல. அது பாடுகளுக்கும் அவமானங்களுக்குமான ஒரு சின்னம்' என்றேன். அவள், 'நல்லது, ஏன் அப்படி?' என்று கேட்டாள். நான், 'அது தேவனுடைய உக்கிர கோபத்தின் இருளார்ந்த புகைப்படலமாக இருக்கிறது. கல்வாரியில் என்னுடைய இடத்தை எடுத்த கிறிஸ்துவின் மேல் தேவன் தம்முடைய கோபாக்கினையை ஊற்றினார். அவர் நியாயத்தீர்ப் புகளின் கீழாகவும், தேவனுடைய கோபாக்கினையின் கீழாகவும் மரித்தார். தேவன் தம்முடைய கொடிய நியாயத்தீர்ப்பை அவர்மேல் ஊற்றினார், அவர் என்னுடைய இடத்தை எடுத்துக் கொண்டார். நான் ஒரு பாவியாக இருந்தேன், அவர் என்னுடைய இடத்தை எடுத்தார்' என்று கூறினேன். அப்போது, அந்தப் பெண்மணி யின் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை நான் கவனித்தேன். நான், 'நாம் பாவிகள், நமக்கு எந்த நம்பிக்கையுமே கிடையாது. ஆனால் நாம் இந்த நியாயத்தீர்ப்புகளில் நின்றாக வேண்டியிருந்ததை தேவன் அறிந்திருந்தார், இயேசு நமக்காக அவைகளை ஏற்றுக்கொண்டார். அந்த சிலுவையின் மேல் தொங்கிக் கொண்டிருந்த இருளான புகைப்படலமானது, தேவனுடைய கோபாக்கினை அவர் மேல் ஊற்றப்பட்டதாய் இருந்தது. நாம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக அவர் தம்முடைய சொந்த சரீரத்தில் தேவனுடைய கோபாக் கினையை சகித்தார்' என்றேன். ஓ, என்னவொரு வரலாறு, என்னவொரு சத்தியம்... தேவனுடைய கோபாக்கினை... 41இப்பொழுது, எசேக்கியேல் 9வது அதிகாரத்தில், எவ்வாறு எருசலேமில் நடந்த காரியம் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். இப்பொழுது, நாம் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு வருவோம். இப்பொழுது, பென்சில்களை வைத்திருக்கிறவர்கள் இதை எழுதி வைத்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 14ம் அதிகாரம் 6வது வசனம் தொடங்கி 12வது வசனம் முடிய எழுதி வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அது கடைசியான மூன்று தூதர்களாக இருக்கிறது, மூன்று தூதர்கள், கடைசியான ஏழு தூதர்களுக்குப் பிறகு, மூன்று விசேஷமான தூதர்கள் அங்கே புறப்பட்டு வருகிறார்கள், நீங்கள் அதைக் கவனித் தீர்களா? மேலும் இப்பொழுது, நீங்கள் அதைக் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், அந்தக் கடைசியான மூன்று தூதர்கள்... முதலாம் தூதன் (அது வெளிப்படுத்தின விசேஷம் 14ம் அதிகாரம் 6 முதல் 12 வசனங்களில் உள்ளது), முதலாம் தூதன் சுவிசேஷ எக்காளத்தை ஊதி, முழு உலகத்திற்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனா யிருந்தான். இரண்டாம் தூதன் ஒருவிதத்தில் ஒரு பரிசுத்த சுவிசேஷத்தை அறிவித்தான் (புரிகிறதா?), ஏனென்றால் சபையானது வேசித்தனம் பண்ணியிருந்ததாக அவன் கூறினான். மூன்றாம் தூதனோ மிருகத்தின் முத்திரைக்குத் தப்பித்துக்கொள்ளும்படி முழங்கினான். கவனியுங்கள். சீர்திருத்தத்தில் முதலாம் தூதனாகிய லூத்தர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இரண்டாம் தூதனா கிய வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கம் பண்ணினார். வேசித்தனம், அவர் சபையைக் கண்டித்துத் திருத்தினார். ஆனால் மூன்றாவது செய்தி பெந்தெகோஸ்தே செய்தியாக இருக்க வேண்டும், அந்த உண்மையான செய்தியாளன் மிருகத்தின் முத்திரைக்குத் தப்பித்துக்கொள்ளும்படியாக அவர்களை எச்சரித்து, 'மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிறவன் எவனோ, அவன், ஜனங்கள் மேல் ஊற்றப் படும், தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிர கோபத் தைக் குடிப்பான்' என்று கூறிக்கொண்டிருந்தான். அதுதான் இன்றைக்குள்ள இதே செய்தியாகும், மூன்றாம் தூதன், மூன்றாவது செய்தி, இதுவே கடைசி செய்தி. நீதிமானாக்கப் படுதலாகிய லூத்தரின் செய்தியும், பரிசுத்தமாக்கப்படுதலாகிய வெஸ்லியின் செய்தியும், தேவனுடைய முத்திரையை உடைய பெந்தெகோஸ்தே செய்தியும்: மிருகத்தின் முத்திரைக்குத் தப்பித்துக் கொள்ளுங்கள்; பாபிலோனின் அந்தப் பெரிய மதிற்சுவர்களை விட்டு வெளியே வந்து, தேவனுடைய இராஜ்யத்திற்குள் முத்திரை போடப்படுங்கள். 42கவனியுங்கள், அதற்கும் தொட்டடுத்த வசனமாகிய 12 முதல் 13வது வசனத்தில், 'கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்' என்று (கூறப்பட்டுள்ளது). அடுத்ததாக நடப்பது என்ன? அர்மகெதோன். அந்த மூன்றாவது தூதனின் செய்திக்குப் பிறகு, சபையானது போய் விடுகிறது. நாம் அன்றொரு நாள் அந்த தூதர்களைக் குறித்தும், அந்தக் கடைசியான ஏழு தூதர்களைக் குறித்தும், அந்தத் தூதனுடைய செய்தியைக் குறித்தும் சபையில் பிரசங்கித்துக் கொண் டிருந்தோம். இந்த விசேஷமான அபிஷேகமானது அந்த மூன்று காலங்களிலிருந்து வருகிறது, அந்த மூன்று கடைசி தூதர்களிலிருந்து வருகிறது. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 7ம் அதிகாரத்தைக் கவனியுங்கள். யோவான் ஆவியிலே மகிமைக்குள் எடுத்துக்கொண்டு போகப்பட்டு, இது வருவதை அவன் கண்டான்; அவன் சொன்னான்... ...பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று... (இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள்; எழுதி வைத்துக்கொள்வதற்காக உங்களுடைய வேதவாக்கியங்களை ஆயத்தமாக வைத்திருங்கள்)... காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்க... நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். (அவர்கள் - அதைச் செய்து தீருமளவும்) நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் (தீருமளவும்)... இப்பொழுது, இதை எசேக்கியேல் 9ம் அதிகாரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் வெட்டுகிற ஆயுதங்களோடு புறப்பட்டு வந்து, கணக்கன் புறப்பட்டுச் சென்று, முத்திரை போட்டுத் தீருமளவும் அதை நிறுத்தி தாமதப்படுத்திக் காத்துக் கொண்டிருந்தார் என்பதைப் பாருங்கள். 43இப்பொழுது, இங்கேயுள்ளதைக் கவனியுங்கள். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து (கிழக்குத் திசையிலிருந்து) ஏறிவரக்கண்டேன்... (கிழக்குத் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தான்.) அவன் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றி களில் முத்திரை போட வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, சபையானது ஊழியக்காரர்கள் என்று ஒருபோதும் அழைக்கப் படுவதேயில்லை என்பது நமக்குத் தெரியும். சபையானது குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறார்கள். இஸ்ரவேலர் தான் தேவனுடைய ஊழியக்காரர்கள். ஆபிரகாம் அவரு டைய ஊழியக்காரனாக இருந்தான். இஸ்ரவேல் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான், ஆனால் சபையோ அவரு டைய குமாரர் குமாரத்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் அதைக் கவனித்தீர்களா? 'நான்கு காற்றுகளையும் பிடித்திரு.' எவ்வளவு காலம் பிடித்திருக்க வேண்டும்? நாம் நமது தேவனுடைய ஊழியக்காரராகிய இஸ்ரவேலரின் நெற்றி களில் முத்திரை போட்டுத் தீருமளவும் நான்கு காற்றுகளையும் பிடித்திருங்கள். ஓ, நாம் இனியும் தொடர்ந்து போவதற்கு முன்பு, திரும்பி ஒரு சிறு வரலாற்று நிகழ்விற்குள் நான் கடந்து செல்லட்டும். என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். இப்பொழுது, நமது தேவனுடைய ஊழியக்காரராகிய இஸ்ரவேலர்... இஸ்ரவேலர்கள் ஒருமுறை பாபிலோனுக்குள் சிதறடிக்கப்பட்டார்கள், அல்லது பாபிலோனுக்குப் போனார்கள். அதன்பிறகு அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட்ட போது... அது இரண்டாவது முறையாக சம்பவித்ததாகும்; முதல்முறை எகிப்திற்குப் போனார்கள். அதன்பிறகு பாபிலோ னுக்குப் போனார்கள். பிறகு ரோம சாம்ராஜ்யத்தினாலே சிதறடிக்கப்பட்டார்கள். 44மத்தேயு 24ம் அதிகாரத்தில், '... ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று இயேசு கூறினார். நான் கடந்த இரவில் இதைத் தொடங்குகையில், அவர்கள் அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார்கள் என்றும், அவர் அவர்களுடைய மூன்று கேள்விகளுக்குப் பதிலளித்தார் என்பதையும் உங்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் எப்பொழுது திரும்பி வருவார் என்று அவர்கள் அறிய விரும்பின போது, அவர், 'அத்திமரமும், மற்றெல்லா மரங்களும் துளிர்விடுவதை நீங்கள் காணும் போது, காலம் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறினார். இப்பொழுது, பழைய மாய்மாலக்காரன் அதைப் பிடித்துக்கொண்டு, அந்தப் பழைய அவிசுவாசி, 'அந்தத் தலைமுறை கடந்துபோய், வேறொரு தலைமுறையும் கடந்து போய் விட்டது; அவர் பொய் கூறினார்' என்று கூறுகிறான். அவர் பொய் கூற வில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், வார்த்தையைக் குறித்த ஆவிக்குரிய அக்கறை (சிரத்தை) அவர்களுக்குக் கிடையாது. அவர் அப்போதுள்ள தலைமுறையைப் பற்றிக்கூறவில்லை, அவர், 'அது அத்திமரம் துளிர்விடுவதைக் காணும் சந்ததி' என்று கூறினார். 45முற்காலத்து யோவேல் 2-ம் அதிகாரத்தைக் கவனி யுங்கள், சமீபத்தில் அங்கேயுள்ள அந்த நான்கு பூச்சிகளைக் குறித்து இங்கே பிரசங்கம் பண்ணினேன். 'பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது; முசுக்கட்டைப்பூச்சி விட்டதை வெட்டுக்கிளி தின்றது.' (அந்தப்) பிரசங்கம் உங்க ளுக்கு ஞாபகம் இருக்கும், அது இங்கே கலிபோர்னியாவில், காலை உணவு (கூட்டத்தில்) என்று நினைக்கிறேன்? அது போனிக்ஸில் என்று நம்புகிறேன். மெதோடிஸ்டுகள் விட்டதை பாப்டிஸ்டுகள் தின்றனர். பாப்டிஸ்டுகள் விட்டதை பெந்தெ கோஸ்தேயினர் தின்றனர். அது அந்த முழு திராட்சைக் கொடியையும் அழித்துப் போட்டது, 'ஆனால் சகலத்தையும் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்...' மேலும் கவனியுங்கள், அந்த ஒரே பூச்சி தான், அது அதே காரியம் தான், வெவ்வேறு கட்டங்களில் மட்டுமே. பச்சைப்புழு முசுக்கட்டைப்பூச்சியாக ஆகிறது, மற்றும் அதைப் போன்ற காரியங்கள், தொடர்ந்து அவ்விதமாக கீழே ஆகிக் கொண்டே வருகின்றன. அது ஒரு பூச்சியாக உள்ளது. அது சகோதர அன்பைத் தின்னத் தொடங்கி, வேதாகமத்தை எடுத்து, அதை வேறு ஏதோவொன்றோடு பதிலீடாக மாற்றிக் கொண்டது. நான் நான்கு பிரதான காரியங்களைக் கொடுத்து, வேதவாக்கியத்தைக் கொண்டு அதை நிரூபித்துக் காட்டி னேன், அவைகள் தின்ற காரியம் எவை என்றால், உண்மை யான தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கம் பண்ணுதலை யும், சகோதர அன்பையும் தான், அது ஏற்கனவே துவங்கி விட்டதாக, 1 கொரிந்தியர் 13ம் அதிகாரத்தில் பவுல் கூறுகிறான். அந்த எல்லா காரியங்களும், அவை எப்படியாக அதை முழுவதும் தின்று போட்டன, அவை எப்படியாக சபையை கீழே அடிக்கட்டை வரை தின்று போட்டன என்பதும். ஆனால் அவர், 'அவைகள் பட்சித்துப் போட்ட வருஷங்கள் எல்லாவற்றின் (விளைவை) திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (அது சரியே),' அவைகள் பட்சித்துப் போட்டவைகள் எல்லாவற்றையும். 46இஸ்ரவேலரைக் கவனியுங்கள். அவர்... அது எப்போதுமே இந்த அத்திமரமாக இருந்து வருகிறது. 'இந்த மரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது...' என்ன? இஸ்ரவேல் ஒரு தேசமாக ஆவதைக் காணும் சந்ததி, எல்லாம் சம்பவிக்கும் முன்னே, அந்தச் சந்ததி ஒழிந்து போகாது. கவனியுங்கள். ஓ, உங்களுக்கு அது புரிய வில்லையா? இங்கே அவர்களைக் கவனியுங்கள். இப்பொ ழுது, தேவன் எப்போதுமே யூதர்களை அச்சுறுத்தி துரத்தி யடிக்க வேண்டியிருந்தது; அவர்களிடம் பரிசுத்த ஆவி ஒருபோதும் இருந்ததில்லை. அவர்களில் அநேகர் தங்களு டைய தீர்க்கதரிசிகளை, தங்களுடைய செய்தியாளர்களை விசுவாசிக்கக் கூட செய்யவில்லை. அவர் அவர்களைத் துரத்த வேண்டியிருந்தது. அதைத்தான் அவர் புற-புறஜாதி சபைக்கும் செய்ய வேண்டியதாய் இருக்கப் போகிறது. அவர் இந்த ஸ்தாபன சுவர்களை உடைத்துப் போட வேண்டியதாய் இருக்கப் போகிறது. கம்யூனிஸமானது நம்மைச் சுற்றிலும் அழித்துப் போட துவங்கும்படி நாம் அனுமதித்துக் கொண் டிருக்கிறோம், அப்போது நாம் ஒன்று கூட வேண்டியிருக்கும். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார், ஏனென்றால் உடன்படிக்கையானது நிபந்தனையற்றதாக உள்ளது, 'நீ செய்தால், நான் செய்வேன்' என்று அல்ல, 'ஆனால் நான் அதை ஏற்கனவே செய்து விட்டேன்' என்பதாக அது உள்ளது. அது சரியே. ஓ, எனக்கு அது பிடிக்கும். ஆமென். அது அப்படியே என்னை பக்திபரவசமடையச் செய்கிறது. 47இப்பொழுது, அவர் இங்கே என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். 'நீ செய்தால், நான் செய்வேன்' என்றல்ல. ஆதாம் தன்னுடைய உடன்படிக்கையை முறித்துப் போட்ட போதே, யாத்திராகமம் 19ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் தன்னுடைய உடன்படிக்கையை முறித்துப் போட்ட போதே, மற்றும் அதைப் போன்றவைகள் சம்பவித்த போதே அது- அது முடிந்து விட்டது. ஆனால் இது உடன்படிக்கையின் கிருபையாக உள்ளது. அது இவ்வாறு இருக்கும் என்று தேவன் தமது பேரிலே தாமே ஆணையிட்டதாக அவர் ஆபிரகாமிடம் ஆணையிட்டுக் கூறினார். அவர் தமது பேரிலே தாமே ஆணையிட்டார். எனவே ஆபிரகாமுடைய உண்மையான சந்ததியாகிய இயேசு கிறிஸ்து வழியாக, அது தேவனுடைய கிருபையாக இருக்கிறது, அதற்கு மேலும் நியாயப்பிரமாணம் கிடையாது, இல்லை, ஐயா. அதனோடு நியாயப்பிரமாணத்திற்கு தொடர்பே இல்லை. நீங்கள் நியாயப் பிரமாணத்திற்கு அப்பாற்பட்டு, அதற்கு மேலாக இருக்கி றீர்கள்; அது அன்பாக உள்ளது. அன்பானது நியாயப் பிரமாணத்திற்கு மேலாக இருக்கிறது: கிருபை. நியாயப் பிரமாணம் மேசேயினால் வந்தது; கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்து மூலமாக வந்தது. 'அவருக்குச் செவிகொடுங்கள்' என்பதன் பேரில் பிரசங்கம் பண்ண எனக்கு இன்னும் சில இரவுகள் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மறுரூப மலையில், நீங்கள் அதைப் பரிபூரணமாகக் காண்கிறீர்கள், தேவன் எப்படியென்று... நாம் அதை எடுத்துக்கொண்டு, நாம் அதை இடையில் பேசி, எப்படியாக அந்த நியாயப் பிரமாணங்கள், தனிப்பட்ட பயிற்சி ஆசான்கள் (தனியாக பாடம் கற்பிக்கும் உபாத்தியர்கள்) (tutors) மற்றும் அதைப் போன்றவைகளையும், என்ன சம்பவிக்கிறது என்பதையும் காண்பிக்கலாம். 48இருப்பினும், இப்பொழுது கவனியுங்கள். இஸ்ர வேலர் முதல் தடவை இஸ்ரவேலர்களை விரட்டியடிக்கும்படி தேவன் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்த வேண்டியிருந்தது. இந்தக் காலத்திலும், அவர் அதே காரியத்தையே செய்திருக்கிறார். அவர் யூதர்களுக்கு விரோ தமாக ஹிட்லரின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அது தான் அந்த யுத்தத்தைத் தொடங்கினது. தேவன், 'எப்பொ ழுதாகிலும் இஸ்ரவேலை சபிக்கிறவனை, நான் சபிப்பேன். இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கிறவனை, நான் ஆசீர்வதிப்பேன்' என்று கூறினதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள் உலகம் முழுவதிலும் சிதறடிக்கப்பட்டார்கள். அப்போது அவர், ஹிட்லருடைய இருதயத்தையும், முசோலினியின் இருதயத்தையும், ஸ்டாலினுடைய இருதயத்தையும் கடினப்படுத்தினார். நாட்டின் வெவ்வேறு இருதயங்கள் எல்லாவற்றையும் அவர் கடினப்படுத்தி, முடிவில் வழி திறக்கப்பட்டு, இஸ்ரவேலர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள், அவள் ஏற்கனவே தன்னுடைய சொந்த தேசத்தில் (தாய்நாட்டில்) இருக்கிறாள். இது மாதத்தின் எந்த நாள் என்று நீங்கள் காண விரும்பினால், நாட்காட்டியை நோக்கிப் பாருங்கள். இது கர்த்தர் வரும் காலத்தின் எந்த நாள் என்று காண நீங்கள் விரும்புவீர்களானால், இஸ்ரவேல் எங்கு உள்ளது என்று கவனியுங்கள். அதுதான் தேவனுடைய கடிகாரமாகும். அங்கே தான் அவள் இருக்கிறாள், அவள் தன்னுடைய தாய்நாட்டில் இருக்கிறாள். உலகத்திலேயே மிகப்பழமையான கொடியாகிய, தாவீதின் ஆறுமுனைகொண்ட நட்சத்திர கொடி, அதுதான் உலகத்திலேயே மிகப்பழமையான கொடியாக 2500 வருடங் களில் முதல் முறையாக மீண்டும் பறந்து கொண்டிருக்கிறது, (ஆம், ஐயா), ஆம், தூக்கி உயர்த்தப்பட வேண்டியிருந்த அந்த சின்னம் அதுதான். இஸ்ரவேல், பாலஸ்தீனம் ஒரு ரோஜா பூவைப் போன்று, பூத்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் அந்தப் பத்திரிகைகளை வாசித்து, அவர்கள் ஈரானிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் எவ்வாறு திரும்பி வருகிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். 'லுக்' பத்திரிகையானது அந்த யூதர்களுக்குப் பிறகே அவர்கள் எவ்வாறு சென்றார் கள் என்ற அந்தக் கட்டுரைகளைக் கொண்டு சென்றது. அவர்கள் அந்த விமானங்களில் ஏறவில்லை. அந்த வயதான ரபீ அங்கே வெளியே சென்று, 'நாங்கள் தாய் நாட்டிற்குத் திரும்பி வரும்போது, ஒரு கழுகின் செட்டைகளின் மேல் திரும்பி வருவோம் என்று எங்கள் தீர்க்கதரிசியாகிய ஏசாயா நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, ஆயிரக்கணக் கான வருடங்களுக்கு முன்பே எங்களிடம் கூறியிருக்கிறான்' என்றார். அங்கே அது இருக்கிறது. ஆமென். அவர்கள் சரியாக அதில் ஏறி, அங்கிருந்து தூரமாகப் போனார்கள். 49இங்கேயிருக்கும் நம்முடைய சகோதரர்களில் ஒருவராகிய சகோதரன் ஆர்கன்பிரைட் அவர்கள் போய் - அவர் என்னைக் கொண்டிருந்தார், அவர் இந்நேரத்தில் வெளியே மேற்கு கடற்கரைக்கு வந்திருந்தார். அவர் அங்கேயிருந்து படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். மற்ற படங்கள், 'நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள்' என்ற ஒரு படமும் அவரிடம் இருந்தது. நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் என்ற அது என்னவென்று விஞ்ஞானம் கூறுகிறது. நாங்கள் அங்கே அதில் பார்த்த போது, அந்த யூதர்கள் யாவரும் தங்களுடைய சொந்த தேசத்தில் வந்திருப்பதைப் பார்த்தோம். லேவி பெத்ருஸ் (Lewi Pethrus), எத்தனை பேர் அவரை எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் (Stockholm) சபை, அவர் அற்புதமான சகோதரன். அவர் என்னிடம், 'சகோதரன் பிரன்ஹாமே, யூதர்கள் எப்போதுமே தங்கள் தீர்க்கதரிசிகளைத் தான் விசுவாசிக்கிறார்கள். நீர் சற்று இஸ்ரவேலுக்குப் போவீரென்றால்...' என்றார். நான், 'அருமை, அது எனக்கு நலமாகத் தோன்றுகிறது' என்றேன். அவர், 'இதோ பாரும், அவர்கள்... நான் அவர்களுக்கு இந்த இலட்சக்கணக்கான வேதாகமங்களை (Testaments) அனுப்பியிருக்கிறேன் (அவர்கள் பின்பக்கத்திலிருந்து முன் பக்கம் நோக்கி வாசிக்கிறார்கள்), அவர்கள் அந்த புதிய ஏற்பாடுகளை வாசிக்கிறார்கள்' என்றார். அவர்கள் இந்த யூதர்களிடம் கேட்டார்கள்; அவர்கள், 'நீங்கள் ஏன் உங்கள் அப்பாவையும் அம்மாவையும் அழைத் துக்கொண்டும், அந்த குருடானவர்களையும் வியாதிப் பட்டுள்ளவர்களையும் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் மரிக்கவா தாய்நாட்டிற்கு வருகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'நாங்கள் மேசியாவைக் காண வருகிறோம்' என்றார்கள். ஆமென். சகோதரனே, கவலைப்பட வேண்டாம். புறஜாதிகளே, உங்களுடைய நாட்கள் சற்றேறக்குறைய முடிந்து விட்டன. நான் உங்களை கர்த்தருடைய நாமத்தில் எச்சரிக்கட்டும்: நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக புறஜாதி கதவு அடைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இயேசு, 'புறஜாதி யுகம் முடிவடைந்து, நிறைவேறித்தீருமட்டும், அங்கேயுள்ள எருசலேமின் மதில்கள் முகமதியர்களால் மிதிக்கப்படும்' என்று கூறினார். அதோ அவள் இருக்கிறாள், இஸ்வேல் தன்னுடைய தாய்நாட்டில் இருக்கிறாள், அது தனக்கு சொந்தமான இராணுவத்தையும், தனக்கு சொந்தமான பணத்தையும் உடைய ஒரு தேசமாக இருக்கிறது. ஆமென். இப்பொழுது அவள் ஒரு முழு தேசமாக இருக்கிறாள். அத்திமரம் துளிர்விட்டுக் கொண் டிருக்கிறது, அது ஏற்கனவே துளிர்விட்டு விட்டது. 50அவர்கள் அங்கு போன போது, அவர்கள் இந்த புதிய ஏற்பாடுகளை அவர்களுக்குக் கொடுத்தனர். லேவி பெத்ருஸ் அவர்களைக் கேட்டுப் பாருங்கள். இயேசு யாராயிருந்தார் என்பதைக் குறித்த இந்த புதிய ஏற்பாட்டை அவர்கள் வாசிக்கிறார்கள். அவர்கள் அவரைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை. அவர்கள், 'இவர் மேசியாவாக இருந்து, பிறகு மரிக்காமல் இருந்தால், அவர் மேசியாவின் அடையாளத்தைச் செய்ய நாங்கள் பார்க்கட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம். அவர் நிரூபிக்கப்படுவதை நாங்கள் பார்க்கட்டும். நாங்கள் எங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறவர்கள், மேசியா ஒரு தீர்க்க தரிசியாயிருப்பார். அவர் மேசியாவின் அடையாளத்தை, ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்வதை நாங்கள் பார்க்கட்டும், அப்பொழுது அவர் மேசியா என்று நாங்கள் விசுவாசிப்போம்' என்றார்கள். ஓ, என்னவொரு பரிபூரண ஒழுங்கு, அது அப்படியே பரிபூரணமாயுள்ளது. நான், 'கர்த்தாவே, நான் போகட்டும்' என்றேன். நாங்கள் பாருக் இராஜாவை (King Farouk) சந்திப்பதற்கும் சற்று முன்பு, நான் எகிப்திலுள்ள கெய்ரோவுக்குப் போன போது, நாங்கள் - ரோமாபுரியில் (இருந்தோம்). பிறகு நாங்கள் எகிப்திலுள்ள கெய்ரோவில் இறங்கிறோம். போகும் படியான என்னுடைய பயணச்சீட்டு என்னுடைய கையில் இருந்தது. நான் அங்கு போன போது, அவர்கள் விமானத் துக்கு அழைத்தனர். பரிசுத்த ஆவியானவரோ பேசி, 'இப்பொழுது போக வேண்டாம். ஆனாலும் அந்த வேளை இதுவல்ல: இன்னும் சிதறியிருப்பவர்கள் ஒன்றுசேர (gleaning) வேண்டியுள்ளது' என்று கூறினார். என்னால் அதை நம்புவது கடினமாக இருந்தது. அப்போது நான் வெளியே விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கொட்டகையின் (hangar) பின்னால் சென்று (தேவன் என்னுடைய நியாயாதிபதியாக இருக்கிறார்), நான் ஜெபித்து முழங்கால்படியிட்டு, 'பரலோகப் பிதாவே, நான் இன்னும் ஒரு மணி நேரத்திலோ அல்லது இரண்டு மணி நேரத்திலோ பாலஸ்தீனாவில் இருப்பேன். அப்போது நான் அந்த யூதர்களுக்கு சவால் விட்டு, 'அந்த மேசியா உண்மையான மேசியாவாக இருந்தால், அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்வதை நீங்கள் காண்பீர்களாக, அப்போது நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா?'என்று கேட்பேன்' என்று கூறினேன். உங்களுக்கு வாக்குக்கொடுக்கும் ஒரு யூதனைப் பெற்றுக்கொண்டால்; அவன் தன்னுடைய வார்த்தையைக் காத்துக் கொள்வான். 'இப்பொழுது, அது வேதாகமத்தின் மேசியாவாக இருந்தால், அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருப்பார், அவர் இன்னும் ஒரு தீர்க்கதரிசியாகத்தான் இருக்கிறார். இப்பொழுது, அவர் மேசியாவின் அடையாளத்தைச் செய்தால், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா?' சரியாக அதே தேசத்திலேயே, 'நீங்கள் தாமே ஒரு கூட்டம் மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இங்கு எங்காகிலும் அவர்களை அமர வையுங்கள். அவர் இன்னும் தீர்க்கதரிசியா இல்லையா - இல்லையா என்று பாருங்கள். அது செய்யப்படுவதை அவர்கள் காணட்டும். பிறகு சரியாக உங்கள் பிதாக்களும், முற்பிதாக்களும், பரிசுத்த ஆவியைப் புறக்கணித்த இந்த இதே தேசத்திலேயே... ஒரு யூதன் புறஜாதிக்கு அதைக் கொண்டு வருவான், இங்கேயோ ஒரு புறஜாதியான் அதைத் திரும்ப யூதனுக்குக் கொண்டு வருகிறான். அந்த யூதன் சுவிசேஷத்தை பெற்றுக்கொள்ளும் போது, புறஜாதிகளின் நாட்கள் முடிந்து விடும்' என்று கூறுவேன். ஆனால் நான் போக அவர் அனுமதிக்கவில்லை. ஏன், எனக்குத் தெரியாது. இங்கே ஒரு நிமிடம் பொறுங்கள், ஏனென்று வேதவாக்கியத்தில் நாங்கள் உங்களுக்கு அதைக் காண்பிப்போம். 51கவனியுங்கள், அவர்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார்... இப்பொழுது, அந்நேரத்திற்குப் பிறகு, அங்கே எப்பொழுது முழு உலகளாவிய யுத்தம் நடந்தது? முதலாம் உலகப் போரின்போது. எல்லா படைகளும், எல்லா தேசங்களும், ஒரு... க்குள் ஒன்று திரண்டன. ளஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.ன முதலாம் உலகப் போரின் வீழ்ச்சியை (decline) அவர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். அமைதியைப் பிரகடனப்படுத்தியது யார் என்று இன்றைக்கும் யாருக்குமே தெரியாது. கெய்சர் வில்ஹெம் தாம் அதைச் செய்யவில்லை என்று கூறினார். அதைத் தான் செய்ததாக எந்த இராணுவ தலைவனும் கூறவில்லை. ஆனால் அது எவ்வாறு வினோதமாக இருந்தது என்பதைக் கவனியுங்கள். அது நவம்பர் மாதம் 11-ம் தேதி, நாளின் 11ம் மணி வேளையாக இருந்தது. மாதத்தின் 11ம் நாள், வருடத்தின் 11வது மாதம், நாளின் 11-வது மணி வேளை, 11 மணி ஆவதற்கு 11 நிமிடமாக அது இருந்தது. அது என்ன? யுத்தம் நின்றது, மர்மமான முறையில் யுத்தம் நின்று போனது... அதை நின்று போகச் செய்தது என்ன? யுத்தத்தை நிறுத்த தேவ னுடைய பிரகடனம் புறப்பட்டுச் சென்றது. 'நான்கு காற்று களையும் பிடித்திருங்கள்.' 'காற்றுகள்' என்பது 'யுத்தத்தையும் சச்சரவையும்' அர்த்தப்படுத்துகிறது; நமக்கு அது தெரியும். நாம் மீண்டுமாக இஸ்ரவேலரை பாலஸ்தீனத்திற்குத் திரும்பி வரப்பண்ணினது வரை, 'நான்கு காற்றுகளையும் பிடித்திருங் கள்,' அது சரியாக அங்கே 11-ம் மணி நேரத்தில் நின்றது, ஏனென்றால்... ஜனங்களே, இயேசு அந்த பதினொன்றாம் மணி நேரத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் உள்ளதா? பதினொன்றாம் மணி நேரத்தில் வந்தவன், அவர் என்ன சொன்னார்? ஓ, பேசாத ஊமையாக இருக்க வேண் டாம்; ஆவிக்குரியவர்களாக இருங்கள். கவனியுங்கள், அவர் என்ன சொன்னார்? முதலாம் மணி வேளையில் வந்தவன் பெற்ற அதே சம்பளத்தையே 11-ம் மணி வேளையில் வந்தவர்களும் பெற்றனர். அதன்பிறகு பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானம் சரியாகத் திரும்பி சென்று, யூதனை முத்திரை போட வேண்டியிருக்கிறது, முதலாம் யூதனை முத்திரை போட்டது போன்றே, அந்த 11-ம் மணி வேளையில் வந்தவர்களும் முத்திரை போடப்பட்டனர். 'நான்கு காற்றுகளையும் பிடித் திருங்கள்; நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றி களில் நாம் முத்திரை போட்டுத் தீருமளவும், உலகம் அழிந்து போக விடாதீர்கள்.' 52பரிசுத்த ஆவி கிழக்கிலிருந்து வந்து, ஜனங்கள் மேல் விழுந்து, பெந்தெகோஸ்தேவையும், அசுசா வீதி (எழுப்புதலையும்), மற்றவைகளையும் ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன் துவங்கினார். இப்பொழுது, என்ன சம்பவிக்கப் போகிறது? அவர்கள் அதைப் பிடித்திருக்க வேண்டியுள்ளது; முழு உலகத்தையும் அழித்து விடாதீர்கள், ஏனென்றால் எப்படியும் அவர் அப்போது அதை செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது முழு உலகத்தையும் அழித்துப் போடும்படி வழக்கமான வெடி குண்டுகளே அவர்களிடம் உள்ளன. அது சரியே. எதுவரைக்கும் அதைப் பிடித்து வைத்திருக்க வேண்டும்? 'நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும்.' ஓ, சகோதரனே. அங்கே தான் நீங்கள் கேட்ட காரியம் உள்ளது. அவ்விதமாகத்தான் காரியங்கள் உள்ளன. நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத்... அவர் (அவ்விதமாக) இங்கே தொடர்ந்து கூறுகிறார். முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்;... இலட்சத்து நாற்பத்து நாலா யிரம்பேர்... (ஒவ்வொரு கோத்திரத்திலும் 12,000 பேர் ஒதுக்கப்பட்டனர்). ஓ, என்னே, நான் என்ன கூற விரும்புகிறேன் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? வேதவாக்கியம் பரிபூரணமாக பொருந்துகிறது. இப்பொழுது, அது இல்லாத யாவுமே அழிக்கப்பட்டது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 53இப்பொழுது, முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், இப்பொழுது நாம் மூன்றாவது உலகப்போருக்கு ஆயத்தமாகிறோம்: எல்லா இடங்களிலும் அப்படிப்பட்ட சூழ்நிலையே உண்டாகிக் கொண்டிருக்கிறது. அது என்ன? இஸ்ரவேல் தன்னுடைய தாய்நாட்டில் இருந்து அவளுடைய மேசியாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். புறஜாதி சபை, பெந்தெகோஸ்தே காலம், லூத்தர், வெஸ்லி, மேலும் இப்பொழுது பெந்தெகோஸ்தே காலமானது வெதுவெதுப்பாக ஆகி, இயேசுவை வாந்திப் பண்ணிப் போட்டு விட்டது, அவர் அவைகளை வாந்திப் பண்ணிப் போட்டுக் கொண் டிருக்கிறார்: சரியாக, பெந்தெகோஸ்தே காலம். ஆனால் உலகமானது அழிக்கப்படுவதற்கு முன்பு, சரியாக முடிவில், இயேசு,'சோதோமின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷ குமாரன் வருங்காலத்திலும் நடக்கும்,' புறஜாதி சபையானது அதே வல்லமையையும், அதே தூதனையும், அதே சாட்சி யையும் பெற்றுக்கொள்ளும்... நீங்கள் நிச்சயமாகவே அதைக் காண முடியும். அது அப்படியே எவ்வளவு தெளிவாக இருக்க முடியுமோ அவ்வளவு தெளிவாக இருக்கிறது. ஒரு சிறு பிள்ளையும் அதைக் காண முடியும். புரிகிறதா? 54காரியங்கள் அவ்விதமாகத்தான் இருக்கிறது; நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். எல்லாமே அதை அறிவிக்கின்றன. நீங்கள் வேதாகமத்தில் எங்கு போக விரும்பினாலும், அது சரியாக இங்கேயே இருக்கிறது, இதோ பாருங்கள்; உலகமானது பதட்டத்தோடு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது, என்ன விஷயம்? எல்லாமே அவ்விதம் உள்ளது. தேசங்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. நாடுகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகின்றது, வேதாகமம் முன்னுரைத்த அடையாளங்கள் இவை; புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில்கள் அங்கு நிறைந்துள்ளது (ங்ய்ஸ்ரீன்ம்க்ஷங்ழ்ங்க்); ஓ சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள். (அது சரியே.) மீட்பின் நாள் சமீபமாயுள்ளது, மனிதரின் இருதயங்கள் பயத்தினால் செயலற்று நின்று போகின்றன; (அது சரிதானே, இல்லையா?) ஆவியில் நிறைந்து, உங்கள் தீவட்டிகளின் திரியை வெட்டி கத்தரித்து, சுத்தப்படுத்தி, நிமிர்ந்து பாருங்கள்! உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. கள்ளத்தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர், கிறிஸ்துவாகிய இயேசு நமது தேவன் என்னும் தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர். ஓ, எப்படியும் இந்த உலகத்திற்கு என்னத்தான் ஆனது? என்ன தவறு நேர்ந்தது? ஓ, ஜனங்களே, நீங்கள் தூக்கத்தை விட்டு விழித்துக்கொண்டு, தேவனிடம் திரும்புங்கள். உங்களுக்கு என்ன ஆனது? தேவனுடைய மகத்தான அசைவை உங்களால் காண முடியவில்லையா, அவருடைய தூதனானவர் இறங்கி வந்து, அசைவாடி, அதே அடையா ளங்களையும் அற்புதங்களையும் செய்து கொண்டிருந்து, தாம் என்ன செய்வார் என்று கூறினாரோ அதை இரவு நேரங்களில் சரியாக உங்களுக்கு முன்பு அவ்வாறே சரியாகச் செய்து கொண்டு வருகிறதை உங்களால் காண முடியவில்லையா? நல்லது, 'மேலே வாஷிங்டன் டிசியில் உள்ள அவர்கள் (இதை) அறிந்திருக்க வேண்டும் என்பது போன்று தோன்றுகிறது' என்று கூறலாம். அவர் காய்பாவிடம் போகவில்லை; அவர் தமக்கு சொந்தமானவர்களிடம் தான் வந்தார். இந்த தூதனானவர் சோதோமுக்குள் போகவில்லை; அது மற்ற நவீன பில்லிகிரஹாமோடோ அவர்களோடோ போகவில்லை. அவர்கள் அங்கே போய், அவர்களை வெளியே அழைக்க முயன்றனர். ஆனால் இந்த தூதனா னவரோ தெரிந்து கொள்ளப்பட்ட சபையோடு, ஆபிரகா மோடு, வெளியே அழைக்கப்பட்டவர்களோடு தங்கி விட்டார். ஆமென். வியூ! மகிமை. எவ்வளவு அற்புதமாயுள்ளது. 55தேவனுடைய முத்திரை என்பது என்ன? தேவ னுடைய முத்திரை என்பது யாது? எபேசியர் 4:30. 'சபையா னது மேலே மகிமைக்குள் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.' இப்பொழுது, மீண்டுமாக, நாம் வேறொரு வேதவாக்கியத்தை எடுப்போம், எபேசியர் 1:13ல், பவுல் பேசிக் கொண்டிருக்கிறான். கலாத்தியர் 1:8, 'வானத்தி லிருந்து ஒரு தூதனாவது, வந்து வேறு எதையாவது பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்று கூறுகிறது. ஆமாம். 'நீங்கள் விசுவாசித்த பிறகு, நீங்கள் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியால் முத்திரை யிடப்பட்டீர்கள். நீ விசுவாசித்த பிறகு, நீங்கள்...' இப்பொழுது, பாப்டிஸ்டு சகோதரனே, பிரஸ்பிடேரியனே, நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கட்டும். நீங்கள் விசுவாசிக்கும் போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று நீங்கள் கூறலாம். பவுலோ, 'நீங்கள் விசுவாசித்த பிறகு, பரிசுத்த ஆவியால் முத்திரை போடப் பட்டீர்கள்,' என்று கூறினான், அதற்குப் பிறகு. அப்போஸ்தலர் நடபடிகள் 19ல், பவுல் சில பாப்டிஸ்டு களை சந்தித்தான், ஒரு மனந்திரும்பின வழக்கறிஞராக இருந்த அப்பொல்லோ, அவன் யோவானுடைய சீஷர்களில் ஒருவன், அவன் அங்கு மேலே சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்து, மகத்தான சந்தோஷத்தைக் கொண் டிருந்து, சத்தமிட்டு, தேவனைத் துதித்துக் கொண்டிருந்தான்; அப்பொழுதும் அவர்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க வில்லை. பவுல் அங்கு வந்து, ஆக்கில்லாவோடும் பிரிஸ் கில்லாவோடும் முழு இரவும் தங்கினான், அவன் சுவிசே ஷத்தைப் பிரசங்கித்ததற்காகவும், ஒரு சிறு பெண்ணிட மிருந்த ஒரு பிசாசைத் துரத்தினதற்காகவும் சிறைச்சாலையில் இருந்தான். அதன்பிறகு அவர்கள் இருந்த இடத்திற்கு அவன் வந்தான். அவர்கள் அவனை - யிடம் அழைத்துச் சென்றனர், ஏனென்றால் அவர்கள் கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள் (tentmakers), அவன் அவர்க ளோடு தங்கியிருந்து விட்டு, பிறகு அப்பொல்லோ இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த இடத்திற்கு அவர்கள் போனார்கள். ஆராதனை முடிந்த பிறகு, பவுல் அவர்களிடம், 'நீங்கள் விசுவாசித்த முதற்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?' என்று கேட்டான். 56அன்றொரு நாளில் யாரோ ஒரு மனிதர், 'அது துவக்கமுதலே அந்தவிதமாக இல்லையே' என்றார். நான் அதற்கு எதிராயிருக்கிறேன். போய், 'எம்பாடிக் டயக்ளாட் (Emphatic Diaglott)'ஐ எடுத்து, அது அதே காரியத்தையே கூறவில்லையா என்று பாருங்கள், 'நீங்கள் விசுவாசித்தது முதற்கொண்டு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?' அது சரியாக இங்கே, 'நீங்கள் விசுவாசித்த பிறகு, வாக்குத்தத் தமாகிய பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டீர்கள்' என்று கூறுகிறது. அந்த வெதுவெதுப்பான காரியத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள், அங்கே வெளியிலிருக்கும் மணவாட்டியே, இங்கே உள்ளே வந்து விடு...?...க்குள் வந்து அதைப் பெற்றுக்கொள். பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்துவோடுள்ள ஒளிக்கதிர் பிரகாசத்தில் தொடர்ந்து செல்லுங்கள். பரலோகத் திலிருந்து வருகிறதற்குச் செவிகொடுங்கள். 'நீங்கள் விசுவாசித்த முதற்கொண்டே பரிசுத்த ஆவி யைப் பெற்றீர்களா?' அவர்கள், 'பரிசுத்த ஆவி ஏதும் உண்டென்று எங்களுக்குத் தெரியாது' என்றனர். 'நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பெற்றீர்கள்?' என்று கேட்டான். 'யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்' என்றனர். 'அது இனிமேல் கிரியை செய்யாது.' என்றான். அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டு, அவர்கள் மேல் தனது கரங்களை வைத்தான், அப்போது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்து, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, தேவனை மகிமைப்படுத்தினார்கள். அவர்கள் விசுவாசித்து, சத்தமிட்டு, ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருந்த பிறகும், இன்னுமாக அவர்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கவில்லை. ஓ, பவுல் என்ன கூறினான்? 'வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.' ஏனென்றால் சாத்தானால் தானாகவே வேறொரு உருவுக்கு மாற முடியும் (transform). ஆனால் வார்த்தையோடு தரித்திருங்கள். அது தான் சரி. 57இப்பொழுது, நீங்கள் விசுவாசித்த பிறகு, அப்போதுதான் நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாக ஆகிறீர்கள், நீங்கள்... போது தான் உண்மையாகவே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறீர்கள். நாம் எவ்வாறு ஆபிரகாமின் சந்ததியாக வருகிறோம்? கிறிஸ்துவுக்குள் மரிக்கும் போது, அப்போது நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத் தத்தத்தின்படி ஆபிரகாமோடு சுதந்தரராயும் இருக்கிறோம். குறிப்பிடப்பட்டுள்ள பிறகு என்பது செய்து முடிக்கப்பட்ட ஒரு கிரியையை அர்த்தப்படுத்துகிறது. நீங்கள் விசுவாசித்த பிறகு. 'பிறகு' என்பதற்கு 'இருக்கிற ஏதோவொன்று - அதற்கு முன்பு ஏதோவொன்று,' என்று அர்த்தம், அப்படியானால் இது செய்து முடிக்கப்பட்ட ஒரு கிரியையாக இருக்கிறது. முத்திரை என்பது செய்து முடிக்கப்பட்ட ஒரு கிரியையாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கடிதத்தை முழுவது மாக எழுதி முடித்து, அது என்னவாக இருக்கப் போகிறதோ அதை முழுவதுமாக எழுதி முடிக்கும் போது, உங்களுடைய பெயரோடு அதை முத்திரை போடுகிறீர்கள். பார்சலை முழுவதுமாக பொதிந்து, அதைக் கட்டின பிறகு, அதை முத்திரை போடுகிறீர்கள். நீங்கள் வெளியே ஒரு...ல் போகும் போது. நான் வழக்கமாக சிறிது காலம் என்னுடைய தகப்பனா ரோடு ரயில்வேயில் வேலை செய்தேன். நாங்கள் ள்ல்ன்ழ்-ஐ அடைத்து வைக்க உதவி செய்தோம். நாங்கள் அந்த சுமைகளை அங்கே ஏற்றுவதை நான் கவனித்தேன். நாங்கள் சரக்கேற்றப்பட்ட பெட்டிகள் (car) எல்லாவற்றையும் எவ்வளவு நன்றாக ஏற்ற முடியுமோ அவ்வளவு நன்றாக சரக்கு ரயிலில் (boxcar) ஏற்றி விட்டோம், அப்போது மேற்பார்வையாளர் வந்து, அதைக் குலுக்கிப் பார்த்தார். அவர் அதைப் பரிசோதித்து, ஏதாவது விடுபட்டு தளர்ந்து இருக்கிறதா என்று பார்த்தார். ஏதாவது தளர்ந்து போயிருந் தால், அவர் அதைக் கண்டித்தார். இன்றிரவு கடந்து செல்கிற இந்த மேற்பார்வையாளரோடும் (Inspector) உள்ள காரியம் அதுதான். அவர் அதிகமான நம்முடைய ஜீவியங்களில் கடந்து போகிறார். நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாததன் காரணம் என்னவென்றால்... ஓ, நாம் தொடர்ந்து சென்று, அதைப் பெற்றுக்கொண்டது போல நடந்து கொள்கிறோம், ஆனால் கனிகளினாலே நீங்கள் அறியப்படுகிறீர்கள். அவ்வாறு தான் நீங்கள் அறியப் படுகிறீர்கள். அவர் குலுக்கி, இங்கே அவிசுவாசமுள்ள தளர்த்தியான ஒரு சிறு இடத்தையோ, இங்கே தளர்த்தியான ஒரு சிறு இடத்தையோ, இங்கேயுள்ள தளர்த்தியான ஒரு சிறு இடத்தையோ கண்டுபிடிப்பார் என்றால், அவர் அதைக் கண்டித்து, அதை மீண்டுமாக தடை செய்வார். அது இறுக்கமாகக் கட்டப்பட வேண்டும் (ஆமென்), ஏனென்றால் பிரயாணம் பண்ண கரடுமுரடான பாதையைத் தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். தேவன் ஒரு மனிதனுக்கோ அல்லது ஸ்திரீக்கோ பரிசுத்த ஆவியைக் கொடுக்கும் போது, அவர் அவர்களில் உள்ள தளர்த்தியான ஒவ்வொரு இறகுகளையும் வெளியே குலுக்குகிறார். நீங்கள் வந்து கொண்டிருக்கும் ஒரு பிரயாணத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஆமென். மகிமை. அவள் சரியாக இறுக்கிக் கட்டப்படுகிறாளா என்று பார்க்கிறார்... அவர் என்ன செய்தார்? நீதிமானாக்கப்படுதல், அவர் அவளை அழைத்தார். பரிசுத்தமாக்கப்படுதல், அவர் அவளைக் கழுவி சுத்திகரித்தார். பரிசுத்த ஆவி, அவர் அவளை முத்திரையிட்டார். அப்பொழுது அவள் இறுக்க மாகக் கட்டப்படுகிறாள், அதன்பிறகு அவர்கள் வாசலை அடைக்கிறார்கள். அதன்பிறகு கடைசியான காரியம் என்ன? அந்த பாரமேற்றப்பட்ட இரயில் வண்டியின் மேல் அது போய் சேருமிடத்திற்கு ஒரு முத்திரையைப் போடுகிறார்கள் (ஆமென்), அடுத்த எழுப்புதல் வரைக்கும் அல்ல, ஆனால் அது போய் சேருமிடம் வரை. ஆமென். (அடுத்து வருகிற எழுப்புதல் வரைக்குமா? இல்லை. வேறு சபையில் சேர்ந்து கொள்ள உங்களுக்கு எண்ணம் தோன்றுவது வரைக்குமா? இல்லை.) நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்தி ரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப் படுத்தாதிருங்கள். தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுக்கும் போது, அது செய்து முடிக்கப்பட்ட ஒரு கிரியையாக இருக்கிறது. ஆமென். 58ஒரு குழந்தை (நான் அன்றொரு இரவில் அதைக் கூறினேன்) பிறக்கும் போது, இயற்கையான ஜீவியத்தில் முதலாவது காரியம் என்ன? அது ஒரு இயற்கை பிறப்பாக இருக்குமானால், தண்ணீர் வெளிவருகிறது. அடுத்து வருவது என்ன? இரத்தம் வருகிறது. அடுத்து என்ன? ஜீவன் வருகிறது. கிறிஸ்துவிடமிருந்து வந்த அதே மூலப்பொருட்கள் தான், அந்த வழியாகத்தான் நாம் போகிறோம், அவருடைய - அவருடைய சரீரத்திற்குள் திரும்பி போகிறோம். வந்த முதலாவது காரியம் என்ன? அவருடைய பக்கவாட்டு பகுதியை அவர்கள் ஈட்டியால் குத்தின போது, தண்ணீர் வெளிவந்து, இரத்தமும் வெளிவர, 'உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்' (என்றார்). 1 யோவான் 5:7 (நீங்கள் அதை எழுதி வைத்துக்கொள்ள விரும்பினால்), 'பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (அதுதான் குமாரன்), பரிசுத்த ஆவி: இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். ஆனால் பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஜலம், இரத்தம், ஆவி: அவைகள் ஒன்றாயில்லை, ஆனால் அவைகள் ஒருமைப்பட்டிருக்கிறது' என்று கூறுகிறது. நீங்கள் குமாரன் இல்லாமல் பிதாவைக் கொண்டிருக்க முடியாது. பரிசுத்த ஆவி இல்லாமல் உங்களால் குமாரனைக் கொண்டிருக்க முடியாது. ஆனால் பரிசுத்தமாக்கப்படாமல் உங்களால் நீதிமானாக்கப்பட்டிருக்க முடியும். நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்காமல் பரிசுத்தமாக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது முடியும் போது, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் இரண்டும் முடியும் போது, ஞானஸ்நானத்தின் மூலமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய முத்திரை உங்கள் மேல் போடப்படுகிறது. 59இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளன; நாம் இதை நாளை இரவு வரைக்குமாகக் கொண்டு போக வேண்டிய தில்லை.'அதன்பிறகு' என்பது 'ஒரு கிரியையை முடித்து விடுதல், அது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டதை' அது அர்த்தப்படுத்துகிறது. இப்பொழுது, இப்பொழுது, என்னுடைய விலையேறப்பெற்ற நண்பனே, நான் சபைகளில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவைகள் எல்லாமே, ஸ்தாபனங்கள் எல்லாமே எனக்கு ஒரே விதமாகத்தான் இருக்கிறது. இங்கே ஒரு சபையின் பெயரை நான் அழைக்க வேண்டியிருந்தால், நான் அவ்வாறு அர்த்தப் படுத்தவில்லை, எங்கேயும் அவ்விதம் அர்த்தப்படுத்த வில்லை. எந்த சபைகளில் உள்ள ஜனங்களையும் போலவே அங்கேயுள்ள அந்த சபையில் உள்ள அந்த ஜனங்களும் அவ்வளவு அதிக நல்ல ஜனங்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால் அங்கே ஒரேயொரு சபை தான் உண்டு. நாம் அதற்குள் சேருவதில்லை; இந்த சபையில் எந்த பெயருமே நமக்குக் கிடையாது; இது வெறுமனே கிறிஸ்துவின் சரீர மாகவும், இரகசியமான சரீரமாகவும் உள்ளது. அப்படியானால் உங்களுக்கு உங்கள் ஸ்தாபனங்கள் உண்டு; உங்கள் சகோதரன் உள்ளே வர அனுமதிக்காமல் (புரிகிறதா?), அல்லது அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, இங்கே உங்கள் வேலியை நீங்கள் வரையாமல் இருக்கும் காலம் வரையில் அது முற்றிலும் சரிதான். அந்தக் காரியம், இதோ ஒரு சகோதரன் இருக்கிறார், இங்கே ஒரு சகோதரன் இருக்கிறார் என்று நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்க ளானால், அதெல்லாம் சரிதான். ஆனால் ஜனங்களோ, நீங்கள் ஸ்தாபனத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, அவர்கள் சிலுவை மற்றும் கிறிஸ்துவுக்குப் பதிலாக அந்த ஸ்தாபனத் தைச் சார்ந்து கொள்கிறார்கள். பாருங்கள்? ஆகையால் அவர்கள்... உங்களுக்கு ஒரு ஸ்தாபனம் இருந்து, அதிலேயே நீங்கள் நின்று விடுவீர்களானால், நீங்கள் ஒரு காற்புள்ளி யோடு அதை முடித்து, 'இவை எல்லாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனோடு கூட கர்த்தர் எங்களுக்கு வெளிப்படுத்துகிற அதே அளவு காரியங்களையும் விசுவாசிக் கிறோம்' (என்று கூறினால்) அது நல்லது தான். ஆனால் நீங்கள் ஒரு முற்றுப்புள்ளியோடு அதை முடித்து விடும் போது, நீங்கள் சரியாக அங்கேயே மரித்து விடுகிறீர்கள். ஒரு முற்றுப்புள்ளியோடு முடிந்து போகாத ஒன்றை எனக்குக் காட்டுங்கள். நிச்சயமாக, அவைகள் அவ்வாறு தான் உள்ளன. பாருங்கள்? 60அங்கே உள்ளேயுள்ள அந்த ஜனங்கள் அல்ல, இல்லை, ஐயா. கத்தோலிக்க சபை, உலகத்திலேயே முதலா வது ஸ்தாபிக்கப்பட்ட சபை கத்தோலிக்க சபை தான். எந்த வரலாற்றாசிரியரையும் கேட்டுப் பாருங்கள். அதற்கு முன்பு எப்போதாவது அங்கே ஒரு ஸ்தாபனமாவது இருந்ததா என்று எனக்குக் காண்பியுங்கள். கத்தோலிக்க சபை தான் அவை களில் ஒவ்வொன்றுக்கும் தாயாக இருக்கிறது. வெளிப்படுத் தின விசேஷம் 17-ம் அதிகாரம் அதே காரியத்தையே கூறுகிறது, அது அவள் ஒரு வேசி என்றும், அவள் வேசிகளுக்கு தாயானவள் என்றும் கூறுகிறது. அவளுக்கு குமாரர்கள் இருக்க முடியவில்லை, அவைகள் குமாரத்திகளாக இருக்க வேண்டியிருந்தது. அப்பொழுது தான் புரட்டஸ்டன்ட் வேசி ஸ்தாபனங்கள் அவளோடு இருக்கும். அது சரியே. அவைகளிடத்திலுள்ள வித்தியாசம் என்ன? அவைகள் இரண்டும் ஒன்றே. லாங் பீச்சிலிலுள்ள (Long Beach) மிகவும் இழிவான ஸ்திரீயும் ஒரு கன்னிகையான மகளைப் பெற்றெடுக்க முடியும். ஆனால் அவள் தன்னுடைய தாயின் பழக்க வழக்கங்களை திரும்ப எடுத்துக் கொள்வாளானால், அவளுடைய தாய் என்னவாக இருக்கிறாளோ அவ்விதமே அவளும் ஆகி விடுகிறாள். அதுதான் சரியாக நம்முடைய புரட்டஸ்டன்ட் சபைகளுக்கும் சம்பவித்துள்ளன. 61நான் ஒரு ஸ்தாபன சபையை நோக்கி சுட்டிக் காட்டப் போகிறேன், நான் ஒரு பாவியாக இருந்த போது, இயேசு கிறிஸ்துவைக் குறித்து என்னிடம் எப்பொழுதாவது கூறின முதலாவது சபை ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர்களின் சபை தான். தேவனுடைய முத்திரை என்பது அவருடைய ஓய்வு நாள் என்று ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர்கள் கூறுகிறார்கள், ஏனென்றால் ஒரு முத்திரை என்பது ஒரு செய்து முடிக்கப்பட்ட கிரியையைக் காட்டுகிறது, அவர் ஓய்வு நாளில் முத்திரையிட்டிருக்கிறார் என்று. மேலும் ஓய்வு நாளைக் கடைபிடிப்பது என்பது நீங்கள் முத்திரையிடப் பட்டிருக்கிறீர்கள் என்பதன் ஒரு நினைவுச்சின்னமாக இருக்கிறது என்று. இப்பொழுது (ஏழாம் நாள்) ஆசரிப்புக் காரர்களே, உங்களுக்கு அது தெரியும், உங்களுக்கு டாக்டர் ஸ்மித் அவர்களையும், ஹோம் பைபிள் சர்க்கிள் ரீடிங்ஸ் (Home Bible Circle Readings)-ஐயும் அவைகள் எல்லாமும் தெரியும். நான் அவைகள் எல்லாவற்றையும், யேகோவா சாட்சிகளுடைய எல்லாவற்றையும் அதைப் போன்ற மற்றவை களையும் என்னுடைய வாசிப்பு (அறையில்) வைத்திருக்கி றேன். எங்கே - அவர்கள் எப்போதெல்லாம் குழப்புகிறார்களோ, நான் அவர்களுடைய முக்கிய விஷயங்களையும் அறிந்து கொள்வேன். பாருங்கள்? அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே இப்பொழுது, ஓய்வு நாள் என்பது ஒரு முத்திரை அல்ல. ஒரு ஓய்வு நாள் என்பது தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒரு முத்திரையாக இருந்தது. அப்படியானால் அவர் தம்முடைய ஓய்வு நாளோடு அதை முடித்து விட்டு, அதை முத்தி ரையிட்டு விட்டார் (அது சரியே). ஆனால் அது கிறிஸ்தவ ஓய்வினுடைய ஒரு முன்னடையாளமாக இருந்தது. இப்பொழுது, அவர் தம்முடைய சிருஷ்டிப்பை முடித்த பிறகு, அவர் தம்முடைய சிருஷ்டிப்பை முடித்து விட்டார் என்ற ஒரு முத்திரையாகவே ஓய்வு நாளை அவர் அவர் களுக்கு கொடுத்தார் (அது முற்றிலும் சரியே). அதன்பிறகு அவர் தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை முடித்த போது, அவர் வேறொரு முத்திரையைக் கொண்டிருந்தார். மகிமை. 62இப்பொழுது, என்னுடைய (ஏழாம் நாள்) ஆசரிப்பு (Adventist) சகோதரனே, நான் ஒரு காரியத்தை உன்னிடம் கேட்க விரும்புகிறேன். அது முற்றிலும் சரியே. ஓய்வு நாள், அது ஒருவிதத்தில் ஒரு வினோதமான வார்த்தை தான். ஓய்வு நாள் (Sabbath) என்பது உண்மையில் ஒரு எபிரெய வார்த்தையாகும், அதற்கு ஓ-ய்-வு, இளைப்பாறுதல் என்று அர்த்தமாகும். அது ஒரு இளைப்பாறும் நாளாகும், ஓய்வு நாள்; அப்போது நீங்கள் கிரியை செய்வதை நிறுத்தி விடுகிறீர்கள், மற்றும் அதைப் போன்றவைகளை நிறுத்தி விடுகிறீர்கள். தேவன் தம்முடைய கிரியையை முடித்து, அதற்குமேல் ஒருபோதும் திரும்பி வரவேயில்லை. எபிரெயர் 4 அங்கே அதைக் குறித்துப் பேசுகிறது, அவர்... 'தேவன் ஓய்வு நாளிலே ஓய்ந்திருந்தார். 'இன்று நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கும் போது, உங்கள் இருதயத்தைக் கடினப் படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப் பின்' தாவீதின் (சங்கீதத்திலே) வேறொரு சமயத்தைக் குறித்து ஒரு குறிப் பிட்ட இடத்தில் அவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால் இயேசு அவர்களுக்கு வேறொரு ஓய்வு நாளைக் கொடுத் திருப்பாரென்றால், அதற்குப் பிறகு அவர் அதைக் குறித்துப் பேசியிருப்பார். ஆனால் தேவனுடைய ஜனங்களுக்கு அங்கே ஒரு இளைப்பாறும் நாள் வைக்கப்பட்டிருக்கிறது, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்திருக்கிற நாம், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, நாமும் நம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்திருக்கிறோம்.' நாம் எப்போது அவருடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறோம்? இப்பொழுது, பென்சில்களை வைத்திருக் கிற நீங்கள் என்னோடு ஏசாயா 28ம் அதிகாரம் 8 முதல் 12 வசனங்களுக்குத் திருப்புங்கள். இங்கே தான் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்கிறீர்கள், கற்பனையின்மேல் கற்பனையும்... பிரமாணத்தின் மேல் பிரமாணமும்... இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம்... (எது நலமானதோ அதை உறுதியாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.) பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷைகளி னாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். 'இதுவே ஓய்வு நாள், வருமென்று நான் சொன்ன இளைப்பாறுதல் இதுவே. இவை எல்லாவற்றையும் அவர்கள் கேட்காமல், தங்கள் தலைகளையும் மற்றவைகளையும் ஆட்டிக்கொண்டு (wagging) தூரமாக நடந்து போய் விட்டார்கள்.' இரட்சிப்பை முழுமையாக நிறைவடையச் செய்யும் முத்திரை என்று அவர் கூறினார், லூத்தரின் நீதிமானாக்கப் படுதல், வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதல்; ஆனால் உண்மையான இளைப்பாறும் நாளாகிய ஓய்வு நாள் வரும் போது, 'பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷைகளினாலும் நான் இந்த ஜனத்தோடே பேசுவேன்' என்பது (வரும்)போது, அது இருக்கும், இதுவே முடிக்கப்பட்ட கிரியை. அல்லேலூயா. இதுவே முத்திரை. இதுவே ஓய்வு நாள். 63சகோதரனே, அது பரிசுத்த ஆவி என்று உங்களுக்குப் புரியவில்லையா? அது செய்து முடிக்கப்பட்ட கிரியைக்குள் நீங்கள் பிரவேசிக்கும் போது. நீங்கள் வெறு மனே நீதிமானாக்கப்பட்டிருந்தால், அதெல்லாம் சரிதான், அது நல்லது தான். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தால், அது நல்லது தான். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் போது, அது ஒரு செய்து முடிக்கப்பட்ட கிரியையாக இருக்கிறது, தேவன் தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவு செய்து விட்டு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் அதை முத்திரையிட்டு விட்டார். ஆமென். ஓ, என்னே. எத்தனை பேர் அதை விசுவா சிக்கிறீர்கள்? வேதாகமத்தில் ஒவ்வொரு இடத்திலும் (வருகிற) பரிசுத்த ஆவியானது ஒரு முடிக்கப்பட்ட கிரியையாக இருக்கிறது. தேவன் தம்முடைய கிரியையை முடித்து விட்டார். அவர் நீதிமானாக்கப்படுதலின் மூலமாக தம்முடைய சீஷர்களை அழைத்தார். அவர் யோவான் 17:17ல் அவர் களைப் பரிசுத்தமாக்கினார். அசுத்த ஆவிகள் மேல் அவர் களுக்கு அதிகாரம் கொடுத்தார், அவர்கள் புறப்பட்டுச் சென்று, பிசாசுகளைத் துரத்தி, களிகூர்ந்தபடியே திரும்பி வந்தார்கள், அவரோ, 'நீங்கள் பிசாசுகளைத் துரத்துவதன் நிமித்தமாகவும், அவைகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்பதற்காகவும் நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங் கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங் கள்' என்றார். என்னுடைய சகோதரனே, நான் இப்பொழுது ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். உங்கள் பெயர் பரலோகத்தில் எழுதியிருக்குமானால், அது இன்னும் நம்பகமானதா? இல்லை, ஐயா. உண்மையில் இல்லை. சரியாக யூதாஸ் அவர்களோடு இருந்தான். யூதாஸ் அவர்களில் மற்றவர்களைப் போல குட்டையில் உள்ள அவ்வளவு பெரிய ஒரு பெண் வாத்தாக இருந்தான். அவன் சரியாக தொடர்ந்து நீதிமானாக்கப்படுதலின் வழியாக வந்து, பரிசுத்தமாக்கப்படுத லின் வழியாக வெளியே சென்று, வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்து, மகத்தான விளைபயன்களைக் கொண்டிருந்தான், ஆனால் அது பெந்தெகோஸ்தேவுக்கு வந்த போது, அவன் தன்னுடைய நிறங்களைக் காண்பித்தான். 64அதைத்தான் சரியாக இன்றுள்ள ஸ்தாபன சபை களும் செய்துள்ளன: அவர்கள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப்படுதல் வழியாக வந்திருக்கிறார்கள்; ஆனால் அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துக்கு வரும்போது, அவை கள் ஒரு கூட்டம் பாஷைகளாக இருக்கின்றன. அடையாளங் களும், அற்புதங்களும், தூதர்கள் தரிசனமாவதும், அதைப் போன்ற மற்ற காரியங்களும் செய்யப்படுகின்றன, அதனோடு எந்த சம்பந்தமும் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. ஆகையால், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை யும் வஞ்சிக்கும் அளவுக்கு அது மிகவும் நெருங்கி இருக்கிறது. மகிமை. நீங்கள் எப்படியும் என்னை பரிசுத்த உருளையன் என்று அழைக்கப் போகிறீர்கள்; நான் அவ்வாறு தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் இன்னும் உருளவேயில்லை, ஆனால் அவர் என்னிடம் எப்பொழுதா வது கூறியிருந்தால், என்னால் கூடுமான வரை அவ்வளவு கடுமையாக உருண்டு, அங்கே அதனூடாக வருவேன். நான் ஓரளவுக்கு இலக்கை அடைந்திருக்கிறேன், அதற்குள் வந்து சேரவேயில்லை. எனவே-எனவே சரி. 65கவனி, சகோதரனே, அது சத்தியமாக உள்ளது. இதை ஞாபகம் கொள்ளுங்கள், இயேசு வந்த போது - தானியேல், அவன் நீண்ட ஆயுசுள்ளவரிடம் வந்தான், நீண்ட ஆயுசுள்ளவராகிய அவருடைய சிரசின் மயிர் பஞ்சைப்போல வெண்மையாக இருந்தது, அவர் ஒரு நியாயாதிபதியாக இருந்தார் என்பது தான் அதற்கு அர்த்தம், எல்லா நியாயா திபதிகளும் (நீதிபதிகளும்) வெண்பஞ்சினாலான ஒரு சிறு பொய் மயிர் தொப்பியை (Wig) அணிந்திருப்பது போன்றே அவரும் இருந்தார் என்பது தான் அர்த்தம், நியாயாதிபதிகள். வெளிப்படுத்தின விசேஷத்தில் அவருடைய மார்பைச் சுற்றிலும் கச்சை கட்டியிருந்தார் என்பதைக் கவனியுங்கள், இங்கே இடுப்பைச் சுற்றிலும் (கட்டியிருக்கும்) ஒரு ஆசாரி யனைப் போன்றல்ல; இதைப் போன்று மார்பின் மேல், ஒரு நியாயாதிபதியைப் போன்று, நீதிபதியாகிய நீங்கள், நீதிபதி உடுத்துகிற தளர்த்தியான மேலங்கியைப் (போன்று). ஆகை யால் தான் எந்த ஓய்வு நாளிலோ அல்லது எந்த ஞாயிற்றுக் கிழமையிலோ யோவான் அவரைக் காணவில்லை; கர்த்த ருடைய நாளில், அவன் அவரைக் கண்டான், அவர் நியாயாதிபதியாக இருந்த போது கர்த்தருடைய வருகையை, இல்லை, அதுவல்ல, இந்த வேறு நாட்களில் அவன் அவரைக் கண்டான். இப்பொழுது நாம் அவரை இதோ காண்கிறோம். அவர் வரும்போது, நாம் அவரைக் காண்கிறோம் - தானியேல் அவரைக் கண்டான். அவர் பதினாயிரம் பதினாயிரமாக தமது பரிசுத்தவான்களோடு வருகிறார். அது சரிதானா? புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தக மும் திறக்கப்பட்டது ஒவ்வொரு மனிதனும்... பாருங்கள்? அங்கே உங்களுடைய வெதுவெதுப்பான சபை, உறங்கிக்கொண்டிருக்கும் கன்னிகை மேலே வருகிறது. இங்கேயோ உண்மையான சபையானது அவரோடு இருக்கிறது, அது கலியாண விருந்தில் இருந்த பிறகு மகிமையிலிருந்து வருகிறது. அங்கே ஒரு பாவி இருந்தான். வெள்ளை சிங்காசனம் இருந்தது... நியாயசங்கம் உட்கார்ந்தது, வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. ஓ, உங்களுக்குத் தேûவானது இதோ இருக்கிறது. 66இதோ இந்த சபையானது சரியாக மேலே வருகிறது; யூதாஸ் நீதிமானாக்கப்படுதலின் வழியாக வஞ்சித்துக் கொண்டே கிரியை செய்து கொண்டு, பரிசுத்தமாக்கப் படுதலுக்குள் படிப்படியாக முன்னேறி வந்து கொண்டிருந் தான். அவன் புறப்பட்டுச் சென்று வியாதியஸ்தர்களைச் சுகமாக்கினான், சுகமளிக்கிற ஆராதனைகளையும் மற்றும் காரியங்களையும் கொண்டிருந்து விட்டு, திரும்பிச் சென்றான். ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அது வரும்போது, அவன் தன்னுடைய நிறத்தைக் காண்பித்தான். இப்பொழுது, என்னுடைய வெஸ்லி சபை நண்பனே, என்னுடைய நசரீன் சபை, யாத்திரீக பரிசுத்த சபை நண்பனே, உன்னுடைய உணர்வைப் புண்படுத்துவதற் காக அல்ல, அந்நிய பாஷைகளைப் பேசுகிற அந்த ஒரு கூட்டம் ஜனங்களைப் பித்து பிடித்தவர்கள் என்று நீங்கள் அழைக்க வேண்டாம். நீங்கள் அவர்களை ஒரு கூட்டம் பரிசுத்த உருளைகள் என்று அழைக்காதீர்கள், அதைப் போன்று தொடர்ந்து செய்யாதீர்கள். ஏனென்றால் சரியாக அதோ, யூதாஸ் மேலே வருகிறான். நீங்கள், 'முழுமையான பரிசுத்தமாக்கப்படுதல் தான் பரிசுத்த ஆவி' என்று கூறலாம். நான் உங்களோடு வேறுபாடு கொள்கிறேன். பரிசுத்தமாக்கப்படுதல் என்பது கண்ணாடிக் குவளையை (glass) கழுவி தூய்மையாக்குவது தான், பரிசுத்த ஆவியோ அந்தக் கண்ணாடிக் குவளையை நிரப்புவதாகும். அது முற்றிலும் சரியே. சரிதான். இதோ ஒரு-ஒரு கண்ணா டிக்குவளை இருக்கிறது. நான் அதை அங்கே வெளியே கண்டுபிடிப்பேன் என்றால் எப்படியிருக்கும், அது வெளியே எங்கோ ஓரிடத்திலுள்ள கோழி முற்றத்தில் முழுவதும் சேற்றினால் நிறைந்துள்ளது. பெண்ணாகிய நீ சென்று, உன்னுடைய கணவனுக்காக அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி வைப்பாயா? நல்லது, (அப்படியானால்) உன்னுடைய கணவனாக இருக்க நான் விரும்ப மாட்டேன். ஆனால் பிறகு அது... செய்யப்பட்டிருக்குமானால்... நீங்கள் செய்யும் முதலா வது காரியம் என்ன? நீங்கள் அந்த சேறான களிமண்ணி லிருந்து அதை எடுக்கிறீர்கள்; அதுதான் நீதிமானாக்கப்படுதல். பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அதை உள்ளே எடுத்துச் சென்று, அதை கொதிக்க வைக்கும் முறையின் மூலமாக, கிருமிகள் இல்லாமல் தூய்மைப்படுத்தி, சுத்தம் செய்கிறீர்கள். 'பரிசுத்தப்படுத்துதல்' என்பதற்கு அர்த்தம் என்ன? அது ஒரு கலப்பு கிரேக்க வார்த்தையாக உள்ளது, அதற்கு 'சுத்தப் படுத்தி, சேவைக்கென்று ஒதுக்கி வைத்தல்' என்று அர்த்தம். அது சரியே. 'பரிசுத்தப்படுத்துதல்' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் 'சுத்தம் செய்தல்' என்று அர்த்தம். எபிரெய மொழியில், அது, 'பரிசுத்தப்படுத்து' என்ற அர்த்தமாகிறது. கிரேக்க மொழியில், 'பரிசுத்தமாக்கு' என்று அர்த்தமாகிறது. பரிசுத்தப்படுத்து, சுத்தப்படுத்து, பரிசுத்தம் ஆகியவை ஒரே காரியமே. அது என்ன? பரிசுத்தப்படுத்தி சேவைக்கென்று ஒதுக்கி வைத்தல். 'ஆனால் இந்த நீதியின்மேல் பசிதாக முள்ள நீங்கள் பாக்கியவான்கள், நீங்கள் நிறைக்கப்படுவீர்கள் (சேவையில் வைக்கப்பட்டு, முத்திரையிடப்படுவீர்கள்) நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும்.' ஓ, சகோதரனே, அதுதான் பரிசுத்த ஆவியாகிய முத்திரை; அதுவே தேவனுடைய முத்திரை. அது சரியே, முத்திரையிடப்படுதல். 67இப்பொழுது, அடுத்ததாக அதைப் பெற்றுக்கொள்வது யூதர்கள் தான். பெந்தெகோஸ்தேயினர் அதைக் கொண்டிருந் தனர், மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், வித்தியாசமான ஸ்தாபனங்களிலிருந்து வெளியே வந்திருக்கிற அவர்கள் எல்லாருமே இன்றிரவு சரியாக இங்கே உட்கார்ந்திருக்கி றார்கள். நான் தானே ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறேன், அல்லது பாப்டிஸ்டாக இருந்தேன். நான் இன்னும் ஒரு பாப்டிஸ்டு தான், ஆனால் நான் பரிசுத்த ஆவியைக் கொண்ட ஒரு பெந்தெகோஸ்தே பாப்டிஸ்டாக இருக்கிறேன். நான் ஒரு நசரீன், பெந்தெகோஸ்தே, பிரஸ்பிடேரியன், பாப்டிஸ்டு. ஓ, நான் என்ன குறிப்பிடுகிறேன் என்பதும், அதிலுள்ள எல்லாமும் உங்களுக்குத் தெரியும். அது என்ன, வித்தியாசத்தை உண்டாக்குவது பரிசுத்த ஆவி தான், அதுதான் என்னை தேவனுடைய இராஜ்யத்திற்குள் முத்திரை போட்டுள்ளது. அதுதான் ஒவ்வொரு மெதோடிஸ்டையும், ஒவ்வொரு கத்தோலிக்கரையும், ஒவ்வொறு பிரஸ்பிடேரி யனையும் முத்திரையிட்டுள்ளது. நாம் எல்லாரும் மனிதர்களே, ஒரே ஆவியினாலே, நாம் எல்லாரும் ஒரே சபையைச் சேர்ந்தவர்களல்ல, நாம் எல்லாரும் குலுக்குகிற ஒரே கரமாகவும் இல்லை, ஒரே ஜலமாகவும் இல்லை; ஆனால் ஒரே ஆவியினாலே நாம் எல்லாரும் பரிசுத்த ஆவியின் மூலமாக ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நாம் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரையிடப்பட்டுள் ளோம். ஆமென். அதுதான் பரிசுத்த ஆவி. இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, உலகத்தில் இரண்டு வகைப்பட்ட ஜனங்கள் மாத்திரமே இருக்கப் போகிறார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுது எனக்கு நேரமாகிக் கொண் டிருக்கிறது; முடிக்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? பரிசுத்த ஆவி தான் தேவனுடைய முத்திரை என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? இப்பொழுது, நாம் கூடவே நன்மையான காரியங்களையும் அதற்கு எதிரான காரியங்களையும் கொண்டு வந்தோம், இந்த மற்ற வெது வெதுப்பான சபையையும் கொண்டு வந்தோம், வெறுமனே ஒரு ஸ்தாபன சகோதரன் (நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று புரிகிறதா?) அந்த பக்கத்தில் கூடவே போய்க் கொண்டிருக்கிறான். 68அது அங்கே கூறுவது போன்று, அநேகர் அங்கேயுள்ள அந்த எபிரெயர் புத்தகத்தில் அவ்விடத்தைக் கண்டு பிடிக்கிறீர்கள். பாருங்கள்? 'சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய் கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்.'... போன்ற ஒரு தாயை எடுத்துக் கொள்ளுங்கள். யாரோ ஒருவர் என்னிடம், 'அதற்கு என்ன அர்த்தம்? சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல் - இனியிராது.' நல்லது, அவன் இன்னும் அதற்குள் போயிருக்கவேயில்லை. அது சரியே. அவன் வெறுமனே அதைக் குறித்த அறிவை அடைந்திருந்தான். இஸ்ரவேலில் இருந்தது போன்று, இஸ்ரவேலர் வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போகும்படியாக கடந்து போகத் தொடங்கின போது, அவர்கள் வேவுகாரர்களை அனுப்பினார்கள். அவர்களில் இரண்டு பேராகிய யோசு வாவும் காலேபும் திரும்பி வந்து, 'நம்மால் அதை எடுத்துக் கொள்ள முடியும்' என்றனர். மற்றவர்களோ, 'இல்லை, நம்மால் அதைச் செய்ய முடியாது' என்றனர். எனவே அவர்கள் மரிக்கும் மட்டுமாக சரியாக அங்கே அந்த எல்லையிலேயே தொடர்ந்து இருந்தனர். வாக்குத்தத்தத்தை விசுவாசித்தவர்கள் உள்ளே போனார்கள். ஒரு பெண்மணியைப் போன்று... ஒரு பையன் தன்னுடைய ஜீவியத்தில் ஓர் அழைப்பைப் பெறுகிறான்; அவன், 'நல்லது, என்னைப் பள்ளிக்கு அனுப்பும்படியாக பொருட்களை கழுவி தூய்மையாக்கும் இடத்தின் மேல் (washboard) அம்மா (அவைகளைக்) கழுவினார்கள். நான் ஒரு ஊழியக்காரனாக இருக்க விரும்புகிறேன்' என்றான். சரி, அவன் ஒரு ஊழியக்காரனாக ஆகிறான். அவன் தூரமாகச் சென்று, தன்னுடைய டாக்டர் பட்டத்தைப் (Ph.D.) பெறுகிறான், அல்லது தன்னுடைய டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொள்கிறான், அல்லது அது என்னவாயிருந்தாலும், அவன்-அவன் அதைப் பெற்றுக்கொள்கிறான், மேலும் அவன் திரும்பி வந்து, தன்னுடைய இளங்கலைப் பட்டத்தையோ (Bachelor of Art) அல்லது அது என்னவாயினும் அதைப் பெற்றுக்கொள்கிறான். அவன் திரும்பி வருகிறான், அவன் எப்படியும் ஒரு ஊழியக்காரனாக இருக்கிறான். அதன்பிறகு அவன் எப்போ துமே இச்சை கொள்கிறான், மற்றும் அவனுடைய சபையில் காரியங்களைச் செய்கிறான், பெண்கள் மற்றும் வித்தியாசமான காரியங்கள். ஒருக்கால் அவன் புகைபிடிக்கலாம், அவன் அதைச் செய்யக்கூடாது என்று அவனுக்குத் தெரியும். அவன், 'தேவனே, அது ஒரு தேவனுடைய மனிதனுக்கு நல்லதாகத் தோன்றவில்லை. அப்படியானால் அந்தக் காரியத்தை என்னை விட்டு எடுத்துப் போடும்' என்று கூறுகிறான். (அப்போது) அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான். அவன் மறுபடியுமாக எல்லைக்கோட்டுத் தேசத்திற்கு வந்து, ஆராய்ந்து பார்த்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் காண்கிறான், ஆனால் அவனோ, 'நான் இதைச் செய்வேன் என்றால், அந்த ஸ்தாபனம் என்னை வெளியே தள்ளி விடும்' என்று கூறுகிறான். உங்களுக்கு விருப்பமானால், திரும்பிச் சென்று, அந்த எல்லைக்கோட்டு தேசத்திலேயே மரித்து விடலாம். 69'பாவஞ்செய்கிறவன்...' பாவம் என்பது என்ன? அவிசுவாசம். யாராவது ஒருவர், அவிசுவாசம் அல்லாமல் மற்றபடி பாவத்திற்கு ஒரு விளக்கத்தை என்னிடம் கூறும்படி நான் விரும்புகிறேன். 'விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.' அது சரியே. '... அவன்' முதற்கண் நீங்கள் வரக் கூட இல்லை... என்ன... விபச்சாரம் செய்தல் பாவமல்ல. புகைப்பிடிப்பதோ, குடிப்பதோ பாவ மல்ல; அது அவிசுவாசத்தின் தன்மைகளாக (attributes) உள்ளது. நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தால், அதைச் செய்யவே மாட்டீர்கள். புரிகிறதா? அது சரியே. அது முற்றிலும் சரியே. பாருங்கள், அவ்விதமாகத்தான் அது இருக்கிறது, அவிசுவாசம். அது என்ன? 'நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசித்தால்,' இன்றிரவு பரிசுத்த ஆவி இல்லாமல் இங்கே வெளியே இருக்கும் பிரஸ்பிடேரியனோ, மெதோ டிஸ்டோ, அல்லது நீங்களோ. 'சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர் களாக இருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராது.' நீங்கள் தேவனுக்கு உங்கள் முதுகைத் திருப்பி விடுகிறீர்கள்; அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களைத் தானே முத்திரை போட்டு (seal away) மிருகத்தின் முத்திரையை எடுத்துக்கொண்டு, காயீன் செய்தது போன்று, தேவனுடைய சந்நிதியை விட்டுத் தூரமாய் போய் விடுகி றீர்கள். அது அதிர்ச்சியாக உள்ளது, இல்லையா? சரியாக எல்லைக்கோடு வரை வந்து, பிறகு அதை விசுவாசிக்காமல் இருந்து விடுகிறீர்கள்... நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் அதை எடுத்துக்கொள்ள பயப்படுகிறீர்கள். 'சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, அவன் மனப் பூர்வமாய் பாவம் செய்கிறவர்களாக இருந்தால் (மனப்பூர்வ மாய் அவிசுவாசிக்கிறவர்களாக இருந்தால்)...' ... அதை என்னோடு திரும்பவும் சொல்லுங்கள், 'சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, அவன் மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொரு பலி இனியிராமல், பட்சிக்கிற நியாயத்தீர்ப்பு (fiery judgment) வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதல் இருக்கும், 'நான் பதிற்செய்வேன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்.' ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழு கிறது பயங்கரமுமாயிருக்குமே. 70அது சரியாக உங்களிடம் கொண்டு வரப்பட்டு, அது தேவனுடைய முத்திரை என்று உங்களுக்குக் காண்பிக்கப் பட்ட பிறகு, கௌரவத்தின் நிமித்தமாக, நீங்கள் ஏதோ வொன்றை விட்டு விட்டு, அதை இழந்து விட வேண்டி யிருக்கிறது, அல்லது அதைப் பெற்றுக்கொள்ளும்படியாக உங்கள் ஸ்தாபனத்தையோஅல்லது-அல்லது ஏதோவொன் றையோ விட்டு விட்டு, பிறகு அதிலிருந்து தூரமாக நடந்து போய் விடுகிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களைத் தானே இராஜ் யத்திற்கு வெளியே முத்திரை போட்டு விடுகிறீர்கள்: மிருகத்தின் முத்திரை. தேவன் ஆபேலிடம், அல்லது காயீனிடம் கூறின போது, 'அப்படியே அங்கு சென்று, உன்னுடைய சகோதர னைப் போலத் தொழுதுகொள். ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து இங்கே வந்து, உன்னுடைய சகோதரனைப் போன்றே தொழுதுகொள், (அப்போது) நீ சரியானதைச் செய்வாய். உன்னுடைய சகோதரன் செய்வதைப் போலச் செய்வாயானால், நீ சரியாக இருக்கிறாய்' என்றார். ஆனால் அவனோ அதைச் செய்யவில்லை, 'என்னால் பலியிட முடிந்த சிறந்தது இதுதான். நீர் இதை ஏற்றுக்கொள்ள லாம் அல்லது இதை விட்டு விடலாம்' அவன் அடை யாளமிடப்பட்டு, தேவனுடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டுப் போனான். 71இப்பொழுது, இது ஒருக்கால் புண்படுத்தலாம், ஆனால், சகோதரனே, நான் அந்த மகத்தான புயல் வீசிக் கொண்டிருக்கும் காலையில், நான் அங்கு போய் சேரும் போது, எல்லா இடங்களிலும் அக்கினி விழுந்து கொண் டிருக்க, ஜனங்கள் கதறி அழுது கொண்டிருக்க, அந்தப் பழைய ஜீவ படகு வீசியடித்துக் கொண்டு போவதை நான் கேட்கும் போது, சகோதரனே, என்னுடைய அனுமதிச் சீட்டு சரியாக இருப்பதில் நிச்சயமுடையவனாயிருக்க விரும்புகி றேன். அந்த வயதான கறுப்பின மனிதன், 'கர்த்தாவே, நான்- நான்-நான் நீண்ட காலத்திற்கு முன்பு உம்மிடம் அதைக் குறித்துப் பேசியிருக்கிறேன்; ஆற்றண்டையில் எனக்கு எந்த தொந்தரவும் நேரிட எனக்கு விருப்பமில்லை' என்று கூறினது போல் அது உள்ளது. அது சரியே. ஆற்றண்டையில் எந்த தொல்லையும் ஏற்பட எனக்கு விருப்பமில்லை, இல்லை, ஐயா. இப்பொழுதே நீங்கள் அதை ஆயத்தப்படுத்துவது நல்லது. இப்பொழுது, இந்த இரவுக்குப் பிறகு, அது உங்கள் கரங்களின் மேல் உள்ளது. 'சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, மனப்பூர்வமாய் அதை அவிசுவாசிக் கிறவன்,' கர்த்தருடைய தூதனானவர் வருகிறதையும், இந்தக் கடைசி நாளில் யாவும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறதையும் கண்டும், லூத்தர் மூலமாக நித்திய சுவிசேஷம் பிரசங்கம் பண்ணப்படுவதைக் கண்டும், ஜான் வெஸ்லி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவதைப் பிரசங்கம் பண்ணுவதைக் கண்டும், இப்பொழுது முத்திரைக்கு விரோதமாக இங்கே உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கும் சுவிசேஷத்தைக்கண்டும் (அவிசுவாசிக்கிறவனே); இதைப் புறக்கணிக்க வேண் டாம், கிறிஸ்துவிடம் நெருங்கி வாருங்கள். நீங்கள், 'இப்பொ ழுது, சகோதரன் பிரன்ஹாமே, அதுதான் முத்திரையா?' என்று கேட்கலாம். ஆமாம். 72நான் இங்கே உங்களுக்கு ஒரு நிமிடம் ஒரு சிறு வேதவாக்கியத்தைத் தரட்டும். நீங்கள் என்னோடு யாத்திரா கமத்திற்குத் திருப்ப விரும்புகிறேன், அல்லது நீங்கள் அதற்கு திருப்ப வேண்டியதில்லை, அதை சற்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள். யாத்திராகமம் 21:6. ஒரு அடிமை விற்கப் பட்டிருந்து, அங்கே யூபிலி வருஷம் வருமாகில். அந்த யூபிலி வருஷத்தில், யூபிலி ஆசாரியன் எக்காளத்தை ஊதுவான். அது எத்தனை பேருக்குத் தெரியும்? எக்காளம் எக்காளமாக இருந்து, அவன் அதை ஊதினான், அவன் அவ்வாறு எக்காளம் ஊதின போது, ஒவ்வொரு அடிமையும் தன்னுடைய வீட்டிற்கு விடுதலையோடு திரும்பிப் போக முடிந்தது. அவன் வெளியே வயலில் மண்வெட்டியைக் கொண்டு கொத்திக் கிளறிக் கொண்டிருந்து (chopping), இங்கேயிருக்கிற யாரோ ஒருவன் ஒரு சாட்டையால் அவனை அடித்துக் கொண்டிருந்தாலும், அவன், 'என்ன அது? அது என்ன?' என்று கேட்பான். சுவிசேஷ எக்காளம் நற்செய்தியாக தொனித்துக் கொண்டிருக்கிறது. (உடனே) அந்த மண்வெட்டியை கீழே எறிந்து விட்டு, திரும்பிப் பார்த்து, 'நீ இனியும் என்மேல் ஆளுகை செய்வதில்லை. நான் என்னுடைய மனைவியிடத்திற்கும் பிள்ளைகளிடத்திற்கும் வீட்டிற் குப் போகிறேன். நான் இங்கே அடிமையாக விற்கப்பட்டேன். ஆனால் அந்த எக்காளம் ஊதப்படுவது உனக்குக் கேட்கி றதா? அதற்கு நான் ஒரு எபிரேயன் என்று அர்த்தம். எனக்கு ஒரு உரிமை உண்டு; நான் பிறப்புரிமையை உடைய ஒரு மனிதன். எனக்கு ஒரு உரிமை உண்டு. யாருடைய பணமும் இன்றி நான் விடுதலையோடு போக முடியும்' என்று கூறுவான். நீங்கள் இதைச் செய்வீர்களா அல்லது நீங்கள் அதைச் செய்வீர்களா என்றல்ல. முழு காரியமும் கிருபையாக இருந்தது என்பதைப் பாருங்கள் (ஆமென்.), நீங்கள் செய்தால் என்பதல்ல, ஆனால் நீங்கள் அந்த யூபிலி வருஷத்தில், அந்த எக்காளத்தைக் கேட்பீர்களானால். யூபிலி வருஷமாகிய அந்த அநுக்கிரக வருஷத்தைக் குறித்து கர்த்தர் பிரசங்கம் பண்ணினார். நாம் எவ்வளவு அதில் தொடர்ந்து போக முடியும் (ஆனால் நான் அந்தக் கடிகாரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.) 73ஆனால் நீங்கள் எக்காளத்தைக் கேட்பீர்களானால்... பாருங்கள், கேட்பது, விசுவாசம் எதனால் வருகிறது? கேள்வியினால். இப்பொழுது, வெறுமனே உங்களுடைய காதினால் கேட்பதல்ல - அதுவல்ல, ஆனால் நீங்கள் அதைக் கேட்பீர்களானால், நீங்கள் அதைப் புரிந்து கொண்டு, அதை ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. 'நீங்கள் கூறுவதை நான் கேட்டு, அதை விசுவாசிக்கிறேன்.' புரிகிறதா? அது தான் கேட்பதென்பது. ஸ்தேவான், 'வணங்காக் கழுத் துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே...' என்றான். பாருங்கள், விருத்தசேதனம் பெறாதவர்கள்... அவர்களால் அதைச் செவிகளைக் கொண்டு கேட்க முடிந்தது, ஆனாலும் அவர்கள் விருத்தசேதனம் பெறாதவர்கள், அவர்களால் அதை விசுவாசிக்க முடிய வில்லை. புரிகிறதா? இருதயத்திலும் செவிகளிலும் விருத்த சேதனம் பெறாதவர்கள், அதைப் புரிந்து கொள்ளுங்கள். 'ஓ, அவை எல்லாமே எனக்கு காயீனைப் போல ஒரு பரம இரகசியமாக உள்ளது. இதை ஏற்றுக்கொள்ளும் அல்லது இதை விட்டு விடும். நான் சபையைச் சேர்ந்திருக்கிறேன், என்னால் செய்ய முடிந்த நல்ல காரியம் அவ்வளவு தான்.' சரி, காயீனே. நீ மிருகத்தின் (முத்திரையால்) முத்திரை யிடப்பட்டு, தூரமாக உன்னுடைய ஸ்தாபனத்திற்கு தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ கிறிஸ்துவிடம் வந்து, பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட முடியும். நீ உன்னு டைய தெரிந்து கொள்ளுதலைச் செய்யலாம். இப்பொழுது, கவனியுங்கள். நீங்கள் சுவிசேஷ எக்காளத்... ஐ கேட்கிறீர்கள். சுவிசேஷ எக்காளம் என்பது என்ன? நற்செய்தி, பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார். அவர் இங்கேயிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அது கிரியை செய்வதைக் கவனியுங்கள்; அது என்ன செய்கிறது என்று பாருங்கள். அதுதான் நற்செய்தி. 74இப்பொழுது, இந்த மனிதன், (மண்வெட்டியால்) வெட்டிக்கிளறிக் கொண்டிருந்து, 'நல்லது, எனக்குப் போக விருப்பமுண்டு என்று நான் நம்பவில்லை' என்று கூறினால் என்னவாகும். ஓ, ஓ, அதைப் புறக்கணித்தால், அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள்... எடுத்து. அப்போது அவனுடைய எஜமான் அவனை அந்த மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகோஸ்தே, அல்லது பிரஸ்பிடேரியன் சபைக்கு அவனை அழைத்துச் சென்று, அவனை மேலே சுவர் பக்கமாக கொண்டு போய், அவனுடைய காதை சுவற்றின் மேல் உயர்த்தி வைத்து, ஒரு கம்பியை (awl) எடுத்து, அவனுடைய காதில் ஒரு துளையிட்டு, அவனை அடையாளமிடுவான். அதற்கு மேல் அவன் ஒருபோதும் விடுதலையடையவே மாட்டான். நீங்கள் சத்தியத்தைக் கேட்டும், அதைப் புறக்கணிப்பீர் களானால், அப்போது உங்கள் காது கேட்பதை நிறுத்தி விடும், அதற்கு மேல் நீங்கள் ஒருபோதும் அதைக் கேட்கவே மாட்டீர்கள். நீங்கள் தேவனுடைய சந்நிதியை விட்டு வெளியே போய், 'என்னுடைய தாயார் பிரஸ்பிடேரியனாக இருந்தாள், நான் மற்றவர்களைப் போல அவ்வளவு நல்லவன் தான்' என்று கூறிக் கொண்டிருப்பீர்கள். உங்கள் தாயார், தான் கொண்டிருந்த வெளிச்சம் எல்லாவற்றிலும் ஜீவித்தார்கள், ஆனால் அது நீங்களல்ல. அது சரியே. காய்பா தனக்குத் தெரிந்த எல்லா வெளிச்சத்திலும் ஜீவித்தான், ஆனால் இயேசு அந்நேரத்தில் பூமியில் இருந்தார். அந்த வைதீக விசுவாசிகள் (orthodox believers) எல்லாரும், அவர்கள்-அவர்கள் தங்களுடைய மகத்தான அமைப்புகளையும், ஸ்தாபனங்களையும் மற்றும் ஒவ்வொன்றையும் கொண்டிருந்தார்கள்; அவர்கள் தாங்கள் கொண்டிருந்த எல்லா வெளிச்சத்திலும் நடந்தார்கள்; ஆனால் அந்த ஒளியோ சரியாக அவர்கள் முன்பாக இருந்தது, ஆனால் அவர்களோ வணங்காக் கழுத்துள்ளவர் களும், இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களுமாயிருந்தார்கள். அதைச் செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. அப்போது தேவன் அவர் களை முத்திரை போட்டார்; அவர்கள் அங்கே சரியாக எருசலேமிலேயே அவர்களைத் தண்டித்து, அவர்கள் மரித்து, நரகத்திற்குப் போனார்கள். அது சரியே. உங்களுடைய தெரிந்து கொள்ளுதலைச் செய்யுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பரிசுத்த ஆவியினால் நிறையப் படுங்கள். அவருடைய ஆவியால் நிறைக்கப்பட்டு, உங்கள் தீவட்டிகளில் (திரி) வெட்டிக் கத்தரித்து சீராக்கப்பட்டு, மங்காமல் தெளிவாயிருக்கட்டும். 75சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும். அது சரியே. சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் ஏன் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் ஏன் அதனிடம் வரக் கூடாது? நீங்கள் முத்திரையிடப்பட்டு விடக்கூடாது. நீங்கள் மரித்தவர்களாய் இருந்து விடாதீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, இராஜ் யத்திற்குள் முத்திரை போடப்படுங்கள். மிருகத்தின் முத்திரை என்பது என்ன? பரிசுத்த ஆவியைப் புறக்கணிப்பது தான் மிருகத்தின் முத்திரையாகும். புரிகிறதா? எல்லைக்கோட்டு... பாருங்கள்? அவன் ஒருமுறை சத்தியத்தை அறியும் அறிவுக்கு வந்த பிறகு... 'ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும்... கூடாத காரியம்.' புரிகிறதா? சத்தியத்தை அறியும் அறிவை அடைந்து, அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்வதைக் கண்டும், அதை அறியும் அறிவைக் கண்டும், அது இங்கே இருக்கிறது என்பதைக் கண்டும், அது கிரியை செய்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டும், அது சரி என்று கண்டும், சத்தியத்தை அறியும் அறிவை கொண்டிருந்தும், பிறகு மறுபடியுமாக அதைப் புறக்கணிப்பார்களானால், 'பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராது.' ஆதியிலே காயீன் (செய்தது) போன்று, அதுவே முடிவிலும் இருக்கும். அது எபிரெயர் 10வது அதிகாரம். முத்திரை போடப்பட்டு, தேவனுடைய சந்நிதியை விட்டு (விலகி) தூரமாகச் சென்று, தங்கள் மீதியுள்ள நாட்களில் ஒரு பாப்டிஸ்டாகவோ, பிரஸ்பிடேரியனாகவோ, அல்லது ஒரு பெந்தெகோஸ்தேயினனாகவோ, ஸ்தாபனத்தின் மூலமாக மட்டுமே இருப்பார்கள். அப்போது அவர்கள் கிறிஸ்துவை சேவிப்பதற்குப் பதிலாக ஸ்தாபனத்தையே சேவிப்பார்கள், அவர்கள் தங்கள் மதக் கோட்பாடுகளையே சேவிப்பார்கள். நீங்கள் ஒரு கத்தோலிக்கனாகவோ, ஒரு மெதோடிஸ்டாகவோ, ஒரு புரட்டஸ்டன்டாகவோ, அல்லது நீங்கள் யாராகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் - இல்லை... நீங்கள் கிறிஸ்து வினுடையவர்களாக இருந்தால், பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடைய வர்களாக இல்லை என்றால், இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் முத்திரையிடப்பட்டு, உங்கள் ஸ்தாபனத்தையே விரும்பு வீர்கள் (cater); அப்போது உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவ்வளவு தான், முடிவில் நீங்கள் ஆக்கினைத் தீர்ப்படைவீர்கள். 76எங்கள் பரலோகப் பிதாவே, இந்த மணி வேளைகள் இருளாகிக்கொண்டே போகின்றன. காலம் சமீபமாயுள்ளது.'நாடுகள் உடைகின்றன; இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது.' வேதாகமம் முன்னுரைத்த ஒவ்வொரு அடையாளமும் சம்பவித்துக் கொண்டேயிருக்கின்றது. இந்தக் காரியங்களை எல்லாம் நீர் வாக்குப்பண்ணியிருக்கிறீர், அது நடக்கும் என்று நீர் சொல்லியிருக்கிறீர்; அது உண்மை என்று நாங்கள் அறிவோம். பிதாவே, நீர் இன்று இரக்கமாயிருந்து, இழக்கப்பட்டவர்களை இரட்சிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இதை அருளும். அவர்கள் தாமே பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்பட்டு, இரட்சகரை தங்களை விட்டு திருப்பி அனுப்பி விடாதிருப்பார்களாக. இயேசுவின் நாமத்தில், இதை அருளும். ஆமென். 77ஓ, என்னே. நான் சத்தியத்தையே சொல்லியிருக் கிறேன் என்பது எனக்குத் தெரியும்; நான் அதை அறிவேன். 'என் ஆடுகள் என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கும்.' இயேசு அங்கே கூறினது போன்று, அவர் இங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொள்வது என்ற அடையாளத்தை இயேசு சொல்லியிருக்கிறாரா? கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதே சரியாக இங்கேயிருக் கிறார். அவர் அந்நிய பாஷைகளில் பேசி, அர்த்தம் உரைப்பதை நான் கேட்கிறேன். அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வதை நான் காண்கிறேன். அவர் (செய்வதை)... கூட நான் காண்கிறேன். கடைசி அடையாளம் மேசியாவின் அடையாளமாக (Messiahic sign) இருக்க வேண்டியிருந்தது. இயேசு, 'அப்படியே...' என்றார். சோதோம் சுட்டெரிக்கப்படுவதற்கு சற்று முன்பு, ஆபிரகாமுக்கு இருந்த கடைசி அடையாளம் என்ன? அந்த தூதனானவர் அங்கே நின்று, தேவன் தாமே மாம்சத்தில் இருந்தார். நாம் அதைக் குறித்துப் பேசியிருக்கிறோம், இல்லையா? ஆபிரகாம் அவரை, தேவனை, 'ஏலோகிம்' என்று அழைத்தான். அவர் அங்கே ஒரு அந்நியராக நின்றார், அவர் ஆபிரகாமை எப்படி அழைத்தார் என்பதைக் கவனித்துப் பாருங்கள்: அவர் ஆபிரகாமை அவனுடைய புதிய நாமத்தினாலே அழைத்தார்; அவன் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான், அந்த நாமத்தைப் பெற்றிருந்தான். அவன் ஆபிராம் என்பதற்குப் பதிலாக ஆபிரகாமாக இருந்தான். சாராள் தன்னுடைய இளவரசி என்ற பெயரினாலே அவள் அழைக்கப்பட்டாள். 'ஆபிரகாமே, உன்னுடைய மனைவியாகிய சாராள் எங்கே?' அவனுக்கு விவாகம் ஆனது என்று அவருக்கு எப்படி தெரிந்தது, அவனுக்கு ஒரு மனைவி உண்டு என்று அவருக்கு எப்படி தெரிந்தது, அவளுடைய பெயர் சாராள் என்பதும் அவருக்கு எப்படி தெரிந்தது? அவன், 'அவள் உமக்குப் பின்னால் கூடாரத்தில் இருக்கிறாள்' என்றான். 'நான் ('ஐ', அங்கே தனிப்பட்ட பிரதிபெயர் உள்ளது), செய்யப் போகிறேன், நான் ஒரு உற்பவ காலத்திட்டத்தில் உன்னைச் சந்திக்கப்போகிறேன். நான் இதைச் செய்யப் போகிறேன் என்று உனக்குத் தெரியும்; நான் இதை உனக்கு வாக்குப்பண்ணியிருக்கிறேன். நீ 25 வருடங்களாக இதற்காக காத்துக் கொண்டிருக்கிறாய்' என்றார். சாராள், 'நான் கிழவியும், பிள்ளை பெறும் காலத்தை கடந்து போய் விட்டதையும் காணும்போது, என் ஆண்டவ னோடு எனக்கு எப்பொழுதாவது இன்பம் உண்டாயிருக் குமோ, அவரும் கூட முதிர்ந்த வயதுள்ளவராயிருக்கிறாரே' என்று தன்னுடைய இருதயத்தில் நகைத்தாள். அந்த தூதனானவரோ, 'சாராள் ஏன் நகைத்து, 'அது சம்பவிக்க முடியாது' என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்' என்று கேட்டார். இயேசு, 'சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்' என்று கூறியிருக்கிறார். 78அவர் எவ்வாறு - அவர் எவ்வாறு தேசங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்? அவர் பேதுருவிடம் நின்ற போது, 'உன்னுடைய பெயர் சீமோன்; நீ யோனாவின் மகன்' என்றார். அவன், 'ஓ, அது-அதுதான் அது' என்றான். பிலிப்பு வந்து, நாத்தான்வேலை அழைத்து, அவனிடம் கூறின போது, நாத்தான்வேல், 'நாசரேத்திலிருந்து யாதொரு நன்மையும் வர முடியாது' என்றான். அதற்குப் (பிலிப்பு), 'வந்து பார்' என்றான். அவன் வந்து, அவனைப் பார்த்த போது, அவர், 'இதோ, கபடற்ற இஸ்ரவேலன்' என்றார். அதற்கு அவன், 'ரபீ, என்னை உமக்கு எப்போது தெரியும்?' என்று கேட்டான். 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும் போது, உன்னைக் கண்டேன்' என்றான். 79அவர் மேலே சமாரியாவுக்குப் போகும் வழியில் சென்றார். அது யூதர்களாக இருந்தது, இப்பொழுது-இப்பொழுது சமாரியர்கள். புறஜாதிகள் அல்ல, நாம் எந்த மேசியாவுக்காகவும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை. எங்களுக்குப் பின்னால் ஒரு சங்கம் இருந்தது; நாங்கள் அஞ்ஞானிகளாக இருந்து, (பாருங்கள்?) விக்கிரகங்களை வழிபட்டு வந்தோம். எனவே அவர் அதை புறஜாதிகளுக்கு முன்பாக நடப்பிக்கவில்லை. ஆனால் அவர் அதை யூதர்களிடமும் சமாரியர்களிடமும் செய்திருப்பாரானால்... அங்கே மூன்று மனித இனங்கள் மாத்திரம் தான் உண்டு: காம், சேம், மற்றும் யாப்பேத்தின் ஜனங்கள். இப்பொழுது, அவர் அதை சமாரிய ஸ்திரீயிடம் செய்திருப்பார் என்றால், அவர் அவளிடம் போய், அவர், 'தாகத்துக்குத்தா' என்று கேட்டார். அவள், 'ஆ, ஒரு சமாரிய பெண்ணிடம் யூதராகிய நீர் சற்றே - இவ்விதம் கேட்பது உமக்கு வழக்கமில்லையே' என்றாள். அவர், 'ஆனால் நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருப்பாயானால்' என்றார். 'அப்படியானால், போய், உன்னுடைய புருஷனை அழைத்துக்கொண்டு வா' என்றார். அவள், 'எனக்குப் புருஷனில்லை' என்றாள். 'அது சரிதான்; உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்' என்றார். அவள், 'ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். இப்பொழுது, எங்களுக்கு இது தெரியும், இங்கே எங்கள் தேசமாகிய சமாரியாவில் எங்களுக்கு-எங்களுக்கு நல்ல போதகர்கள் உண்டு. மேசியா வரும்போது, இதைச் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நீர் யார்?' என்றாள். அவர், 'நானே அவர்' என்றார். அவள் பட்டணத்திற்குள் போய், 'நான் செய்தவைகளை எனக்குச் சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள்: இவர் அதே மேசியா அல்லவா?' என்றாள். அவர் அந்த ஸ்திரீயிடம் கூறினதின் நிமித்தமாக அவர்கள் அவரை மேசியா என்று விசுவாசித்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஹாலிவுட்டின் பிரசங்கிமார்கள் பாதியளவு அறிந்திருந்ததைக் காட்டிலும் அவள் தேவனைக் குறித்து அதிகம் அறிந்திருந்தாள். ஹா, அது சரியே. அவளுடைய (அந்த) நிலைமையிலும். ஏனென்றால் அவள் பரிசுத்த ஆவியினால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தாள். அவ்விதமாகத்தான் காரியங்கள் உள்ளன. அவர் தேவனாயிருக்கிறார்; அவர் இன்னும் தேவ னாயிருக்கிறார்; அவர் நிச்சயமாக தேவனாகத்தான் இருக்கிறார். 80அந்தக் காலையில், சகேயு கீழ் நோக்கிப் பார்த்து, இயேசு இருந்த இடத்திலிருந்து தன்னை மறைத்துக் கொள்ளப் போவதாக இருந்த போது, மரத்திலிருந்த அவனைக் கவனித்துப் பாருங்கள் (உங்களுக்குப் புரிகிறதா?). அவர் அருகில் வந்த போது, நின்று, 'சகேயுவே, இறங்கி வா, நான் போஜனம் பண்ணும்படி, உன்னோடு கூட (உன்) வீட்டிற்கு வரப்போகிறேன்' என்றார். அங்கே வெளியிலிருந்த அவரைத் தொட்டக் குருடனா கிய பர்த்திமேயுவைக் கவனித்துப் பாருங்கள். 'தாவீதின் குமாரனே, மனமிரங்கும்.' அது இயேசுவை நிறுத்தினது, அந்த பெரும் அமளியான இரைச்சல் எல்லாமே தொடர்ந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தன. பாருங்கள், அவரோ, அதை அறிந்து கொண்டார். அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு விட்டு, தூரமாய் ஓடிச்சென்று, உட்கார்ந்து கொண்ட அந்த ஸ்திரீயைக் கவனியுங்கள். பாருங்கள்? அவர், 'என்னைத் தொட்டது யார்?' என்று கேட்டார். பேதுரு அவரைக் கடிந்து கொண்டு, 'ஏன் அவ்விதமான ஒரு காரியத்தைக் கூறுகிறீர்? உம்மோடு கரங்களைக் குலுக்கி உம்மை ஒரு ரபீ என்று அழைத்துக் கொண்டிருக்கிற இங்கேயுள்ள இந்த ஜனங்களைக் கவனியும்,' அல்லது அதைப் போன்ற காரியங்களைக் கூறினான். 'ஏன் அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூறுகிறீர்?' 'ஆனால் நான் பலவீனமடைந்திருக்கிறேன். என்னிட மிருந்து வல்லமை, பலம் புறப்பட்டு போனது' என்றார். அவர் சுற்றுமுற்றும் நோக்கின போது, அதைச் செய்திருந்த அந்தச் சிறு பெண்ணைக் கண்டு, 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; உன்னுடைய உதிரப்போக்கு நின்று விட்டது' என்றார். இப்பொழுது, புறஜாதியாரின் காலம் முடிவடையும் நேரத்திலும் அவர் அதே காரியத்தையே வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அது வேதாகமத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. இப்பொழுது, அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்கிறாரா? அதை விசுவாசிக்கும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். ஆமென். எவ்வளவாக அவர் இங்கே இருக்கிறார் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் வெறுமனே விசுவாசியுங்கள், அதை சந்தேகப்படாதீர்கள்; நீங்கள் அதை விசுவாசியுங்கள். வேதாகமம், 'உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்...' என்று கூறுகிறது. அது சரியா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். 81அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்மணி தன்னுடைய மகளுக்காக ஜெபித்துக் கொண் டிருக்கிறார்கள், அவளுக்குள்ளே இரத்தப்போக்கு இருக்கிறது. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சரி, அப்படியானால் நீங்கள் கேட்பதை உங்களால் கொண்டிருக்க முடியும். ஆமென். அந்த நபரை எனக்குத் தெரியாது, என்னுடைய ஜீவியத்தில் அவர்களை ஒருபோதும் கண்டதில்லை. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? 82சரியாக பின்னால், அங்கே பின்னால், அதோ அங்கே அந்த ஒளி நின்று கொண்டிருக்கிறதை நீங்கள் காணவில்லையா? அது அங்கே பின்னால் இந்தக் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு கறுப்பின பெண்மணியின் மேலாக உள்ளது. அவள் ஒரு நீல நிற ஆடையையும், ஒருவித சிகப்பு நிறத்தோடு கூடிய வெள்ளை நிற கழுத்துப் பட்டையையும் அணிந்திருக்கிறாள். அவள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மைத்துனருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது கர்த்தர் உரைக்கிறதாவது. அங்கே பின்னால், நான் அழைத்த பெண்மணியே, எழுந்து நில். அது உண்மை, இல்லையா? போகலாம்... நீ விசுவாசிக்கிறபடியே, ஆகக்கடவது. அந்தப் பெண்ணை என்னுடைய ஜீவியத்தில் நான் ஒருபோதும் கண்டதேயில்லை. நான் எனது கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறேன்; நான் அவளை ஒருக்காலும் கண்டதில்லை. அவர் இங்கேயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவள் என்ன செய்தாள்? அவள் ஏதோவொன்றைத் தொட்டாள். 83நான் என்னுடைய முதுகைத் திருப்புகிறேன். 'நீர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்' என்று கூறுகிறார்கள், மனோசாஸ்திரம். கவனியுங்கள், இதை விசுவாசியுங்கள். தேவனாகிய கர்த்தர் தம்மைத்தாமே தேவனென்று காண்பிக் கட்டும். இப்பொழுது, எனக்கு முன்பாக நின்று கொண்டிருக் கிற ஒரு மனிதனைக் காண்கிறேன். நான் அப்படியே பேசுகிறேன், அது யாராயிருந்தாலும். அந்த மனிதர் ஒரு இருதயக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கருமை நிற சூட்டையும், ஏதோவொரு வித சிறு கழுத்துப்பட்டையைப் (colonel tie) போன்ற ஒன்றையும் அணிந்திருக்கிறார். அவர் ஒரு சிறிய மனிதர். இன்னும் அவர் தம்முடைய காலூன்றி நிற்கிறாரா? அவருடைய பெயர் கோட்ஸ். உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசியும், நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், உமக்கு சுகம் கிடைக்கும். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்குச் சென்று, சுகமாயிரும். நீர் விசுவாசிக்கிறீரா? நான் என்னுடைய கரத்தைப் பிடித்துக் கொள்கிறேன்; நான் அவரை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. 84நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கரங்களை ஒருவர் மற்றவர் மேல் வையுங்கள். 'விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.' சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும், மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டு கொள்வாய். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, ஒருவர் மற்றவருக்காக ஜெபம் பண்ணுங்கள். உங்கள் கரங்களை வையுங்கள்... ஒருவர் மற்றவருக்காக ஜெபம் பண்ணுங்கள், அப்போது நீங்கள் சுகமடையலாம். நாளை இரவுக்காக உங்களிடம் ஒரு ஜெப வரிசையும் கூட இருக்க வேண்டியதில்லை. 85தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமே. மிருகத்தின் முத்திரை என்பது அதைப் புறக்கணிப்பது தான். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எத்தனை பேருக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வேண்டும், உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். எத்தனை பேர் பரிசுத்த ஆவியின் மூலமாக, தேவனுடைய இராஜ்யத்திற்குள் முத்திரை போடப்பட விரும்பு கிறீர்கள், உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். எழுந்து நின்று அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அது சரியே. மேலே பால்கனியில் உள்ளவர்களே, அதைப் புறக்கணித்து விடாதீர்கள். உங்கள் கால்களை ஊன்றி எழுந்து நின்று, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆமென். எழுந்து நின்று அதை விசுவாசியுங்கள். இப்பொழுது, பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற நீங்கள் எல்லாரும், அங்கே நின்று கொண்டிருக்கிறவர்களைப் பாருங் கள், நீங்கள் எழுந்து நின்று, அவர்கள் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். நீங்கள் எழுந்து நின்று, பரிசுத்த ஆவியைத் தேடிக் கொண்டிருக்கிறவர்கள் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். ஊழியக்காரர்கள், இவ்விதமாக தங்கள் கரங்களை மேலே உயர்த்தட்டும். 'அவர்கள் (ஆள)னுப்பி, பேதுருவையும் யோவானையும் அழைத்து வந்தார்கள், அவன் தன்னுடைய கரங்களை அவர்கள் மேல் வைத்தான், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார்.' கர்த்தராகிய இயேசுவே, நான் இந்த ஆராதனையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். கர்த்தாவே, அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களைக் குணமாக்கும். நீர் இங்கேயிருக்கிறீர்.